under review

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 6

From Tamil Wiki
சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 6

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 6 (2023), சிற்றிலக்கிய நூல்களின் தொகுப்பு. இதனைத் தொகுத்தவர் ச.வே. சுப்பிரமணியன். மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தொகுதி 6-ல், 50 உலா இலக்கிய நூல்கள் இடம் பெற்றன.

பிரசுரம், வெளியீடு

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் சிலவற்றின் தொகுப்பான சிற்றிலக்கியக் களஞ்சியங்கள் நூல், ஆறு தொகுதிகளாக வெளிவந்தது. சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 6, 50 உலா இலக்கிய நூல்களின் தொகுப்பு. ஏப்ரல், 2023-ல் இந்நூல் வெளியானது. மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் இவற்றைத் தொகுத்தளித்தார்.

உள்ளடக்கம்

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 6-ல், சிற்றிலக்கிய அறிமுகம், சிற்றிலக்கியங்களின் பட்டியல், உலா இலக்கியங்கள் பற்றிய அறிமுகம், அதன் இலக்கணம், வகைமைகள், உலா நூல்களின் பாடுபொருள், பிற இலக்கியங்களில் உலா பற்றிய குறிப்புகள், உலா இலக்கிய நூல்களின் ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள், நூல் விளக்கக் குறிப்புகள் இடம்பெற்றன. இவற்றுடன் 50 உலா இலக்கிய நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் தமிழில் வெளியான உலா இலக்கிய நூல்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

உலா இலக்கியங்கள்

கீழ்க்காணும் 50 உலா இலக்கிய நூல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றன.

  • திருக்கயிலாய ஞான உலா
  • குலோத்துங்க சோழன் உலா
  • விக்கிரம சோழன் உலா
  • இராசராச சோழன் உலா
  • சங்கர ராசேந்திர சோழன் உலா
  • காளமேகப் புலவர் பாடிய திருஆனைக்கா உலா
  • மதுரைச் சொக்கநாதருலா
  • வாட்போக்கி என்னும் இரத்தினகிரி உலா
  • சிலேடை உலா
  • சேயூர் முருகன் உலா
  • திருப்பூவணநாதருலா
  • திருவாரூருலா
  • ஆனந்தக் கூத்தன் உலா
  • மயிலத்து உலா
  • செப்பறைக் கனகசபைநாதன் உலா
  • ஸ்ரீ சந்திரசேகரேந்திரர் உலா
  • குலசை உலா
  • திருச்செந்தியுலா
  • திருச்செந்தூர் உலா
  • கடம்பர் கோயில் உலா
  • திருக்கழுக்குன்றத்து உலா
  • திருக்காளத்தி நாதருலா
  • சங்கரலிங்க உலா
  • பலபட்டடைச் சொக்கநாதபிள்ளை இயற்றிய தேவையுலா
  • திருக்குற்றால நாதருலா
  • திருமயிலை உலா
  • தில்லை வளாகம் ஸ்ரீ வீரகோதண்டராமஸ்வாமி உலா
  • திருக்குவளை ஸ்ரீ தியாகராஜஸ்வாமி உலா
  • திருக்கீழ்வேளுரூலா
  • திருத்தணிகை உலா
  • திரு இலஞ்சி முருகன் உலா
  • புதுவை உலா
  • தருமை உலா
  • திருவேங்கடவுலா
  • அப்பாண்டை நாதர் உலா
  • தஞ்சைப் பெருவுடையாருலா
  • குன்றக்குடிச் சண்முகநாதருலா
  • சுந்தரர் உலா
  • திருக்கடவூருலா
  • திருவிடைமருதூார் உலா
  • மயூரகிரி உலா
  • திருக்குறுங்குடி அழகியநம்பி உலா
  • கொடுமளம்பதி ஞான உலா
  • தில்லையுலா
  • செப்பறை உலா
  • காமராசர் உலா
  • புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் உலா
  • கலைஞர் உலா
  • பொன்னுசாமி உலா
  • முஹம்மது காசிம் உலா

மதிப்பீடு

சிற்றிலக்கியங்களில் ஒன்றான உலா இலக்கிய நூல்கள் சிலவற்றின் தொகுப்பாக சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 6 அமைந்துள்ளது. தமிழின் தொன்மையான, தற்போது அச்சில் இல்லாத குறிப்பிடத்தகுந்த சில உலா இலக்கிய நூல்களும், இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சில புதிய உலா நூல்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமிழாய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் எளிதில் பயன்படும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

  • சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி - 6, உலா இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஏப்ரல், 2023.


✅Finalised Page