File:Being created.png: Difference between revisions

From Tamil Wiki
Line 41: Line 41:


சென்ற நூற்றாண்டின் வாழ்க்கையை தி.ஜா. நளபாகத்தைவிடவும் துல்லியமாக, விவரமாக மோகமுள்ளிலும் செம்பருத்தியிலும் அம்மா வந்தாளிலும் பதிவு செய்திருக்கிறார்.- எழுத்தாளர் சாரு நிவேதிதா
சென்ற நூற்றாண்டின் வாழ்க்கையை தி.ஜா. நளபாகத்தைவிடவும் துல்லியமாக, விவரமாக மோகமுள்ளிலும் செம்பருத்தியிலும் அம்மா வந்தாளிலும் பதிவு செய்திருக்கிறார்.- எழுத்தாளர் சாரு நிவேதிதா
அவரது புகழ் பெற்ற நாவல்களை விட உயிர்த்தேன், மலர் மஞ்சம், செம்பருத்தியெல்லாம் நன்னாருக்கும்.-சொல்வனம் பெட்டியில் எழுத்தாளர் அசோகமித்திரன்<ref>https://solvanam.com/2011/05/24/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a9%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%85/</ref>


=== உசாத்துணை ===
=== உசாத்துணை ===
[http://charuonline.com/blog/?p=6603 தி.ஜா என்ற மகாகலைஞன் -சாரு நிவேதிதா]<references />
[http://charuonline.com/blog/?p=6603 தி.ஜா என்ற மகாகலைஞன் -சாரு நிவேதிதா]<references />

Revision as of 11:16, 14 February 2022

செம்பருத்தி-தி.ஜானகிராமன்

'செம்பருத்தி' தஞ்சை மண்ணின் மணம் கமழும்  கிராமத்து சூழலில்,  சக மனிதர்கள்பால்  அன்பும், கருணையும், அற உணர்வும்  கொண்ட சட்டநாதன் என்ற மனிதனின் வாழ்க்கையை, அவனது கூட்டுக் குடும்பத்தை, அதில் உள்ள உறவுகளின் மன ஓட்டத்தை, ஆண் பெண் உறவுச்சிக்கல்களைச் சொல்லும் நாவல்.

உருவாக்கம்

செம்பருத்தி எழுத்தாளர் தி.ஜானகிராமன் 1968 சாவியில் தொடர்கதையாக எழுதி வெளிவந்தது.

கதைச்சுருக்கம்

இரண்டு அண்ணன்களுக்கு இளையவனான சட்டநாதனின் இளமை,நடுவயது மற்றும் முதுமையை  நாவல் தொட்டுச் செல்கிறது.  இளமையில்  பரஸ்பரம் காதல் கொண்ட பெண் அவனுக்கு  சின்ன அண்ணியாக நேர்கிறது. காலராவில் இறந்த சின்ன அண்ணன் விட்டுப்போன குடும்பத்தைச் சுமந்து கொண்டிருக்கும் அவனது தோளில் வாழ்ந்து கெட்ட பெரும்போக்கும் மனமும் உடைய பெரியண்ணனின் குடும்பச்சுமையும் கூடுதலாய் வந்து அமைகிறது.  இறப்பதற்கு முன் சிறிய அண்ணன் அவனுக்குப் பார்த்து வைத்திருந்த, எப்போதும் இரட்டை செம்பருத்தியத் தலையில் சூடும் புவனா செம்பருத்தியின் குளிர்ச்சியுடன் அவனுக்கேற்ற நற்றுணையாய் அமைகிறாள். தன் தன்னறத்தை கைவிடாமல் கருடாழ்வார் போலத் தன் குடும்பத்தைத் தாங்கி உயர்ந்து நிற்கிறார் சட்டநாதன்.

நிறைவற்று, அனைவரின்மீதும் வெறுப்பை உமிழ்ந்து தேளாகக் கொட்டும் பெரிய அண்ணி, அவன் மீதான காதலை மனதில் சுமந்து    ‘பார்த்துக்கொண்டிருந்தால்போதும்’ என்று அந்த வீட்டில் வசிக்கும்  சின்ன அண்ணி,  அனைவரையும் புரிந்து  கொண்டு அரவணைத்துச் சென்ற மனைவி  என்னும் மூன்று பெண்களின் குணாதிசயங்கள், குணமாறுபாடுகள் , காதல், காமம், பரிவு, பகை மற்றும் சட்டநாதன் தனது ஆன்மாவெனக் கருதிய பொதுவுடமைவாதி நண்பரின் வாழ்வும் மரணமும் அவன் வாழ்விலும் மனப்போக்கிலும்அக்குடும்பத்திலும்  ஏற்படுத்திய பாதிப்புகளை வெவ்வேறு காலகட்டங்களூடாகச் சொல்லும் இந்நாவல் 'கணவன் மனைவிக்கிடையே ஒளிவு மறைவும் தேவைதானோ? அர்த்தநாரீஸ்வரனாலேயே தன் இணையுடன் இரண்டறக் கலக்க முடியவில்லையே?' என்ற கேள்வியுடன் முடிகிறது.

கதை மாந்தர்

சட்டநாதன்

முத்துசாமி - வெளியே கடுமையான , உள்ளுக்குள் அன்பு நிறைந்த சின்ன அண்ணன்

பெரிய அண்ணன்- பெருஞ்செல்வ வாழ்க்கை வாழ்ந்து நொடித்து போனவர்

புவனா- சட்டநாதனின் மனைவி

சண்முகசுந்தரம்- சட்டநாதனின் மாமனார் இறைப்பற்றும் கருணையும் நிறைந்தவர்

குஞ்சம்மா -சிறிய அண்ணி

பெரிய அண்ணி- பெரிய அண்ணனின் மனைவி

ஆண்டாள்- அன்பும் பொறையும் நிறைந்தவர்,பெரிய அண்ணனின் காதலி

பாப்பா- சிறிய அண்ணன் மகள்

சீதாபதி-பொதுவுடமைவாதி, சட்டநாதனின் நண்பர்

இலக்கிய இடம், மதிப்பீடு

தி.ஜா வின் அதிகம் பேசப்படாத படைப்புகளில் ஒன்று செம்பருத்தி.

சட்டநாதனின் மனவோட்டம் மற்றும்  உரையாடல்கள் மூலம் கதையை நகர்த்திச் செல்லும் ஆசிரியர் கதையின் ஓட்டத்தினூடே ஏதோ ஒரு வரியில், ஒரு உரையாடல் துணுக்கில் ஒரு முக்கிய முடிச்சைப் பொதித்து வைக்கும் உத்தியைக் கையாள்கிறார்.சாதாரணமான கதையையும் அசாதாரணமான நுட்பங்களுடன் ஒரு கதைஞன் சொல்ல முடியும் என்பதற்குச் சிறந்த உதாரணம் இந்த நாவல்.

எழுத்தாளர் ஜெயமோகன் தன் தமிழ்நாவல்கள் விமரிசகன் சிபாரிசில் இந்நாவலை பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகளில் ஒன்றாக வகைப்படுத்துகிறார். [1]

சென்ற நூற்றாண்டின் வாழ்க்கையை தி.ஜா. நளபாகத்தைவிடவும் துல்லியமாக, விவரமாக மோகமுள்ளிலும் செம்பருத்தியிலும் அம்மா வந்தாளிலும் பதிவு செய்திருக்கிறார்.- எழுத்தாளர் சாரு நிவேதிதா

அவரது புகழ் பெற்ற நாவல்களை விட உயிர்த்தேன், மலர் மஞ்சம், செம்பருத்தியெல்லாம் நன்னாருக்கும்.-சொல்வனம் பெட்டியில் எழுத்தாளர் அசோகமித்திரன்[2]

உசாத்துணை

தி.ஜா என்ற மகாகலைஞன் -சாரு நிவேதிதா

File history

Click on a date/time to view the file as it appeared at that time.

Date/TimeThumbnailDimensionsUserComment
current06:03, 25 January 2022Thumbnail for version as of 06:03, 25 January 2022373 × 381 (5 KB)Madhusaml (talk | contribs)Top icon for page being created

More than 100 pages use this file. The following list shows the first 100 pages that use this file only. A full list is available.

View more links to this file.