under review

சதக இலக்கிய நூல்கள்

From Tamil Wiki

சதகம், தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. தமிழின் அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, நூறு பாடல்களால் பாடப்படுவதே சதகம்.

சதக நூல்கள் பட்டியல்

பொ.யு. பனிரெண்டாம் நூற்றாண்டு தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு வரை, பல்வேறு வகையிலான சதக நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் சில...

எண் நூல்கள் ஆசிரியர் காலம் (பொ.யு. நூற்றாண்டு)
1 அகத்தீசர் சதகம் குணங்குடி மஸ்தான் சாகிபு 19
2 அண்ணாமலைச் சதகம் திருச்சிற்றம்பல நாவலர் 19
3 அர்ச் தேவமாதா சதகம் பொன்னுச்சாமி முதலியார் 19
4 அரபிச் சதகம் அப்துல் ரகுமான் 19
5 அருகுகல சதகம் சபாபதி முதலியார் 19
6 அவிநாசிக் கருணாம்பிகை சதகம் வாசுதேவ முதலியார் 19
7 அவையாம்பிகை சதகம் கிருஷ்ணையர் 19
8 அறப்பளீசுர சதகம் அம்பலவாணக் கவிராயர் 18
9 இயேசுநாதர் சதகம் ஆணல்ட் சதாசிவம்பிள்ளை 19
10 இராமலிங்க சதகம் சங்கரமூர்த்திப் புலவர் 19
11 இராமாயண சதகம் முருகேசச் செட்டியார் 19
12 இலக்குமி காந்த சதகம் சீனிவாச ஐயர் 19
13 இறசூல் சதகம் அப்துல் காதர் லெப்பை 20
14 ஈழ மண்டல சதகம் பிள்ளைப் புலவர் 19
15 உமாயேசுர சதகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
16 எதிராஜ சதகம் இராமானுஜ நாவலர் 19
17 எம்பிரான் சதகம் கோபால கிருட்டிணதாசர் 18
18 கஞ்சகிரி சித்தேவர் சதகம் அனந்த நாராயண சர்மா 19
19 கயிலாசநாதர் சதகம் சிதம்பரவாணர் 18
20 கந்த புராணச் சதகம் முத்துக்குமரதாசர் 20
21 கழுகாசல சதகம் சண்முகம் பிள்ளை 19
22 கறுப்பண்ணசாமி சதகம் இராமசாமி கவிராயர் 19
23 காந்தி சதகம் சுந்தர முதலியார் 20
24 கார் மண்டல சதகம் ஆறைகிழார் 12
25 கானாட்டுச் சதகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
26 குமரேச சதகம் குருபரதாசர் 18
27 குருநாத சதகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
28 குருநாதர் சதகம் கருணையானந்த சுவரமி காலம் அறிய இயலவில்லை
29 கைலாசநாதர் சதகம் கைலாசநாதக் கவிஞர் 18
30 கொங்கு மண்டல சதகம் கார்மேகக் கவிஞர் காலம் அறிய இயலவில்லை
31 கொங்கு மண்டல சதகம் வாலசுந்தரக் கவிஞர் 20
32 கோகுல சதகம் அமிர்த கவிராயர் காலம் அறிய இயலவில்லை
33 கோதண்டராம சதகம் இராமதாசன் 19
34 கோவிந்த சதகம் நாராயண பாரதியார் 18
35 கோமதி அம்பிகை சதகம் திருக்கமலப் புலவர் 19
36 சங்கர சதகம் சுப்பிரமணிய செட்டியார் 20
37 சதானந்த சதகம் பொன்னுச்சாமி 19
38 சதுரலிங்க சதகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
39 சன்மார்க்க சதகம் வேதகிரி முதலியார் 19
40 சிங்காரவேலவர் சதகம் முத்துச்சாமிக் கவிராயர் 20
41 சிருங்கார சதகம் சுவாமிநாத தேசிகர் 17
42 சிவகாமி அம்பிகை சதகம் மாயூரம் கிருஷ்ணையர் 19
43 சிவகுரு சதகம் சிவானந்த சரஸ்வதி 20
44 சிவசங்கர சதகம் வீராசாமி உபாத்தியாயர் 19
45 சிற்சுகவாரிதிச் சதகம் மாதுருபூதம் பிள்ளை 19
46 சீறி விருத்தீஸ்வரர் சதகம் சுப்பராயப்புலவர் 20
47 சீருச்சதகம் மகமது சுல்தான் இபின் அகமது 19
48 சீனிவாச சதகம் அனந்த நாத சுவாமிகள் 19
49 சுமதீ சதகம் சமரபுரி முதலியார் 20
50 செயங்கொண்டார் சதகம் முத்தப்பச் செட்டியார் 18
51 செல்லாண்டியம்மன் சதகம் சக்கரபாணி ஆசாரியார் 19
52 சொக்கலிங்கக் கடவுள் தோத்திரச் சதகம் சோமசுந்தர சுவாமி 20
53 சோழமண்டல சதகம் வேளூர் ஆத்மநாத தேசிகர் 17
54 தசரத ராம சதகம் மாவிலிங்கப் பிள்ளை 19
55 தண்டலையார் சதகம் படிக்காசுப் புலவர் 17
56 தியாகராச சுவாமி சதகம் சோமசுந்தர தேசிகர் 20
57 திருச்செங்கோட்டு சதகம் கிருட்டிணசாமி முதலியார் 19
58 திருச்சதகம் சதாசிவம் பிள்ளை 19
59 திருச்செந்தில் செந்தில் விநாயக சதகம் தண்டபாணி அடிகள் 19
60 திருத்தொண்டர் சதகம் மலைக் கொழுந்து நாவலர் 20
61 திருப்போரூர்ச் சதகம் சபாபதி முதலியார் 19
62 திருப்போரூர் பிராண வாசல் சதகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
63 திருவேங்கட சதகம் நாராயண பாரதி 18
64 திருவருட் சதகம் மெய்யப்ப செட்டியார் 19
65 தில்லை நடராஜ சதகம் ஐயாத்துரை ஞானியார் 19
66 தில்லை சிவகாமசுந்தரி சதகம் ஐயாத்துரை ஞானியார் 19
67 தில்லைக் கற்பக விநாயகர் சதகம் சிதம்பரச் செட்டியார் 20
68 தொண்டை மண்டல சதகம் படிக்காசுப்புலவர் 17
69 தொண்டை மண்டல சதகம் வடலூர் ராமலிங்க சுவாமிகள் 17
70 நடராஜ சதகம் சிதம்பரநாத முனிவர் 18
71 நந்த மண்டல சதகம் மாத்ரு பூதையர் 19
72 நந்தீசர் சதகம் மஸ்தான் சாகிபு 19
73 நாவிலைச் சதகம் தண்டபாணி அடிகள் 19
74 நியாயச் சதகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
75 நீதிச் சதகம் சுவாமிநாத தேசிகர் 18
76 பர்த்ருஹரி நீதிச் சதகம் மாணிக்கவாசகம் பிள்ளை 20
77 பழனி ஆண்டவர் சதகம் சேலம் குமாரசாமி முதலியார் 20
78 பாண்டி மண்டல சதகம் ஐயன்பெருமாளாசிரியர் 20
79 பிரதான சதகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
80 புவனேசுவரி சதகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
81 பூவை சிங்கார சதகம் மனோன்மணி அம்மை 19
82 மதின மாநகர் தோத்திரச் சதகம் அகமது தாஸ் 20
83 மயிலாச சதகம் நமசிவாய நாவலர் 20
84 மழவைச் சிங்கார சதகம் மழவை மகாலிங்க ஐயர் 19
85 மநுநீதி சதகம் இராசப்ப உபாத்தியார் 18
86 மநுநீதி சதகம் வேதகிரி முதலியார் 19
87 மிழலை சதகம் சர்க்கரைப் புலவர் 17
88 மீனாட்சியம்மை சதகம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை 19
89 முகியித்தீன் சதகம் மஸ்தான் சாகிபு 19
90 முகையத்தீன் சதகம் அப்துல் காதர் பேகம்பூர் 19
91 முதல்வர் திருச்சதகம் பாவலர் பேகம் 20
92 முத்துக்குமர ஞானியார் சதகம் ஆதி மூலப் பெருமாள் 20
93 மெய் கண்ட வேலாயுத சதகம் அழகு முத்துப் புலவர் 19
94 வட வேங்கட நாராயண சதகம் நாராயணதாசர் 18
95 வடிவேலர் சதகம் முத்துச்சாமிக் கவிராயர் 19
96 வானமாமலை சதகம் தெய்வநாயகப் பெருமாள் 19
97 விஸ்வகுரு சதகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
98 விநாயகர் சதகம் இராமசாமி அய்யங்கார் 19
99 விரிஞ்சேசர் சதகம் சுப்பராய செட்டியார் காலம் அறிய இயலவில்லை
100 வீரபத்திரர் சதகம் சின்னத்தம்பி 19
101 வீரராகவ சதகம் வீரராகவதாசர் 20
102 வேலாயுத சதகம் கந்தப்பையர் 18
103 வைகுண்ட சதகம் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை காலம் அறிய இயலவில்லை
104 வைராக்கிய சதகம் சாந்தலிங்க சுவாமிகள் 18
105 வைராக்கிய சதகம் சுவாமிநாத தேசிகர் 17
106 ஸ்ரீமந் நடராஜாங்கித மகாபாரத சதகம் கிருஷ்ணமூர்த்தி ஐயர் 20

உசாத்துணை


✅Finalised Page