Disambiguation

குமரி (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

குமரி என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • குமரி ஆதவன்: குமரி ஆதவன் (செ. ஜஸ்டின் பிரான்சிஸ்) (பிறப்பு: ஆகஸ்ட் 4, 1970) தமிழக எழுத்தாளர். கவிஞர், பேச்சாளர், இதழாளர், பாடலாசிரியர், ஆவணப் பட இயக்குநர், நடிகர் எனப் பல களங்களில் செயல்பட்டார்
  • குமரி நில நீட்சி: குமரி நில நீட்சி (1997) நிலவியலாளர் சு. கி. ஜெயகரன் எழுதிய நூல். தமிழக பண்பாட்டு வரலாற்றில் 1940 முதல் முன்வைக்கப்பட்டு வரும் லெமூரியா அல்லது குமரிக்கண்டம் என்னும் கருத்தாக்கத்தை மறுத்து எழுதப்பட்டது
  • குமரி மலர்: குமரி மலர்: (1943-1983) ஏ. கே. செட்டியாரின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த இதழ். புனைவுகளை இவ்விதழ் வெளியிடவில்லை
  • குமரிக் கண்டம்: குமரிக் கண்டம் (1941) அல்லது கடல் கொண்ட தென்னாடு: கா. அப்பாத்துரை எழுதிய நூல். தமிழகத்தில் குமரிக்கண்டம், லெமூரியா பற்றிய நம்பிக்கையை உருவாக்கிய முதன்மை நூல்
  • குமரித்துறைவி: குமரித்துறைவி (2021) ஜெயமோகன் எழுதிய நாவல். மதுரை மீனாட்சியம்மன், போர்க்காலத்தில் கன்யாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் சிலகாலம் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது என்று சொல்லப்படும் செவிவழிச் செய்தியின் அடிப்படையில் எழுதப்பட்டது
  • குமரித்தோழன்: குமரித்தோழன் (ஜான்; ஜான் குமரித் தோழன்) (பிறப்பு: ஜூன் 5, 1967) கவிஞர், எழுத்தாளர். இதழாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர், நாடக ஆசிரியர், நாடக இயக்குநர், பாடலாசிரியர்
  • குமரிமைந்தன்: குமரிமைந்தன் (1937 - ஜூன் 3, 2021) தமிழறிஞர், பண்பாட்டு ஆய்வாளர், தமிழ்த்தேசியச் செயல்பாட்டாளர்


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.