under review

தமிழ் நாடகக் குழுக்கள்

From Tamil Wiki
Revision as of 20:14, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக் காட்டப்படுவது நாடகம். சங்க காலத்தில், தெருக்கூத்துகளாக நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. குன்றக் கூத்து, குறவைக் கூத்து, துணங்கைக் கூத்து போன்ற கூத்து வகைகள் நடிக்கப்பட்டன.

நாடகத்தின் தொன்மை

தொல்காப்பியம் "நாடக வழக்கினும்" என்று நாடகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம் நாடகக் கூறுகளுடன் நாடகக் காப்பியமாகவே திகழ்கிறது. அக்காலத்தில் வேத்தியல், பொதுவியல் என நாடகங்கள் இருவகைப்பட்டன. வேத்தியல் என்பது வேந்தனுக்காக நடித்துக்காட்டப்படுவது. பொதுவியல் என்பது மக்களுக்காக நடித்துக்காட்டப்படுவது.

பல்லவர்கள் ஆட்சிக் காலத்தில், மகேந்திர வர்ம பல்லவனின் 'மத்தவிலாச பிரகசனம்’ என்னும் நாடகநூல் மக்களிடையே புகழ்பெற்றிருந்தது. சோழர்கள் காலத்தில், ராஜராஜசோழனின் வெற்றியைப் போற்றும் வண்ணம் 'ராஜராஜ விஜயம்’ என்ற நாடகம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

நாடகத்தின் எழுச்சி

தமிழ் மண்ணின் மீது நிகழ்த்தப்பட்ட பல்வேறு படையெடுப்புகளால் நாடகத்திற்கான வரவேற்பு குறைந்திருந்தது. பின் பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் நாடகம் மீண்டும் வளரத் தொடங்கியது. குற்றாலக் குறவஞ்சி, முக்கூடற்பள்ளு, ராமநாடகக் கீர்த்தனை, நந்தனார் சரித்திரக் கீர்த்தனை போன்ற நாடகப் பனுவல்கள் மக்களால் வரவேற்கப்பட்டன.

டம்பாச்சாரி விலாசம்
பிரதாப சந்திர விலாசம்

மேடை நாடக முயற்சிகள்

அச்சிலிருந்து மேடைக்குச் சென்ற முதல் நாடகமாக 'டம்பாச்சாரி விலாசம்’ கருதப்படுகிறது. இதனை எழுதியவர் காசி விஸ்வநாத முதலியார். இந்த நாடகம் தான் முதன்முதலில் மேடையில் நடிக்கப்பட்ட சமூகநாடகமாகும். தொடர்ந்து விலாசம் என்று முடியும் தலைப்புகளில் பல நாடகங்கள் இயற்றப்பட்டன. 'பிரதாப சந்திர விலாசம்', 'ஊதாரிப்பிள்ளை விலாசம்' . ஸ்ரீ பிரகலாதன விலாசம் ஆகியன குறிப்பிடத்தக்கன. 'பிரதாப சந்திர விலாசம்' என்ற நாடகத்தை எழுதி பி.வி. இராமசாமி ராஜு என்பவர் அரங்கேற்றினார். தீய நட்பு, குடிப்பழக்கம் முதலானவற்றின் தீமையை உணர்த்துவதாக இந்த நாடகம் அமைந்திருந்தது. ஊதாரிப்பிள்ளை விலாசத்தை மரியதாஸ் எழுதியிருந்தார். செல்வந்தன் ஒருவன், பெண் மோகத்தால் தாசியிடம் பொருள் இழந்து பின் இயேசுவின் அருளால் திருந்தி வாழ்வதான கதை அமைப்புக் கொண்டது இந்நாடகம். 'ஸ்ரீ பிரகலாதன விலாசம்' என்பது பிரகலாதன் கதையைக் கூறும் புராண நாடகமாகும். இதனை புதுவை அரங்கநாதக் கவிராயர் இயற்றியிருந்தார்.

தாசில்தார் நாடகம்

சைதாபுரம் காசி விஸ்வநாத முதலியார், தாசில்தார் நாடகம் (1868), பிரம்ம சமாஜ நாடகம் (1877) போன்ற நாடகங்களையும் எழுதியுள்ளார். 'தாசில்தார் நாடகம்’ தாசில்தார், கணக்குப் பிள்ளை, மணியக்காரர் முதலானோரின் ஊழல்களை வெளிப்படுத்தியது. ராஜாராம் மோகன்ராயின் பிரம்ம ஞான சபையில் ஈடுபாடு கொண்டிருந்த காசி விசுவநாத முதலியார், 'பிரம்ம சமாஜ நாடகம்’ என்ற நாடகத்தை எழுதினார். உருவ வழிபாடு மறுப்பு, விதவை மறுமணம், பலகடவுள் மறுப்பு போன்றவற்றை அதில் அவர் வலியுறுத்தியிருந்தார்.

பார்ஸி பால சதாரம் - நாடகம்

1870-களில், தமிழகத்தின் பல நாடகங்களை பார்சி நாடகக் குழுவினர் அரங்கேற்றினர். அதனை அடியொற்றி தமிழ் நாடகக் கூறு முறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. புராண நாடகங்கள், வரலாற்று நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், தழுவல் நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், துப்பறியும் நாடகங்கள் எனப் பல வகைகளில் அவை வளர்ந்தன. பல்வேறு நாடகக் குழுக்கள் தோன்றி நாடகங்களை வளர்த்தன.

தமிழ் நாடகக் குழுக்களும் அதன் அமைப்பாளர்களும்

தமிழகத்தில் பல்வேறு நாடகக் குழுக்கள் இயங்கின. இன்றும் இயங்கி வருகின்றன. அக்குழுக்கள் சிலவற்றின் பட்டியல்:

நாடகக் குழுக்கள் அமைப்பாளர்கள்/ ஒருங்கிணைப்பாளர்கள்
சுகுண விலாச சபை பம்மல் சம்பந்த முதலியார்
மதுரை தத்துவ மீனலோசனி வித்வபால சபா;

சமரச சன்மார்க்க சபை

சங்கரதாஸ் சுவாமிகள்
ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி

பாலமீன ரஞ்சனி சங்கீத சபா

ஜெகந்நாத ஐயர்
எஃப். ஜி. நடேசய்யர் நாடகக் குழு

திருச்சி ரசிக ரஞ்சனி சபை

தஞ்சை சுதர்சன சபை

குமரகான சபை

சென்னை செக்ரட்டேரியட் பார்ட்டி

எஃப். ஜி. நடேசய்யர்
ஸ்ரீ கிருஷ்ண வினோத சபா;

கன்னையா நாடகக் கம்பெனி

இந்து வினோத சபா;

கும்பகோணம் வாணி விலாச சபை

கன்னையா
பால மனோகர சபா சதாவதானம் தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலர்
பால மனோகர சங்கீத சபை பொன்னுசாமிப் பிள்ளை
பாலாமணி அம்மாள் நாடகக் கம்பெனி பாலாமணி
ராஜாம்பாள் அண்ட் கம்பெனி

ஸ்ரீ குமார லட்சுமி விலாச சபா;

ராமானுகூல சபா

எம். கந்தசாமி முதலியார்
மதுரை நாகலிங்கம் செட்டியார் நாடக சபை; சுதந்திர நாடக சபை எம்.எஸ். முத்து கிருஷ்ணன்
என்.எஸ். கே. நாடக சபா என்.எஸ். கிருஷ்ணன்
மனமோகன நாடகக்கம்பெனி கோவிந்தசாமி ராவ்
மதுரை தேவி பால விநோத சங்கீத சபை நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை
தேவி நாடகசபா:

நாடகக் கழகம்

கே. என். ரத்தினம்
சனாதன சங்கீத சபை மணிமுத்து பாகவதர்
கிருஷ்ணன் நாடக சபா கே.ஆர். ராமசாமி
சரச வினோதனி நாடக சபா கிருஷ்ணமாச்சாரியா
மதுரை ஸ்ரீ பால சண்முகானந்த சபா;

டி.கே.எஸ். நாடகக் குழு

டி.கே. சண்முகம்
மங்கள பால கான சபா டி.கே. சம்பங்கி
சேவா ஸ்டேஜ் நாடகக் குழு எஸ்.வி. சகஸ்ரநாமம்
சரஸ்வதி கான சபா எம்.ஆர். ராதா
சக்தி நாடக சபா எஸ்.டி. சுந்தரம்
ராஜ ராஜேஸ்வரி நாடக சபை பி. கண்ணாம்பா
சுதர்சன நாடக சபா அருணாசல முதலியார்
எஸ். எஸ். ஆர். நாடக சபா எஸ். எஸ். ராஜேந்திரன்
விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப் சோ ராமசாமி
சிவாஜி நாடக மன்றம் சிவாஜி கணேசன்
யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ் குழு ஒய்.ஜி. பார்த்தசாரதி
நேஷனல் தியேட்டர்ஸ் ஆர். எஸ். மனோகர்
யதார்த்தா பென்னேஸ்வரன்
ஹெரான் தியேட்டர்ஸ் ஹெரான் ராமசாமி
அருணா ட்ராமாட்ரிக்ஸ்

ஐ. என். ஏ. தியேட்டர்

வி.எஸ். ராகவன்
சக்தி நாடக சபை டி.கே.கிருஷ்ண சாமி
ஸ்ரீராம பால கான சபா காரைக்குடி வைரம் அருணாசலம் செட்டியார்
ஸ்டேஜ் ஃபிரண்ட்ஸ் கோமல் சுவாமிநாதன்
விஸ்வசாந்தி விசு
கோபி தியேட்டர்ஸ் வி.கோபாலகிருஷ்ணன்
என்.எஸ்.என். தியேட்டர்ஸ் என்.எஸ். நடராஜன்
விஷ்ணுப்ரியா கோவை இராஜேந்திரன்
ஸ்டேஜ் இமேஜ் லியோ பிரபு
பிரியதரிஷினி நாடகக் குழு கணேஷ்
ராகினி கிரியேஷன்ஸ் கே.பாலசந்தர்
பூர்ணம் தியேட்டர்ஸ் பூர்ணம் விஸ்வநாதன்
கலா நிலயம் டி. என். சேஷாசலம்
சாந்தி நிகேதன் டி.எஸ்.சேஷாத்ரி
நவரசா நவரசா பாலா (பாலசந்திரன்)
வாணி கலா மந்திர் ஏ.ஆர்.எஸ். (ஏ.ஆர்.சீனிவாசன்)
பாலர் சபை;

திருச்சி பால பாரத சபை

புளியமாநகர் சுப்பாரெட்டியார்
பாலர் சபை என்.வி.சண்முகம்
சிறுவர் நாடகக் குழு எட்டயபுரம் இளைய இராஜா காசி விசுவநாத பாண்டியன்
ஸ்ரீ மங்கள பால கானசபா டி.பி.பொன்னுசாமிப்பிள்ளை
நேஷனல் தியேட்டர்ஸ் யு.ஏ.ஏ ஆர்.எஸ்.மனோகர்
யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் (யு.ஏ.ஏ.) ஒய்.ஜி. பார்த்தசாரதி/ ஒய். ஜி. மகேந்திரன்
நாடகப்ரியா எஸ்.வி.சேகர்
கிரேஸி ட்ரூப் கிரேஸிமோகன்
பரிக்‌ஷா ஞாநி
சக்தி

பல்கலை அரங்கம்

மௌனக் குறம்

மரப்பாச்சி நாடகக் குழு

அ.மங்கை
பெண்ணிய நாடகக் குழு பிரசன்னா ராமசாமி
கூத்துப்பட்டறை ந. முத்துசாமி
நிஜ நாடக இயக்கம்; கூத்துக் களரி மு.ராமசாமி
தன்னனானே நாடகக்குழு கே.ஏ.குணசேகரன்
ரவீந்திரன் டிராமா க்ரூப் கம்பெனி லிமிடெட், சிங்கப்பூர்;

மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்

ரவீந்திரன்
ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் காத்தாடி ராமமூர்த்தி
ஷ்ரத்தா சிவாஜி சதுர்வேதி, டி.டி.சுந்தரராஜன், பிரேமா சதாசிவம்
நவபாரத் தியேட்டர்ஸ் கூத்தபிரான்
ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் பாபி ரகுநாதன்
மனமோகன நாடகசபை தஞ்சை கோவிந்தசாமி ராவ்
காஞ்சிபுரம் ஸ்ரீ விஜய கந்தர்வ கானசபை வி.பி. ஜானகி அம்மாள்
ஸ்ரீ கணபதிகான சபை பி. இரத்தினம்பாள்
சமரச கான சபை வேதவல்லித் தாயார்
விஜய கந்தர்வ நாடகசபை விஜயலட்சுமி, கண்ணாமணி
ஸ்ரீமீனாம்பிகை நாடக சபை பி. இராஜத்தம்மாள்
மகாலஷ்மி லேடீஸ் டிராமா குரூப் பாம்பே ஞானம்
புளியம்பட்டி நாடகக்குழு பி. யு. சின்னசாமி (பி.யு. சின்னப்பா)
நவநீதி பாலகான சபை;

ஆலந்தூர் ஹிந்து பால விவேகாதாஸினி சபை

நாராயணசாமி செட்டியார்
ஆலந்தூர் அரங்க விலாச சபை;

தஞ்சை ஜகன்மோகன் நாடகக்குழு

அரங்கசாமி நாயுடு
தஞ்சை மனமோகன நாடகக் கம்பெனி நவாப் கோவிந்தசாமி ராவ்
மதுரை ஸ்ரீபாலகான சபை யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளை
ஜெய்பாலாஜி கிரியேஷன்ஸ் தேங்காய் சீனிவாசன்
ஆதி இந்து விநோத சபை வேலூர் தி. நாராயணசாமிப்பிள்ளை
ஓ.ஏ.கே.தேவர் நாடக மன்றம் ஓ.ஏ.கே. தேவர்
ஒரு விரல் தியேட்டர்ஸ் ஒருவிரல் கிருஷ்ணராவ்
அழகிரி நாடகமன்றம் காஞ்சி ரங்கமணி
கோபி தியேட்டர்ஸ்;

சக்தி நாடக சபை;

சிவாஜி நாடக மன்றம்;

திருவல்லிக்கேணி ஃபைன் ஆர்ட்ஸ்

ரங்கராமானுஜம்
தில்லை தியேட்டர்ஸ் ஜி. சகுந்தலா
திருமுருகன் ஸ்டேஜ் சங்கிலிமுருகன்
நடிகவேள் தியேட்டர்ஸ் ராதாரவி
மாலி ஸ்டேஜ் (துர்கா டிரமாடிக் அசோசியேஷன்ஸ்-நாடகமித்ரா) குடந்தை மாலி (என். மகாலிங்கம்)
மனோன்மணீயம் சுந்தரனார் நாடக மன்றம் டி.என்.சிவதாணு
முரசொலி நாடக மன்றம் செந்தாமரை
பத்மம் தியேட்டர்ஸ் மேஜர் சுந்தரர்ராஜன்
அசோகன் நாடக மன்றம்;

அமுதா கலை மன்றம்;

இளங்கோ நாடக மன்றம்

அசோகன்
எஸ்.வி.ஆர். ஸ்டேஜ் எஸ்.வி.ராமதாஸ்
மௌலி அண்ட் பிரண்ட்ஸ் மௌலி
ரத்னா ஸ்டேஜ் எல். தன்ராஜ்
ஸ்ரீலட்சுமி பாலகான சபா டி.கே.ராமச்சந்திரன்
லிட்டில் ஸ்டேஜ் ஏ.வி.எம். ராஜன்
வி.கே.ஆர் நாடக மன்றம் வி.கே.ராமசாமி
ஹம்ஸா ஸ்டேஜ் வில்லன் கண்ணன்
நவரத்னா விமலா ரமணி
கலா நிலயம்; ரஸிக ரங்கா மெரீனா
மகம் எண்டெர்பிரைஸஸ் மதுவந்தி
சென்னைக் கலைக் குழு பிரளயன்
தட்சிண பாரத நாடக சபா பாரதிமணி
சௌத் இந்தியன் தியேட்டர் சுப்புடு
குட்வில் ஸ்டேஜ் குழு கோவை பத்மநாபன்
நக்‌ஷத்திரா கோவை அனுராதா
சௌம்யா நாடகக் குழு டி.வி. ராதாகிருஷ்ணன்
அரங்கன் அரங்கம் எஸ். ரங்கநாதன் (ரங்கமணி)
கீதாஞ்சலி குழு அமிர்தம் கோபால்
அகஸ்டோ கிரியேஷன்ஸ் அகஸ்டோ (புருஷோத்தமன்)
பெர்ச் நாடகக் குழு ராஜீவ் கிருஷ்ணன்
கீதா ஸ்டேஜ்; நாடக அகாடமி ராது
நாடகமந்திர் தில்லை ராஜன்
மயன் தியேட்டர்ஸ் மணியன்
தலைக்கோல் ஆறுமுகம் வ.
வெளி வெளி ரங்கராஜன்
களரி மு. ஹரிகிருஷ்ணன்
மணல் மகுடி ச. முருகபூபதி
மாற்று நாடக இயக்கம்; நாடக சாலை கி. பார்த்திபராஜா
எம். ஆர். ஆர். தியேட்டர்ஸ் எம். ஆர். ராஜாமணி
யுனைடெட் விஷுவல்ஸ் டி.வி. வரதராஜன்
நாடகக்காரன் பாம்பே கண்ணன்
கலாமந்திர் பாம்பே சாணக்யா
பிரயத்னா ஸ்டேஜ் விவேக் ஷங்கர்
ஆப்டிஸ்ட் ஜீவா
அரங்கம் கலைக்குழு ராஜூ
கைசிகம், வெறியாட்டம் நாடகங்கள் சே. ராமானுஜம்
கூட்டுக் குரல் அ. ராமசாமி
மேலும் சில நாடகக் குழுக்கள்
மேஜிக் லாண்டர்ன்
தியேட்டர் கிளப்
சென்னைக் கலைக்குழு
கூட்டுக்குரல்கள்
மெட்ராஸ் பிளேயர்ஸ்
ஆழி
நாடக சங்கம்
வீதி நாடகக் குழு
முத்ரா
சுதேசிகள்
ஒத்திகை
தியேட்டர் லெப்ட்
தளிர் அரங்கு
துளிர்
அரங்கம்
ஜ்வாலா
யவனிகா
Audio Visual People
திருச்சி நாடக சங்கம்
சென்னைப் பல்கலை அரங்கம்
களம்
கூட்டுக்குரல்
ஆப்டிஸ்ட்

உசாத்துணை


✅Finalised Page