under review

ரா. செந்தில்குமார்: Difference between revisions

From Tamil Wiki
(Inserted READ ENGLISH template link to English page)
(changed single quotes)
Line 20: Line 20:
ரா.செந்தில்குமாரின் கதைகள் அதிகமும் ஜப்பானியப் பின்புலம் கொண்டவை. ஜப்பானிய வாழ்க்கையை தமிழ் பண்பாட்டுப் பார்வையில் அணுகுகிறார். ஜப்பானிய வாழ்க்கை சார்ந்த செய்திகளை குறியீடுகளாகக் கொண்டு தமிழ் வாழ்க்கையை ஆராய்கிறார். தமிழர்கள் உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் வேற்றுப்பண்பாடுகளை தமிழ் இலக்கியம் எதிர்கொள்வதற்கான உதாரணப்படைப்புகள் இவை. தமிழின் புலம்பெயர் எழுத்து (Diaspora Literature) வகைமையில் இவை முக்கியமானவை.

[[எம்.கோபாலகிருஷ்ணன்|எம். கோபாலகிருஷ்ணன்]] "உலகெங்கும் கால்கொண்டிருக்கும் இன்றைய புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலர், தம் அயல்நில வாழ்வின் அனுபவங்களை தமிழ் கதைப்புலத்துக்கு வலு சேர்க்கும் புனைவுகளாக மாற்றித் தருகிறார்கள். அந்த வரிசையில் ரா. செந்தில்குமாரின் ‘இசூமியின் நறுமணம்’ தொகுப்பை சிறிதும் தயக்கமின்றி சேர்க்கலாம்" என்று செந்தில்குமாரை பற்றி குறிப்பிடுகிறார்.
[[எம்.கோபாலகிருஷ்ணன்|எம். கோபாலகிருஷ்ணன்]] "உலகெங்கும் கால்கொண்டிருக்கும் இன்றைய புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலர், தம் அயல்நில வாழ்வின் அனுபவங்களை தமிழ் கதைப்புலத்துக்கு வலு சேர்க்கும் புனைவுகளாக மாற்றித் தருகிறார்கள். அந்த வரிசையில் ரா. செந்தில்குமாரின் 'இசூமியின் நறுமணம்’ தொகுப்பை சிறிதும் தயக்கமின்றி சேர்க்கலாம்" என்று செந்தில்குமாரை பற்றி குறிப்பிடுகிறார்.
== நூல்கள்  ==
== நூல்கள்  ==
====== சிறுகதை தொகுதி ======
====== சிறுகதை தொகுதி ======
Line 26: Line 26:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.jeyamohan.in/142824 ரா. செந்தில்குமார் பற்றி ஜெயமோகன்]
* [https://www.jeyamohan.in/142824 ரா. செந்தில்குமார் பற்றி ஜெயமோகன்]
* [http://www.yaavarum.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/?fbclid=IwAR0TIXpAu9-yK_GbNN9IvqBL6WOr_70ryl8Oj0JWt5ABAE6ZDa7Af_qEvM4 ‘இசூமியின் நறுமணம்’ பற்றி நாஞ்சில்நாடன் எழுதிய முன்னுரை]
* [http://www.yaavarum.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/?fbclid=IwAR0TIXpAu9-yK_GbNN9IvqBL6WOr_70ryl8Oj0JWt5ABAE6ZDa7Af_qEvM4 'இசூமியின் நறுமணம்’ பற்றி நாஞ்சில்நாடன் எழுதிய முன்னுரை]

*[https://manalkadigai50.blogspot.com/2021/04/blog-post_24.html?m=1 ‘இசூமியின் நறுமணம்’ பற்றி எம். கோபாலகிருஷ்ணன் நூல் விமர்சனம்]
*[https://manalkadigai50.blogspot.com/2021/04/blog-post_24.html?m=1 'இசூமியின் நறுமணம்’ பற்றி எம். கோபாலகிருஷ்ணன் நூல் விமர்சனம்]

* [https://www.manavelipayanam.blogspot.com ரா. செந்தில்குமார் தளம்]
* [https://www.manavelipayanam.blogspot.com ரா. செந்தில்குமார் தளம்]

Revision as of 09:06, 23 August 2022

To read the article in English: Ra. Senthilkumar. ‎

ரா.செந்தில்குமார்
ரா.செந்தில்குமார்

ரா. செந்தில்குமார் (1976) தமிழில் சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதி வரும் எழுத்தாளர். ஜப்பானில் வசித்து வரும் செந்தில்குமார் புதிய கதைக்களங்களிலும், பண்பாட்டு பின்புலங்களில் ஏற்படும் உராய்வுகளையும் கதையாக்குகிறார். தமிழகத்தை கதைக்களமாக கொண்ட கதைகளில் நிலப்பிரபுத்துவ காலத்து ஆளுமைகளின் வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பிறப்பு, கல்வி

செந்தில்குமார் ஜூலை 23, 1976 அன்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பி.எஸ். ராமலிங்கம்-ரெத்னா இணையருக்கு மகனாக பிறந்தார். பள்ளி இறுதி வரை மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். பூண்டி ஸ்ரீபுஷ்பம் கல்லூரியில் இளங்கலை கணிப்பொறியியலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை கணிப்பொறியியலும் கற்றார்.

தனி வாழ்க்கை

2004ல் காயத்ரியை மணந்தார். கவின் என்று ஒரு மகனும் காவியா என்று ஒரு மகளும் உள்ளனர். தற்போது ஜப்பானில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

கல்லூரி காலத்தில், சிறிது காலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த செயல்பாடுகளிலும், தொடர்ந்து திராவிட இயக்கம் சார்ந்து சில அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

முழுமதி கல்வி அறக்கட்டளை மூலம் தமிழகத்திலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவி, தமிழக ஈழத் தமிழர் முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவிகளை மேற்கொண்டு வருகிறார். பின்தங்கிய கிராமங்களிலுள்ள அரசு பள்ளிகளை தத்தெடுத்து மாதிரி பள்ளிகளாக்க உதவிகள் செய்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

இசூமியின் நறுமணம்
இசூமியின் நறுமணம்

மாணவராக இருக்கையில் இவரது முதல் படைப்பு கோகுலம் இதழில் சிறுகதையாக வெளியானது. பள்ளி காலத்தில் சிட்டுக்குருவி என்னும் தலைப்பில் கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார்.   தொடர்ந்து ஜெயகாந்தன் மூலம் தமிழிலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டு தொடர் வாசிப்பு மேற்கொண்டார்.   தமிழக இலக்கியவாதிகளான எஸ். ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், ஜெயமோகன், லீனா மணிமேகலை போன்றோரை ஜப்பானுக்கு அழைத்து இலக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக "ஜெயமோகன், தி.ஜானகிராமன், வண்ணதாசன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி மற்றும் லியோ டால்ஸ்டாயை" குறிப்பிடுகிறார்.

"இசூமியின் நறுமணம்" சிறுகதை தொகுப்பு 2021ல் வெளியானது. பன்னிரு கதைகளில் நான்கு கதைகள் நீங்கலாக மற்றதெல்லாம் ஜப்பானிய சூழலில் எழுதப்பட்டவை. அவற்றுள் நடைமுறை, அலுவலகம், குடும்பம், வாழ்க்கை, மாநகர இயக்கங்கள் மற்றும் ஜப்பானிய தேசத்தின் குணநலன்கள் பேசப்படுகின்றன.

இலக்கிய இடம், மதிப்பீடு

ரா.செந்தில்குமாரின் கதைகள் அதிகமும் ஜப்பானியப் பின்புலம் கொண்டவை. ஜப்பானிய வாழ்க்கையை தமிழ் பண்பாட்டுப் பார்வையில் அணுகுகிறார். ஜப்பானிய வாழ்க்கை சார்ந்த செய்திகளை குறியீடுகளாகக் கொண்டு தமிழ் வாழ்க்கையை ஆராய்கிறார். தமிழர்கள் உலகமெங்கும் பரவிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் வேற்றுப்பண்பாடுகளை தமிழ் இலக்கியம் எதிர்கொள்வதற்கான உதாரணப்படைப்புகள் இவை. தமிழின் புலம்பெயர் எழுத்து (Diaspora Literature) வகைமையில் இவை முக்கியமானவை.

எம். கோபாலகிருஷ்ணன் "உலகெங்கும் கால்கொண்டிருக்கும் இன்றைய புதிய தலைமுறை எழுத்தாளர்கள் பலர், தம் அயல்நில வாழ்வின் அனுபவங்களை தமிழ் கதைப்புலத்துக்கு வலு சேர்க்கும் புனைவுகளாக மாற்றித் தருகிறார்கள். அந்த வரிசையில் ரா. செந்தில்குமாரின் 'இசூமியின் நறுமணம்’ தொகுப்பை சிறிதும் தயக்கமின்றி சேர்க்கலாம்" என்று செந்தில்குமாரை பற்றி குறிப்பிடுகிறார்.

நூல்கள்

சிறுகதை தொகுதி
  • இசூமியின் நறுமணம் சிறுகதை தொகுப்பு (2021)

உசாத்துணை

✅Finalised Page