under review

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-1

From Tamil Wiki
சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-1

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 1 (2015), சிற்றிலக்கிய நூல்களின் தொகுப்பு. இதனைத் தொகுத்தவர் ச.வே. சுப்பிரமணியன். மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தொகுதி 1-ல், 51 சதக இலக்கிய நூல்கள் இடம் பெற்றன.

பிரசுரம், வெளியீடு

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் சிலவற்றின் தொகுப்பான சிற்றிலக்கியக் களஞ்சியங்கள் நூல், ஆறு தொகுதிகளாக வெளிவந்தது. முதல் தொகுதியான 51 சதக இலக்கிய நூல்களின் தொகுப்பு, சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 1 என்ற தலைப்பில் 2015-ல் வெளிவந்தது. மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் இவற்றைத் தொகுத்தளித்தார்.

உள்ளடக்கம்

சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 1-ல் சிற்றிலக்கிய அறிமுகம், சிற்றிலக்கியங்களின் பட்டியல், சதக இலக்கியங்கள் பற்றிய அறிமுகம் ஆகியன இடம் பெற்றன. இவற்றுடன் 51 சதக இலக்கியங்களின் மூலம் தொகுக்கப்பட்டுள்ளது. நூல் விளக்கக் குறிப்புகள், பாட்டு முதற்குறிப்பு அகராதி போன்றவையும் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்பில் 200-க்கும் மேற்பட்ட சதக இலக்கிய நூல்களின் பட்டியல் உள்ளது.

சதக இலக்கியங்கள்

கீழ்க்காணும் 51 சதக இலக்கியங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றன.

  • மாணிக்கவாசகரின் திருச்சதகம்
  • கார் மண்டல சதகம்
  • பாண்டி மண்டல சதகம்
  • சோழமண்டல சதகம்
  • கொங்கு மண்டல சதகம்
  • தொண்டை மண்டல சதகம்
  • திருத்தொண்டர் சதகம்
  • அறப்பளீசுர சதகம்
  • .அண்ணாமலையார் சதகம்
  • அருணாசல சதகம்
  • அவையாம்பிகை சதகம்
  • கயிலாசநாதர் சதகம்
  • செயங்கொண்டார் சதகம்
  • குருவாயூரப்பன் சதகம்
  • மநுநீதி சதகம்
  • கோகுல சதகம்
  • வடவேங்கடநாராயண சதகம்
  • குருநாத சதகம்
  • குமரேச சதகம்
  • தண்டலையார் சதகம்
  • கோமதியம்பிகை சதகம்
  • சிவகுரு சதகம்
  • மெய்கண்ட வேலாயுத சதகம்
  • கோவிந்த சதகம்
  • எம்பிரான் சதகம்
  • திருவேங்கட சதகம்
  • சுமதி சதகம்
  • தில்லை சிவகாம சுந்தரி சதகம்
  • அவிநாசி கருணாம்பிகை சதகம்
  • ஸ்ரீதேவி கருமாரியம்மன் சதகம்
  • நடராச சதகம்
  • வேதநாயகியம்மன் சதகம்
  • நம்பிச் சதகம்
  • தணிகைவேள் சதகம்
  • அமல குரு சதகம்
  • பாரத தேச சதகம்
  • அகஸ்தியர் சதகம்
  • பாஸ்கர சதகம்
  • வைராக்கிய சதகம்
  • வடிவேல் சதகம்
  • வேலாபுரி கறுப்பண்ண சாமி சதகம்
  • நாராயண சதகம்
  • நாகூரார் சதகம்
  • நாகநாதக் கடவுள் சதகம்
  • இராமாயண சதகம்
  • மகாபாரத சதகம்
  • அன்னைத் திருச்சதகம்
  • திருப்பதச் சதகம்
  • முருகன் திருச்சதகம்
  • தசாங்க சதகம்
  • தில்லைக் கற்பகவிநாயகர் சதகம்

மதிப்பீடு

சிற்றிலக்கியங்களில் ஒன்றான சதக இலக்கியங்களின் தொகுப்பாக சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 1 அமைந்துள்ளது. தமிழாய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் பயன்படும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை

  • சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-1: சதக இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஜூன் 2015.


✅Finalised Page