under review

சிந்து இலக்கிய நூல்கள்

From Tamil Wiki

தமிழின் பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகளுள் ஒன்று சிந்து.

சிந்து இலக்கிய நூல்களின் பிரிவுகள்

சிந்து இலக்கியங்கள் காவடிச் சிந்து, வழிநடைச் சிந்து, நொண்டிச் சிந்து, வரலாற்றுச்சிந்து, கொலைச் சிந்து, விபத்துச் சிந்து, நீதிச் சிந்து எனப் பல்வேறு பிரிவுகளில் அமைந்தன.

சிந்து இலக்கிய நூல்களின் கூறு பொருள்

சிந்து நூல்கள், பக்தியை மட்டும் பாடு பொருளாகக் கொள்ளாமல் சமூக நிகழ்வுகளைப் பேசுபவையாகவும் அமைந்தன. கொலை, விபத்து, தர்க்கம், போட்டி, மருத்துவம், உடன்கட்டை ஏறிய விஷயம், வெள்ளச் சேதங்கள், ரயில் விபத்துக்கள் எனப் பல நிகழ்வுகள் சிந்து இலக்கிய நூல்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

சிந்து இலக்கிய நூல்கள் பட்டியல்

வரிசை எண் நூல் பெயர் இயற்றியவர்
1 கழுகுமலை சுப்பிரமணியர் காவடிச் சிந்து அண்ணாமலை ரெட்டியார்
2 ஸ்ரீ கதிர்காமநாதர் காவடிச் சிந்து கணபதியாபிள்ளை
3 வழிநடைச் சிந்து நாகமணிப்பிள்ளை, வே. க.
4 ஐகோர்ட்டின் அலங்காரச் சிந்து ஏகாம்பர முதலியார், செஞ்சி
5 ஐயாயிரச்சிந்துயென்னும் காலக்கியானகும்மி ஏகாம்பர முதலியார், செஞ்சி
6 செல்வப்பிள்ளை அகடவிகட கலியாணச் சிந்து முனிசாமி முதலியார், சிறுமணவூர்
7 1930 வருஷம் அர்ப்பசி மாதம் மழையினால் வந்த ரயில்வே பாலம் உடைந்த அபாய வெள்ளச் சிந்து குருஸாமிதாஸ், K.
8 கலியுகச் சிந்து முனிசாமி முதலியார், சிறுமணவூர்
9 வள்ளியம்மன் அலங்காரச் சிந்து முனிசாமி முதலியார், சிறுமணவூர்
10 தாரணவருஷத்திய வெள்ளம் திருநெல்வேலி கொட்டாய் பத்திய சிந்து முனிசாமி முதலியார், சிறுமணவூர்
11 உடன்கட்டையேறிய உத்தமிச் சிந்து முனிசாமி முதலியார், சிறுமணவூர்
12 நந்தன வருட சிந்து முனிசாமி முதலியார், சிறுமணவூர்
13 காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் உற்சவச் சிந்து முனிசாமி முதலியார், சிறுமணவூர்
14 1906 அக்டோபர் 20 சனிக்கிழமை மூடப்பட்ட அர்பத்நெட்டவுசின் அனியாயச் சிந்து முனிசாமி முதலியார், சிறுமணவூர்
15 ஸ்ரீமத் ராமாயண காவடிச்சிந்தென வழங்கும் இராமயண திருப்புகழ் சிந்து கிருஷ்ணசாமி கோனார்
16 டம்பாச்சாரியின்மீது மதனசுந்தரிபாடுகின்ற சிறப்புச் சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
17 கள்ளுகடை சிந்து என்னும் குடியர் சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
18 தென்னிந்தியா றெயில்வே என்னும் கர்னாடகப் புகைவண்டியின் சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
19 குள்ளத்தாரா சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
20 மதன சுந்தரி ஓரடிச் சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
21 தடிக்கழுதைப்பாட்டு ஆண்பிள்ளை வீண்பிள்ளைச் சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
22 நடேசர் சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
23 ஸ்ரீரங்கநாதர் சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
24 சிரவணபுரம் கெளமார மடாலயம் ஸ்ரீலஸ்ரீ இராமானந்த சுவாமிகள் அலங்காரச் சிந்து கந்தசாமி
25 சிரவணபுரம் கெளமார மடாலயம் ஸ்ரீலஸ்ரீ இராமானந்த சுவாமிகள் பிரதாபச் சிந்து கந்தசாமி
26 சிரவணபுரம் கெளமார மடாலயம் ஸ்ரீலஸ்ரீ இராமானந்த சுவாமிகள் அனுபந்தச் சிந்து கந்தசாமி
27 வீராம்பட்டணமென்னும் வீரராகவன்பட்டணம் வழிநடைச் சிந்து பொன்னுப்பிள்ளை, சாமி
28 குன்றக்குடி முருகர் காவடிச் சிந்து சிதம்பரச்செட்டியார்
29 சாப்டூர் ஜமீன் அத்திபுரியிலெழுந்தருளிய ஆனந்த மாரியம்மன் மீது வழிநடை மகுடச் சிந்து வெங்கடசாமி ஐயர், R.S.
30 ஆடிமாதம் அரசு சுற்றும் அலங்காரச் சிந்து கோவிந்தசாமி படையாக்ஷி
31 எட்டுகுடி முருகக்கடவுள் வரப்பிரசாத நொண்டிச் சிந்து மனோரஞ்சித நாயனார், M. K. P. M.
32 எட்டுகுடி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஸ்தோத்திர மஞ்சரி சிந்து கோவிந்தசாமி பிள்ளை, எஸ். கே.
33 குழந்தையம்பதியெனும் கட்டிக்குளம் இராமலிங்க சுவாமி பேரில் இயற்றிய ஆனந்தக்களிப்பு; செந்தமிழ்க் காவடிச் சிந்து குழந்தைவேலாச்சாரியர்
34 மயூரகிரிக் காவடிச் சிந்து அருணாசலஞ் செட்டியார்
35 திருச்செந்தூர் ஸ்தலம் தீர்த்தமூர்த்தி மான்மியம் அடங்கிய வழி நடைக் காவடிச் சிந்து கறுப்பசாமிக் கவிராயர்
36 மூங்கிலனை காமாக்ஷியம்மன் கீர்த்தனைச் சிந்து முத்து நாடார்
37 இராமாயணத் திருப்புகழ் காவடிச் சிந்து சபாபதிப்பிள்ளை, வெ. நா.
38 பள்ளபட்டி ஊரலங்கிர்தச் சிங்காரக்காவடிச் சிந்து முஹம்மது ஹனீபா ஸாஹிபு
39 ஸ்ரீ பழனி மாரியம்மன் வண்ணச் சிந்து பக்கிரியாபிள்ளை, K.
40 இந்துஸ்தான் காவடிச் சிந்து சிங்காரவேலு செட்டியார், K.
41 அருப்புக்கோட்டை என்று பேர் வழங்கும் திருநல்லூர், ஸ்ரீ வாழவந்தம்மன் தோத்திரக் கும்மிச் சிந்து சுப்பையாத் தாசர், வே.
42 எடப்பாடி கிராமத்தில் திருக்கோவில் கொண்டெழுந்தருளிய ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி பேரில் மூவடுக்கு ஒலிக்குரி சந்த மகுடப்பதிகமும் கும்பாபிஷேகச் சிந்தும் குமாரசாமி கவிஞர்
43 கோயமுத்தூர் ஜில்லா பெரிய தாராபுரத்துக்கடுத்த சின்னப்புத்தூரில் எழுந்தருளிய திருமலைசாமி மகிமைச் சிந்து முத்துசாமி செட்டியார்
44 திருநாகூர் காரணச் சிந்து வண்னச் சந்தக் கும்மி அம்பல மஸ்தான்
45 கும்மியும் நொண்டி சிந்தும் அருணாசலக்கவிராயர், கூ.
46 மெய்ஞ்ஞானச் சிந்து முகீய்யிதீன் புலவர், பீர்
47 புழல்மாரி விபத்து சிந்து ராஜாராம், S. A.
48 தீன்மார்க்க நோன்புச் சிந்து பாக்ஷா சாயபு, ஆ. பூ. வா.
49 கொடியலங்காரச் சிந்தும் சரவிளக்கலங்காரச் சிந்தும் கவிமதுரம் நெய்னாமுகம்மது புலவர்
50 ஸ்ரீகொப்புடையம்மன் மகிமைச் சிந்து ராமசாமிக் கவிராயர், V. S. R.
51 செங்கழணி புற்றுமாரி அம்மன் சிந்து பொன்னுசாமி பிள்ளை, பா.
52 பக்திரஸ பரிபாலன கீர்த்தனை லோகாம்பாள், T. S.
53 சிவகாசி மாநகர் அலங்காரச் சிந்து குருசாமி
54 திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக சுவாமிகள் சிந்து சதாசிவம்பிள்ளை, ஜி.
55 ஸ்ரீ ராஜகோபால சுவாமி தெப்பத் திருவிழாக் கும்மியும் கருடசேவைக் காட்சி அலங்காரச் சிந்தும் காவடிச் சிந்தும் கோபாலகிருஷ்ண அய்யர், அ. கி. ப.
56 திருவாலவாயென்னும் தென்மதுரை க்ஷேத்திரம் வடதிசைப் பொதிகைக்கிரிசரகம் ஸ்ரீதருமராஜமேரு தண்டபாணிமீது சங்கீதானந்தப் பாலபிஷேக செந்தமிழ்ச் சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
57 ஸ்ரீ சண்பகமூர்த்தி காவடிச் சிந்து அருணாசலத் தேவர், ப.
58 ஸ்ரீசுப்பிரமணியர் திருவிளையாட்டாகிய வளையற் சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
59 ஸ்ரீ சிவசுப்பிரமணியக் கடவுள்பேரில் அற்புத நூதனக் காவடிச் சிந்து குப்பாத் தேவர்
60 வீரையம்பதி முருகக்கடவுள்மீது அருட்காவடிச் சிந்து கருப்பையா
61 செந்தூர் ரெயில் வழி நடைச் சிந்து விசுவநாத பிள்ளை, K.
62 திருப்பரங்குன்றம் சுப்பிரமணியர் பேரில் வழிநடை காவடிச் சிந்து முத்துச்செல்லமாச்சாரி, க. யி.
63 அருளானந்த கீர்த்தனைச் சிந்து சின்னசாமி, S.
64 தத்தளித்து மீண்ட சிந்து முத்தையா பிள்ளை
65 ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி பக்திரஸக் கீர்த்தனங்களும் உற்சவக்காக்ஷி வழிநடை அலங்காரச் சிந்தும் பூரணம் பிள்ளை, S.
66 சைவசமய பரமாசாரிய சுவாமிகளாகிய திருஞானசம்பந்தசுவாமிகள் சிந்து கோவிந்தசாமி ஐயர், மு.
67 இந்துதேச சரித்திரச் சிந்து எதல்பட் கோனார், பால்
68 ஸ்ரீ வடிவேலன் வளையல் விற்றல் என்னும் வள்ளி சுயம்வர நூதனச் சிந்து இராமையா நாயனார், V. P. K.
69 காவடிச் சிந்து சங்கரலிங்க தாஸர்
70 ஐயனார் மகிமைச் சிந்து பீதாம்பர முத்துசாமி செட்டியார்
71 சுப்பிரமணியர் திருவிளையாடலென்னும் வளையற் சிந்து இராமஸ்வாமி பிள்ளை, க.
72 ஸ்ரீகோவிந்தசுவாமி தோத்திரச் சந்தச் சிந்து ஆறுமுக நாவலர்
73 குளுமாயி அம்மன் வரலாறும் ஒண்டிமுத்து சுவாமி வரலாறும் அடங்கிய அலங்காரச் சிந்து கோவிந்தசாமி ஐயர், மு.
74 அரிச்சந்திரன் திருப்புகழ் காவடிச் சிந்து சுப்பையா பிள்ளை, விரகாலூர்
75 அல்லியரசாணி திருப்புகழ் காவடிச் சிந்து சுப்பையா பிள்ளை, விரகாலூர்
76 கண்ணன் காவடிச் சிந்து ஸ்ரீ பிச்சுவய்யங்கார்
77 சொக்கலிங்கப்பெருமானது திருவிளையாடற் காவடிச் சிந்து திருப்புகழ் இராஜவடிவேல் தாஸர்
78 கொடுக்கூர் ஆறுமுகம் கொலைச் சிந்து பகவந்தறாவ், S. S.
79 சிறுமணவூர் முனிசாமி முதலியாராலியற்றிய கலியுகச் சிந்து முனிசாமி முதலியார்
80 ரக்தாக்ஷி வருஷ பலாபலப்படி காவேரி கொள்ளடத்தின் பிரளயம் கோயம்புத்துர், பவானி, சேலம், திருச்சி ஜில்லாவிலும் வெள்ளத்தால் மடிந்த விபரீத சிந்து சபாபதி தாசர், வெ. நா.
81 பவானி காவேரி நதிகளின் வெள்ளச் சிந்து அர்த்தனாரிசாமி செட்டியார், S. S. M.
82 சிந்துப் பாடல் அய்யம்பெருமாள் நாடார்
83 செந்தமிழ்ச் சிந்து சங்கரலிங்க நாடார், ச. சு.
84 பால்ய விவாகச் சிந்து நடராஜபிள்ளை, V.
85 கொள்ளிடத்தின் உடைப்பினால் ஏற்பட்ட பரிதாபச் சிந்து குமரவேல் நாயனார்
86 ஆடியீட்டு மோரீஸ் மணிலாக்கொட்டை அலங்காரச் சிந்து நாராயணசாமி கவுண்டர், மு.
87 நடை அலங்கார சிந்து கோவிந்தசாமி ஐயர், மு.
88 பூதவெள்ளச் சிந்து சபாபதி தாசர், வெ. நா.
89 பலவூர் வெள்ளச்சேத பரிதாப சிந்து ஆதிமூல நாயனார், அ.
90 சீர்காழி தாலூக்கா வடரெங்கம் கொள்ளிடவெள்ளக் கோலாகலச் சிந்து ரெங்கராஜா
91 காளயுக்தி வருஷ முதல் நேர்ந்த கடும்பஞ்சச் சிந்து மனோரஞ்சித நாயனார், M. K. P. M.
92 காவேரியாற்றில் வந்த வெள்ள விபரீத வேடிக்கைச் சிந்து முஹம்மதலி பாவலர், வா.
93 காவேரியாற்றின் வெள்ளச் சிந்து அர்த்தனாரிசாமி செட்டியார், S. S. M.
94 தீண்டாமை ஒழிப்புச் சிந்து குமரய்ய நாடார், வெ. ஆ.
95 திருச்சி மதுரை தென்மேற்கு கொள்ளிடங்காவேரி வெள்ள விபத்துச் சிந்து மாணிக்க நாயகர்
96 பெரும் வெள்ளப் பிரளயச் சிந்து வீறப்ப நாயக்கர், கு.
97 கூத்தாண்டையெனக் கூறும் இராவான் சிந்து பாலகவி பாஸ்கரன்
98 தீபாவளி புதுமைச் சிந்து கதிர்வேல் பிள்ளை, நா.
99 விருதுநகர் இந்து நாடார்களுக்குப் பாத்தியமான கச்சைகட்டி திருவண்ணாமலை நாடாரவர்கள் கட்டிவைத்த பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் வகையறா தேவஸ்தானம் ஆலயத் திருப்பணி யானை மரணச் சிந்து புகழ்கருப்பையா நாடார், மு.
100 பேருலக வாழ்வை தாழ்மையாக்கிய பிரவாகச் சிந்து ஜானகிராமய்யர், M. K.
101 சம்பூர்ண இராமாயணம் நொண்டிச் சிந்து பாலகிருஷ்ண பிள்ளை
102 அல்லி நகரம் வீரப்பய்யனார் அருட்காவடிச் சிந்து வெங்கடசாமி பாகவதர், S.
103 ஸ்ரீமஹா பாகவதம் என்னும் ஸ்ரீ கிருஷ்ணலீலா திருப்புகழ் காவடிச் சிந்து வடிவேலு செட்டியார், ப.
104 இராமாயண திருப்புகழ்ச் சிந்து கிருஷ்ணசாமி கோனார்
105 சிங்கார லாவணி சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
106 ரக்தாக்ஷி வருஷத்திய வெள்ளச்சேதச் சிந்து கோவிந்தஸாமி நாயுடு, R.
107 இராமாயணத் திருப்புகழ் காவடிச்சிந்து சண்முக முதலியார், க.
108 ஆனை மோக்ஷ சிந்து வெங்கிடாசலம் பிள்ளை, V. M. V.
109 ஸ்ரீமத் ராமாயண திருப்புகழ் லங்கா தகன காவடிச் சிந்து சபாபதிப்பிள்ளை, வெ. நா.
110 காவிரி ஆறு கரைபுரண்ட வெள்ளச் சிந்து விநாயகமூர்த்தி செட்டியார், கோ. ச.
111 சீர்காழி தாலுகா விபரீத வெள்ளத்தின் பரிதாபச் சிந்து இராமசாமிபிள்ளை, நா. லெ.
112 இராமாயணச் சிந்து பால் எதல்பட் கோனார்
113 திருச்சி காவேரி வெள்ளச் சிந்து ஜன்னபா சாய்பு, டி. எம்.
114 அலங்காரக் காவடிச் சிந்து முகம்மதலி பாவலர், வா.
115 கடுங்கொலை வேடிக்கைச் சிந்து சபாபதி தாசர், வெ. நா.
116 இலங்காதகனத் திருப்புகழ் காவடிச் சிந்து சுப்பையா பிள்ளை, விரகாலூர்
117 மன்னார்குடி ஜட்கா வண்டிக்கும் ரயில் வண்டிக்கும் தர்க்கம் மோட்டார் கார் வண்டி மத்திசம் வேடிக்கைச் சிந்து சுந்திரராசு, கோ.
118 பர்மா பாப்பு நொண்டிச் சிந்து ஜெயராஜ் சிங்கதிரி புவனேந்திர், க.
119 மகிமைச் சிந்து வெள்ளைச்சாமி செட்டியார்
120 கரிகாலி மாரியின் கலிகாலக் காக்ஷிச் சிந்துகள் ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
121 சிறுமணவூர் முனிசாமி முதலியார் அவர்களால் இயற்றிய கலியுகச் சிந்து முனிசாமி முதலியார்
122 மகாத்மா காந்தி உண்ணாவிரதச் சிந்து ஜன்னபா சாயபு, டி. எம்.
123 காயற்பட்டணம் ஷெய்கப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலீம் புலவர் அவர்கள் பாடிய சொர்க்க நீதி சிந்து ஷெய்கப்துல்காதிர் நயினார்லெப்பை ஆலீம்
124 ஆத்துமஞான பஞ்சரத்தின சிந்து செய்குமீறான் லெப்பை கலீபா சாஹிபுல் காதிரி
125 திருப்பாலைக்குடி பக்கீர் மஸ்தானொலி பேரில் அன்பு ததும்பிப் பாடிய அலங்காரச் சிந்து பொயிலா தாஸர், பூ.
126 காரண மகத்துவச் சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
127 ஆத்துமஞான பஞ்சரத்தின சிந்து செய்குமீறான் லெப்பை கலீபா சாஹிபுல் காதிரி
128 நவனீத முனாஜாத்துச் சிந்து முஹம்மதுக்கனிறாவுத்தர்
129 ஒலிநாயகரவதாரச் சிந்து மகுமூதிபுறாகீம் லப்பை கலிபாசாகிபுப் புலவர்
130 மகுதூஞ்சய்யது அகமது அவுலியா அவர்கள் மீது கப்பல் பாட்டு, கொடிச் சிந்து அலங்காரம், மழைக்கொம்மி வரிசை யிபுறாகி யுபாத்தியாயர்
131 சிக்கந்தாமலை துல்க்கருணை அவுலியா அவர்கள்பேரில் சந்தல லங்காரச் சிந்து பரிமளதாஸ்
132 மெய்ஞ்ஞான விகசிதக் கீர்த்தனையின் ரத்தினச் சிந்து முஹம்மது ஷாஹுமஸ்தான் சாகிபு, சே. செ.
133 பூவடிச் சிந்து காளை ஹசனலிப் புலவர்
134 தரிச்சீர் கப்பல் சிந்தும். வழிநடைச் சிந்தும் முஹிதீன் பிச்சைப் புலவர், க. ப. மு.
135 ரெங்கூன் பர்மாடாப்பு நொண்டிச் சிந்து இராமசாமி ஐயங்கார், சீ.
136 கலியுக அவதார புருஷராகிய மகாத்மா காந்தியின் சரித்திரத் திருப்புகழ்ச் சிந்து சடகோபன், இராம.
137 பக்த லீலாமிர்த திருப்புகழ் காவடிச் சிந்து வடிவேலு செட்டியார், ப.
138 வள்ளிச் சரித்திரச் சந்தச் சிந்து கனகசபாபதி பிள்ளை, S.A.
139 திருத்தணிகை ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருப்புகழ் காவடிச் சிந்து நாராயணசாமி பிள்ளை, வேலூர்
140 சதுரகிரி வழிநடை அலங்காரச் சிந்து அனந்தப்ப நாடார்
141 விசிஷ்டாத்வைத பரத்வ நிர்ணயச் சிந்து அவணண்டி செட்டியர், ர
142 நெல்லைச் சிந்து காமாட்சிநாதன் செட்டியார், வ, நா.
143 பாம்பன் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக வழி நடைச் சிந்து அப்துல்காதிறு ராவுத்தர், எம். கே. எம்.
144 அண்ணாமலையார் பொய்க்கால் சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
145 காவடிச் சிந்து குப்பாத்தேவர்
146 பச்சிலை புதுமைச் சிந்து ரெத்தினஸாமி நாயகர்
147 ஸ்ரீ மாரியம்மன் திருவருட்பதிகம் கும்மிச் சிந்து நாராயணசாமி பண்டிதர், M.
148 பிராணரசஷாமிர்த சிந்து மகாதேவ பண்டிதர், டி. ஆர்.
149 பழனியாண்டவர் சிந்து பாமாலை ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை
150 1930 மே 5 திங்கட்கிழமை இரவு பார்த்தோர் மனம் நடுங்க நடந்த பக்கோ படுகளச் சிந்து ஆசிரியர் பெயர் அறிய இயலவில்லை

உசாத்துணை


✅Finalised Page