under review

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-3

From Tamil Wiki
சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-3

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 3 (2015), சிற்றிலக்கிய நூல்களின் தொகுப்பு. இதனைத் தொகுத்தவர் ச.வே. சுப்பிரமணியன். மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தொகுதி 3-ல், 44 கலம்பக இலக்கிய நூல்கள் இடம் பெற்றன.

பிரசுரம், வெளியீடு

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் சிலவற்றின் தொகுப்பான சிற்றிலக்கியக் களஞ்சியங்கள் நூல், ஆறு தொகுதிகளாக வெளிவந்தது. சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 3, 44 கலம்பக இலக்கிய நூல்களின் தொகுப்பாகும். டிசம்பர், 2015-ல் இந்நூல் வெளியானது. மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் இவற்றைத் தொகுத்தளித்தார்.

உள்ளடக்கம்

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 3-ல் சிற்றிலக்கிய அறிமுகம், சிற்றிலக்கியங்களின் பட்டியல், கலம்பக இலக்கியங்கள் பற்றிய அறிமுகம், அதன் இலக்கணம், வகைமைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் 44 கலம்பக இலக்கிய நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் விளக்கக் குறிப்புகள், பாட்டு முதற்குறிப்பு அகராதி போன்றவையும் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்பில் 20-ம் நூற்றாண்டு வரை தோன்றிய கலம்பக இலக்கிய நூல்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

கலம்பக இலக்கியங்கள்

கீழ்க்காணும் 44 கலம்பக இலக்கியங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றன.

  • நந்திக் கலம்பகம்
  • ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
  • திருவரங்கக் கலம்பகம்
  • திருக்கலம்பகம்
  • திருப்பாதிரிப் புலியூர் கலம்பகம்
  • தில்லைக் கலம்பகம்
  • திருவாமாத்தூர்க் கலம்பகம்
  • ஞான விநோதன் கலம்பகம்
  • மதுரைக் கலம்பகம்
  • காசிக் கலம்பகம்
  • திருவெங்கைக் கலம்பகம்
  • திருஅருணைக் கலம்பகம்
  • திருச்செந்திற் கலம்பகம்
  • புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம்
  • திருக்காவலூர்க் கலம்பகம்
  • வாட்போக்கிக் கலம்பகம்
  • புதுவைக் கலம்பகம்
  • நெல்லைக் கலம்பகம்
  • திருவேங்கடக் கலம்பகம்
  • திருவெண்ணெய்க் கலம்பகம்
  • நசரைக் கலம்பகம்
  • திருவிடைமருதூர்க் கலம்பகம்
  • அழகர் கலம்பகம்
  • திருக்கழுக்குன்றக் கலம்பகம்
  • திருவொற்றியூர்க் கலம்பகம்
  • சீகாளத்திக் கலம்பகம்
  • வீரமாமுனிவர் கலம்பகம்
  • திருக்கண்ணப்புரக் கலம்பகம்
  • மதீனக் கலம்பகம்
  • குன்றக்குடிக் கலம்பகம்
  • குமரக்கோட்டக் கலம்பகம்
  • மகிழ்மாக் கலம்பகம்
  • கச்சிக் கலம்பகம்
  • பேரைக் கலம்பகம்
  • கண்ணப்பர் கலம்பகம்
  • கோவைக் கலம்பகம்
  • திருப்போரூர் வேம்படி விநாயகர் கலம்பகம்
  • திருச்சிற்றம்பல தேசிகர் கலம்பகம்
  • திருமுருகன் கலம்பகம்
  • திருஞானசம்பந்தர் கலம்பகம்
  • திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் கலம்பகம்
  • நவநீதிகிருட்டிணன் கலம்பகம்
  • திருமயிலாசலக் கலம்பகம்
  • குறுக்குத்துறை கலம்பகம்

மதிப்பீடு

சிற்றிலக்கியங்களில் ஒன்றான கலம்பக இலக்கியங்களின் தொகுப்பாக சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 3 அமைந்துள்ளது. தமிழின் குறிப்பிடத்தகுந்த கலம்பக நூல்கள் பலவும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமிழாய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் பயன்படும் எளிதில் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

  • சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-2: கலம்பக இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: டிசம்பர், 2015.


✅Finalised Page