under review

சத்தி நாயனார்

From Tamil Wiki
சத்தி நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

சத்தி நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சத்தி நாயனார், சோழநாட்டைச் சேர்ந்த வரிஞ்சையூரில் வாழ்ந்தவர். சிவ பக்தர்.

தொன்மம்/சிவனின் ஆடல்

சத்தி நாயனார், சிவபெருமானின் அடியவர்களை இகழ்ந்து பேசுபவர்களது நாவினை அறுத்து விடும் தன்மையுடையவராக இருந்தார். சிவனை இகழ்ந்தால் அது சிவ அபராதம். சிவனது அடியார்களை இகழ்ந்தால் அது மேலும் பெரிய பாவச் செயல் என்று கருதினார். அதனால் அவ்வாறு பேசியவர்கள் யாராக இருப்பினும் அவர்களைது நாவினை தனது தண்டாயுதம் மற்றும் கத்தியால் இழுத்து அறுத்து விடுவார்.

அத்தகைய செயலை சிவனுக்குச் செய்யும் சீரிய சிவத்தொண்டாகக் கருதி சத்தி நாயனார் பன்னெடுங்காலம் செய்தார். இறுதியில் சிவனது திருவடியை அடைந்தார்.

கழல், சத்தி, வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

சிவ அபராதம் செய்பவர்களது நாவைத் துண்டித்தல்:

தீங்கு சொற்ற திருஇலர் நாவினை
வாங்க வாங்கும் தண்டாயத்தினால் வலித்து
ஆங்கு அயில் கத்தியால் அரிந்து அன்புடன்
ஓங்கு சீர்த் தொண்டின் உயர்ந்தனர்

சத்தி நாயனார் சிவன் திருவடி பெற்றது:

<poem> ஐயம் இன்றி அரிய திருப்பணி மெய்யினால் செய்த வீரத் திருத்தொண்டர் வையம் உய்ய மணிமன்றுள் ஆடுவார் செய்ய பாதத் திருநிழல் சேர்ந்தனர் </poem?

குருபூஜை

சத்தி நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், ஐப்பசி மாதம், பூச நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


✅Finalised Page