under review

இஸ்லாமியச் சிந்து இலக்கிய நூல்கள்

From Tamil Wiki

தமிழின் பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகளுள் ஒன்று சிந்து. காப்பியங்கள் சிலவற்றையும், சிற்றிலக்கிய நூல்கள் பலவற்றையும் இயற்றிய இஸ்லாமியப் புலவர்கள், எளிய நடையும், வருணனை, உவமை போன்ற சிறப்புகளையும் கொண்ட சிந்து இலக்கிய நூல்கள் பலவற்றை இயற்றினர்.

சிந்து - பெயர்க் காரணம்

சிந்து இலக்கிய நூல்கள் மூன்று சீர்களைப் பெற்ற சிந்தடிகளால் அமையப் பெற்றதால் சிந்து என்று அழைக்கப்பட்டன. இவற்றில் காவடிச் சிந்து, நொண்டிச் சிந்து, வழிநடைச் சிந்து, கொலைச் சிந்து, நீதிச் சிந்து, விபத்துச் சிந்து எனப் பல வகைகள் உண்டு. இஸ்லாமியப் புலவர்கள் பலர் இத்தலைப்புகளில் பல நூல்களை இயற்றியுள்ளனர்.

இஸ்லாமியச் சிந்து இலக்கிய நூல்கள் பட்டியல்

எண் நூல் பெயர் ஆசிரியர் பெயர்
1 பூவடிச் சிந்து காளை அசனலிப் புலவர்
2 ஒலி நாயகர் அவதாரச் சிந்து மஹ்மூது இபுறாகிம் லெப்பை கலிபா சாகிபு
3 பயஹாம்பர் அவதாரப் பலவண்ணச் சிந்து மதுர கவி செய்கு அப்துல் காதிறு
4 நவநீத ரத்னாலங்காரச் சிந்து சீனிக்காதிறு முகிய்யதீன்
5 சிங்கார வழிநடைச் சிந்து செ.ஆ. சீனியாபில் ராவுத்தர்
6 காரண அலங்காரச் சிந்து சிக்கந்தர் ராவுத்தர்
7 வழிநடைச் சிந்து அப்துல்லா சாகிபு
8 பாசிப்பட்டணம் வழிநடைச் சிந்து சொர்ண கவி நயினார் முகம்மது பாவாப் புலவர்
9 திருக்காரணச் சிந்து முகம்மது பாவா லெப்பை
10 வழிநடைச் சிந்து முகைதீன் கனி
11 மெய்ஞ்ஞானச் சிந்து பீர் முகைதீன் புலவர்
12 வழிநடைச் சிந்து க.ப.மு. முகைதீன் பிச்சைப் புலவர்
13 அண்ணாமலைச் செட்டியார் அலங்கோலச் சிந்து முகம்மது அப்துல் கறீம் மஸ்தான் சாகிபு
14 அதிசய வெள்ளச் சிந்து ஆதம் சாகிபு
15 பெருமழைச் சிந்து அப்துல்லா சாகிபு
16 வடிவலங்காரச் சிந்து சிதம்பரம் உசைன் சாகிபு
17 விபரீதச் சிந்து சிதம்பரம் உசைன் சாகிபு
18 பலவர்ணச் சிந்து அப்பாஸ் ராவுத்தர்
19 எண்ணெய்ச் சிந்து மரைக்காயர் புலவர்
20 வழிநடைச் சிந்து அருள்வாக்கி அப்துல் காதிறு
21 வழிநடைச் சிந்து செய்கு அலாவுதீன்
22 கப்பற் சிந்து முகம்மது ஹம்ஸா லெப்பை
23 தறிச்சீர் கப்பற் சிந்து முகைதீன் பிச்சை
24 கப்பற் சிந்து பாட்சாப் புலவர்
25 நாகூர்ப்புகைரத வழிச் சிங்கார வொயிற் சிந்து செய்யிது முகம்மது அண்ணாவியார்
26 வழிநடைச் சிந்து சிந்துரத்னக் கவிராயர் இராவுத்தர் நெய்னா முகம்மது
27 அபுரூப ரெத்தின அலங்காரச் சிந்து பலர்
28 அறுபது கோடிச் சிந்து எம்.கே.ஏ. அப்துல் அஜீது
29 இன்னிசைச் சிந்து செ. மு.செய்யிது முகம்மது ஆலிம்
30 காரணச் சிந்து எம்.எல்.எம். புலவர்
31 மெய்ஞ்ஞான விகசிதா ரத்தினச் சிந்து சே.செ. முகம்மது ஷாஹு மஸ்தான் சாகிபு
32 ரத்தினச் சிந்து சே.செ. முகம்மது ஷாஹு மஸ்தான்
33 பத்தமடைத் தீக்கோல் அதிசயச் சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
34 சேலம் பிளேக் சிந்து ஜானியா சாகிபு
35 ரெயில் நடை பொட்டல்புதூர் கந்தூரி அலங்காரச் சிந்து சாகுல் ஹமீதுப் புலவர்
36 மியாங்கு தர்கா வழிநடைக் காரண அலங்காரச் சிந்து-முதல் பாகம் அப்துல் கறீம் சாகிபு
37 மியாங்கு தர்கா வழிநடைக் காரண அலங்காரச் சிந்து-இரண்டாம் பாகம் அப்துல் கறீம் சாகிபு
38 நாகூர் வழிநடைச் சிந்து நெய்னா முகம்மது
39 வழிநடை அலங்காரச் சிந்து அப்துல் ரகுமான்
40 இந்திய தேசாபிமான அலங்காரச் சிந்து என்.ஏ. அப்துல் லத்தீப்
41 ரஞ்சிதச் சிந்து இபுராம்ஷா ராவுத்தர்
42 விபரீத பிளேக் சிந்து ஆர். எம். காதர் முகிய்யதீன் ராவுத்தர்
43 ஓதன ராமச் சடோபுரச் சிந்து எஸ்.பி.கே. காதர் முகிய்யதீன் ராவுத்தர்
44 கடுங்கொலைச் சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
45 ஜெயரூபலாவணியச் சிந்து நூருத்தீன் முகம்மது ஜமால் லெப்பை ஆலிம் புலவர்
46 பரிமளத்தூர் அலங்கோலச் சிந்து எஸ்.வி. பீர்முகம்மது சாகிபு
47 மதுவிலக்கு மாமணிச் சிந்து பீ.க. பகுறுத் தீன் சாகிபு
48 காரணச் சிந்து காதர் சாகிபு நாவலர்
49 மேலப்பாளையம் சங்கத்து அலங்காரச் சிந்து முகம்மது அலி, ஆதம் சாகிபு
50 அருங்கொலைச் சிந்து முகம்மது அலிப் பாவலர்
51 வெள்ளம் பெருகின விபரீதச் சிந்து முகம்மது அலிப் பாவலர்
52 வழிநடை அலங்காரச் சிந்து முகம்மது காசிம்
53 ஏர்பாதி வழிநடை அலங்காரச் சிந்து முகம்மது மொஹிதீன் ராவுத்தர்
54 பொட்டல்புதூர் கந்தூரி மகத்துவச் சிந்து முகம்மது ஷேக் மியான்
55 கழுத்தரிந்த சிந்து ஏ.என்.வி. முகிய்யதின் அப்துல் காதர்
56 திருச்சி காவேரி வெள்ளச் சிந்து ஜன்னப்பா சாகிபு
57 நாசித்தூள் அலங்காரச் சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
58 கழுத்தரிந்த சிந்து ஏ.ஏ.ஹாதி
59 கதர் தேசபக்தர் புகழ் அலங்காரச் சிந்து டி.எம்.ஐன்னாப் சாகிபு
60 காந்தி தொண்டர் புகழ் அலங்காரக் காவடிச் சிந்து டி. எம். ஜன்னாப் சாகிப்
61 கர்ணகை நொண்டிச் சிந்து ஏ. இஸ்மாயில் கான் சாகிப்
62 மூளி அலங்காரி நொண்டிச் சிந்து ஏ. இஸ்மாயில் கான் சாகிப்
63 பிரான்மலை வழிநடைச் சிந்து பக்கிரி முகம்மது லெப்பை சாகிப்

உசாத்துணை


✅Finalised Page