under review

பிரபஞ்சன்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
 
(39 intermediate revisions by 9 users not shown)
Line 1: Line 1:
{{being created}}
Work in progress by [[User:Muthu_kalimuthu]]
[[File:prabhanjan.jpeg|alt=பிரபஞ்சன்|thumb|பிரபஞ்சன்]]
[[File:prabhanjan.jpeg|alt=பிரபஞ்சன்|thumb|பிரபஞ்சன்]]
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றியவர். தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது 1995 ஆம் ஆண்டு பெற்றவர்.
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கியவிமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர்.
== பிறப்பு, கல்வி ==
பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கும்பகோணம் அருகே துக்காச்சி- கடலங்குடியை பூர்விகமாக கொண்டவர்கள் பிரபஞ்சனின் முன்னோர். தென்னையில் இருந்து கள் எடுத்து விற்பவர்கள். சோலைவிவசாயிகள் என அழைக்கப்பட்டனர். சாரங்கபாணி அம்புஜம்மாள் இணையருக்கு ஏப்ரல் 27, 1945-ல் பிறந்தார்.


== வாழ்க்கைக் குறிப்பு ==
மதுக்கடை நடத்தியிருந்த சாரங்கபாணியின் மைந்தர். பாண்டிச்சேரியில் பெத்தி செமினார் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார்.
== தனி வாழ்க்கை ==
[[File:Prabanjan_2.jpeg|thumb|பிரபஞ்சன்]]
பிரபஞ்சன் ஜூலை 5, 1970-ல் பிரமிளா ராணியை மணந்தார். கௌதம், கௌரிசங்கர், சதீஷ்குமார் என மூன்று மகன்கள்.
முறையான தமிழ்க் கல்வி கொண்ட பிரபஞ்சன் எழுத்தாளராகவே வாழ வேண்டும் என்ற விழைவால் தஞ்சையில் கிடைத்த தமிழாசிரியர் பணியை மறுத்து புதுவை 'மாலை முரசு’வில் பணியாற்றினார். பின்னர் சென்னைக்கு வந்தார். இதழாளராக குங்குமம், குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களில் பணியாற்றினார். 1990 முதல் அவர் முழுநேர எழுத்தாளனாகத் தன்னை ஆக்கிக்கொண்டார். தொலைக்காட்சி தொடர்களுக்கு எழுதினார். மக்கள் தொலைக்காட்சியில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தினார். திரைப்படங்களுக்கான கதைவிவாதங்களிலும் கலந்துகொண்டார்.


=== பிறப்பு, கல்வி ===
சென்னையில் அரசு சார்பில் இதழாளர்களுக்காக அளிக்கப்பட்ட பீட்டர்ஸ் காலனி இல்லத்தில் பிரபஞ்சன் பெரும்பாலும் வாழ்ந்தார். குடும்பம் பாண்டிச்சேரியில் இருந்தது. 
====== இறுதிக்காலம் ======
தன் மனைவி மறைவுக்குப்பின் தனியாக வாழ்ந்த பிரபஞ்சனுக்கு மு.வேடியப்பன், [[பவா செல்லதுரை]], [[எஸ். ராமகிருஷ்ணன்]] ஆகியோரின் முன்னெடுப்பில் 'எழுத்துலகில் பிரபஞ்சன் 55’ என்ற ஒரு நாள் நிகழ்வு ஏப்ரல் 29, 2017 அன்று நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் அளித்த ரூ.12 லட்சத்து ஐம்பதாயிரம் பணமும் அவருக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற புதுவை முதலமைச்சர், அவருக்கு புதுவை அரசு விழா எடுக்கும் என்று அறிவித்ததோடு அதை நிறைவேற்றவும் செய்தார். 2018 மே முதல் வாரத்தில் அரசு சார்பில் விழா எடுத்ததோடு, ரூ.10 லட்சம் பணமும் வழங்கினார்.


பிரபஞ்சன் பிறந்த ஊர் புதுச்சேரி. இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். புதுச்சேரியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார்.
பிரபஞ்சன் இறுதிக்காலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டபோது இதழாளர் [[பி.என்.எஸ்.பாண்டியன்]] அவருக்கு அணுக்கமானவராக இருந்து பார்த்துக்கொண்டார். பாண்டிச்சேரியில் தன் பூர்விக இடமான லாசுப்பேட்டைக்கு சென்றார். பாண்டிச்சேரி மதகடிப்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
[[File:பிரபஞ்சன்1.png|thumb|பிரபஞ்சன்]]
== இதழியல் ==
பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் [[குமுதம்]] வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார்.
== அரசியல் ==
பிரபஞ்சன் இடதுசாரி அரசியல் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவாளர் ஆனார். இறுதிக்காலத்தில் திராவிட இயக்கத்திலும் பெரியாரியக் கொள்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
== இலக்கிய வாழ்க்கை ==
[[File:பிரபஞ்சன்2.png|thumb|பிரபஞ்சன்2]]
====== தொடக்கம் ======
கோடைக் கால விடுமுறைகளின்போது விழுப்புரத்தில் வசித்த தாத்தா வீட்டுக்குச் செல்கையில் அங்கிருந்த அலமாரியில் நிறைந்திருந்த தமிழ் இலக்கிய நூல்களை வாசித்துத் தன் ரசனையை வளர்த்துக்கொண்டார். பதினான்காம் வயதிலேயே ரோமன் ரோலந்து நூலகத்தில் அவர் அப்பா அவரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டார். பதினாறாவது வயதில் சென்னையில் இருந்து சேத்தூர் கூத்தன் என்பவர் நடத்திய பரணி என்னும் இதழில் அவரது முதல் சிறுகதை 'என்ன உலகமடா’ 1961-ல் வெளியானது. அதே ஆண்டில் பன்மொழிப்புலவர் ப.சுந்தரவேலனார் நடத்திய கலைச்செல்வி இதழில் முதல் கட்டுரை வெளியானது.
====== கவிதைகள் ======
புதுச்சேரியில் பிறந்தவராக இருந்தாலும் தஞ்சையில் பயின்றபோது தஞ்சைவாழ்க்கைமேல் பிரபஞ்சனுக்கு ஈடுபாடு உருவானது. இசையார்வமும் தஞ்சாவூருக்குரிய உணவுப்பழக்கமும் அவருடைய நுண்ரசனைகளில் இறுதிவரை நீடித்தது. கரந்தை தமிழ்ச்சங்கத்தில் பயில்கையில் கீழ்வெண்மணி படுகொலை அவரை இடதுசாரி ஆதரவாளராக ஆக்கியது. மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். பின்னர் அன்று உருவான கட்சிசாராத இடதுசாரி அரசியலில் ஆர்வம் கொண்டார். [[வானம்பாடி கவிதை இயக்கம்]] மேல் ஈடுபாடுகொண்டார், [[வானம்பாடி]] இதழில் ''பிரபஞ்சகவி'' என்னும் பெயரில் எழுதினார். வானம்பாடி கவிதை இயக்கத்தின் வெளியீடான [[வெளிச்சங்கள்]] தொகுப்பில் அவருடைய கவிதை உள்ளது. பிரபஞ்சகவி என்ற பெயரை பிரபஞ்சன் என சுருக்கிக்கொண்டார்
====== சிறுகதைகள் ======
பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச் சென்றபின் பெரும்பாலும் அவற்றிலேயே எழுதினார். 1980 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் நான்கு சிறுகதை தொகுதிகளை வெளியிட்டார். பிரபஞ்சனின் சிறுகதைகள் அவற்றின் முற்போக்கு கருத்துக்களுக்காகப் புகழ்பெற்றவை
====== நாவல்கள் ======
பிரபஞ்சன் பெரும்பாலான நாவல்களை தொடர்கதைகளாகவே எழுதினார். அவருடைய புகழ்பெற்ற முதல் நாவல் மகாநதி. தினமணிக் கதிர் இதழில் 1990-ல் தொடராக வந்த வரலாற்று நாவல் '[[வானம் வசப்படும்]]’ 1995-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றது. [[ஆனந்தரங்கம் பிள்ளை]]யின் காலத்தைக் களமாகக் கொண்ட நாவல் அது. `[[வானம் வசப்படும்]]' அதன் தொடர்ச்சியாக அமைந்த நாவல்.  


=== தனி வாழ்க்கை ===
பிரபஞ்சன் இறுதிக்காலத்தில் மகாபாரதத்தை மறுஆக்கமும் விமர்சனமும் செய்து மகாபாரத மாந்தர்கள் என்னும் நூலை எழுதினார். இராமாயணத்தையும் மறு ஆக்கம் செய்தார்.
 
====== நாடகங்கள் ======
இவரது மனைவியின் பெயர் பிரமிளா ராணி. மூன்று மகன்கள் உள்ளனர். சென்னையிலும் புதுச்சேரியிலும் வசித்து வந்தார். சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழகத்தின் எழுத்தாளர்கள் மட்டுமின்றி வாசகர்கள், அரசியல், திரை ஆளுமைகள் என்ப பலரும் பிரபஞ்சனுடனான, அவரின் எழுத்துகளுடனான தங்கள் நினைவுகளை பகிர்ந்துள்ளனர்.
பிரபஞ்சன் நவீன நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் எழுதிய முட்டை எனும் நாடகம் புகழ்பெற்றது.
 
[[File:பிரபஞ்சன்3.png|thumb|பிரபஞ்சன்3]]
முறையான தமிழ்க்கல்வி கொண்ட பிரபஞ்சன் எழுத்தாளராகவே வாழவேண்டும் என்ற  விழைவால் ஆசிரியர் பணியை மறுத்தவர். எழுதிவாழ வேண்டும் என்னும் நிலை அவரை இதழாளராக ஆக்கியது.
== விருதுகளும் பரிசுகளும் ==
இல்லையென்றால், அவர் மேலும் அதிகம் எழுதியிருக்கக்கூடும்.
* 1982 தமிழக அரசு விருது (ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்)
 
*1983 இலக்கியசிந்தனை விருது (சிறுகதை பிரம்மம்)
== பங்களிப்பு ==
*1986 தமிழக அரசு விருது (நேற்று மனிதர்கள்)
 
*1987 புதுவை அரசு விருது (ஆண்களும் பெண்களும்)
=== இதழியல் ===
*1991 இலக்கிய சிந்தனை விருது (மானுடம் வெல்லும்)
 
*1995 சாகித்திய அகாதமி விருது (வானம் வசப்படும்)
1980-1982ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார்.
* 1996 பாரதிய பாஷா பரிஷத் விருது (வானம் வசப்படும்)
 
*1998 தினத்தந்தி ஆதித்தனார் விருது (சந்தியா )
=== இலக்கியம் ===
*1998 புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது
 
*2007 தென்னிந்திய பதிப்பாளர் சங்க விருது
யதார்த்தவாத முற்போக்கு பாணியின் முக்கியமான சிறுகதையாசிரியர்களில் ஒருவர் பிரபஞ்சன்.
*2009 கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி
 
* 2013 சாரல் விருது
1961ல், இவரது முதல் சிறுகதை ‘என்ன உலகமடா’, ‘பரணி’ என்ற இதழில் வெளியானது.
*2014 க.நா.சு விருது
 
*2016 முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
1995ல் இவரது வரலாற்று நாவல் ‘வானம் வசப்படும்’ தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்டுள்ளது.
[[File:பிரபஞ்சன்- பாண்டிச்சேரி அரசுவிழா .png|thumb|பிரபஞ்சன்- பாண்டிச்சேரி அரசுவிழா ]]
 
== மறைவு ==
கற்பனையற்ற [கட்டமைப்பையும், தொடர்ச்சியையும் உருவாக்குவதற்காக மட்டுமே கற்பனையைக் கையாண்ட] வரலாற்று ஆக்கம் ‘மானுடம் வெல்லும்’ தமிழில் முதல் படைப்பு. ‘மானுடம் வெல்லும்’ வரலாற்றின் இயல்பான ஆதிக்கப்பரிணாமத்தை அதிலுள்ள குரூரத்தை ஒட்டுமொத்தமான பொருளின்மையை கற்பனையால் மிகையாக்காமல் அப்படியே சொல்ல முற்பட்ட ஆக்கம்.
டிசம்பர் 21, 2018-ல் மறைந்தார். பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை அடக்கம் செய்தது.
 
== இலக்கிய இடம் ==
இன்னொருவகையிலும் பிரபஞ்சனின் அந்நாவல் முக்கியமானது. எழுதப்பட்டதை திரும்ப எழுதுவது என்பது ஒரு பின்நவீனத்துவ எழுத்துமுறை. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பின் மறு ஆக்கம் மானுடம் வெல்லும். கதையாடலின் மறுகதையாடல். அதனூடாக வரலாறு எப்படி மீண்டும் மீண்டும் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது என்னும் பார்வையை வாசகன் அடையமுடியும்.
[[File:பிரபஞ்சன்- தமிழக அரசு விருது.png|thumb|பிரபஞ்சன்- தமிழக அரசு விருது]]
 
பிரபஞ்சன் தமிழ் முற்போக்கு இலக்கியத்தில் உருவான யதார்த்தவாத அழகியலை பொதுவாசகர்களின்பொருட்டு பிரபல இதழ்களில் சற்று எளிமையாக்கிக் கொண்டுசென்றவர். அவருடைய கதைகளில் மனிதாபிமான நோக்கை வெளிப்படுத்தினார். கட்டுரைகளில் சீற்றமும் வேகமும் இருந்தாலும் கதைகளில் உணர்வுநெகிழ்வுகளே இருந்தன. பிரபஞ்சனின் சிறுகதைகளில் சில தி.ஜானகிராமனின் உலகுக்கு அணுக்கமாக இசை சார்ந்த வாழ்க்கையை சித்தரிப்பவை.  
இவரது படைப்புகள் இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் சுவீடிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாடகமான ‘முட்டை’ தில்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலுள்ளது.  
 
இவரது சிறுகதைத் தொகுப்பான ‘நேற்று மனிதர்கள்’ பல கல்லூரிகளில் பாடப்புத்தகமாக உள்ளது. புதுச்சேரியின் சுதந்திர வரலாற்றை `கண்ணீரால் காப்போம்' எனும் நூலில் விளக்கியிருப்பார்.
 
மற்ற எழுத்தாளர்களின் கதைகளையும் வெகுவாய் பாராட்டி ‘கதை மழை’ எனும் நூல் எழுதியுள்ளார். பிரபஞ்சனின் ‘மகாபாரதம்’ புதிய வாசகர்களை உருவாக்கியது.
 
46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார். நாவல்கள் மற்றும் சிறுகதைகளில் அவர் படைத்த பாத்திரங்கள் பலருக்கும் நெருக்கமானவை.


பிரபஞ்சனின் சாதனை என்பது [[மானுடம் வெல்லும்]] நாவல்தான். தமிழ் வரலாற்றுநாவல்கள் பெரும்பாலும் மிகையுணர்ச்சிகளும் சாகசத்தன்மையும் கொண்ட கற்பனாவாதப் படைப்புகள். வரலாற்றை பொற்காலமாகப் புனைந்து உரைப்பவை, வரலாற்று நாயகர்களை கொண்டாடுபவை. மானுடம் வெல்லும் நாவல் எளிய மனிதர்களை வரலாற்றில் வைத்துப் பார்த்தது. வரலாற்றை தரவுகளுக்கு அணுக்கமாக நின்று மிகையுணர்ச்சியோ சாகசமோ இல்லாமல் சித்தரித்தது. ஆகவே விமர்சகர்களால் தமிழின் முதல் வரலாற்றுநாவல் என்று மதிப்பிடப்பட்டது.
== படைப்புகள்  ==
== படைப்புகள்  ==
 
பிரபஞ்சன் 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார்.
[[File:பிரபஞ்சன்- சாகித்ய அக்காதமி.png|thumb|பிரபஞ்சன்- சாகித்ய அக்காதமி]]
====== நாவல்கள்  ======
====== நாவல்கள்  ======
 
* [[மானுடம் வெல்லும்]]
* வானம் வசப்படும்
*வானம் வசப்படும்
* மகாநதி
* மகாநதி
* மானுடம் வெல்லும்
* சந்தியா
* சந்தியா
* காகித மனிதர்கள்
* காகித மனிதர்கள்
* கண்ணீரால் காப்போம்
* பெண்மை வெல்க
* பெண்மை வெல்க
*காதலெனும் ஏணியிலே
*சுகபோகத்தீவுகள்
*திரை
*தீவுகள்
*நீலநதி
* பதவி
* பதவி
* ஈரோடு தமிழர் உயிரோடு
* அப்பாவின் வேஷ்டி
* முதல் மழை துளி
* முதல் மழை துளி
* மகாபாரத மாந்தர்கள்
* மகாபாரத மாந்தர்கள்
 
*பூக்களை மிதிப்பவர்கள்
*பூக்கள் நாளையும் மலரும்
====== சிறுகதை தொகுப்புகள் ======
====== சிறுகதை தொகுப்புகள் ======
* நேற்று மனிதர்கள்
* நேற்று மனிதர்கள்
* விட்டு விடுதலையாகி
* விட்டு விடுதலையாகி
* இருட்டு வாசல்
* இருட்டு வாசல்
* ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
* ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
 
*அப்பாவின் வேஷ்டி
*சித்தன் போக்கு
*பிரபஞ்சன் - சிறுகதைகள்
*தபால்காரர் பெண்டாட்டி
*அந்தக்கதவு மூடப்படுவதில்லை
*நாளைக்கும் வரும் கிளிகள்
*குயிலம்மை
*மரி என்கிற ஆட்டுக்குட்டி
*யாசுமின் அக்கா
*ருசி
*ஒரு மனுஷி
*கழுதைக்கு அஞ்சுகால்கள்
*ஒரு சினேகத்தின் கதை
====== குறுநாவல்கள் ======
====== குறுநாவல்கள் ======
* ஆண்களும் பெண்களும்
* ஆண்களும் பெண்களும்
====== நாடகங்கள் ======
====== நாடகங்கள் ======
* முட்டை
* முட்டை
* அகல்யா
* அகல்யா
====== மொழிபெயர்ப்புகள் ======
====== கட்டுரைகள்  ======
====== கட்டுரைகள்  ======
 
* பிரபஞ்சன் கட்டுரைகள்
* பெண்
* வாழ்தலும் வாழ்தல்நிமித்தமும்
* மயிலிறகு குட்டி போட்டது
* மயிலிறகு குட்டி போட்டது
* அப்பாவின் வேஷ்டி
* அப்பாவின் வேஷ்டி
* தாழப்பறக்காத பரத்தையர் கொடி
* தாழப் பறக்காத பரத்தையர் கொடி
 
* ஈரோடு தமிழர் உயிரோடு
* கண்ணீரால் காப்போம்
* எமதுள்ளம் சுடர்விடுக
* துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்
====== நேர்காணல்கள் ======
====== நேர்காணல்கள் ======
 
* பிரபஞ்சனின் நேர்காணல்கள்
== விருதுகளும் பரிசுகளும் ==
*படைப்பே அரசியல்செயல்பாடுதான்
 
* சாகித்திய அகாதமி விருது (1995)
* சாரல் விருது (2013)
* பாரதிய பாஷா பரிஷத் விருது
* கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி
* இலக்கியச் சிந்தனை விருது - மானுடம் வெல்லும்
* சி. பா. ஆதித்தனார் விருது - சந்தியா
* தமிழக அரசின் பரிசு - நேற்று மனிதர்கள்
* தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு - ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்
 
== இலக்கிய முக்கியத்துவம் ==
 
தமிழிலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவர். யதார்த்தவாத முற்போக்கு பாணியின் முக்கியமான சிறுகதையாசிரியர்களில் ஒருவர் பிரபஞ்சன். ஆசிரியராக அவரை நிலைநிறுத்தும் முக்கியமான இலக்கியப்பங்களிப்பு பாண்டிச்சேரி வரலாற்றை மறுஆக்கம் செய்து அவர் எழுதிய ‘மானுடம் வெல்லும்’ ‘வானம் வசப்படும்’ என்னும் இரு நாவல்கள்.
 
எழுத்தாளர் [[ஜெயமோகன்]] "பிரபஞ்சன் முறையாக தமிழ்படித்து வந்தவர். [[மு.வரதராசனார்]], [[நா.பார்த்தசாரதி|நா.பார்த்தசாரதியை]] ஆதர்சமாகக் கொண்டு தொடங்கியவர். அந்த பாதிப்பு கதாபாத்திரங்களை கருத்துமாதிரிகளாகவும்,  உரையாடல்களை கட்டுரையின் பகுதிகளாகவும் ஆக்கும் வழக்கத்தை அவருக்கு அளித்தது.
 
அதேசமயம் அவரிடமிருந்த தனிமனித ஒழுக்கம், நேர்த்தியான தோற்றம், பண்பான அணுகுமுறை போன்ற பல நற்பண்புகளும் அந்த முன்னோடிகளிடமிருந்து கிடைத்தவையே. பிரபஞ்சனில் [[நா.பா]]வின் செல்வாக்கு மிக அதிகம்.
 
இரண்டாவது செல்வாக்கு அவர் எழுதவந்தபின் உருவானது. அவர் [[ஜெயகாந்தன்| ஜெயகாந்தனால்]] கவரப்பட்டார். இடது சாரி கருத்துக்கள் மேல் இருந்த தீவிரம், அவரை படைப்பாளியாக செயல்படவிடாது தடுத்தன.
 
அவருள் இருந்த ஆழ்ந்த இன்னொரு செல்வாக்கு [[தி. ஜானகிராமன்]]. தஞ்சையில் படித்தகாலத்தில் அவர் சங்கீதம், சீவல், காபி என ஒரு ஜானகிராம அழகியலை அடைந்தார். ஆனால் அதற்குள் ஆழ்ந்துசெல்ல அவரால் இயலவில்லை." என்று குறிப்பிடுகிறார்.
 
== மறைவு ==
 
டிசம்பர் 21, 2018ல் மறைந்தார். பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை நல்லடக்கம் செய்தது.
 
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.jeyamohan.in/116380/ பிரபஞ்சன் அஞ்சலி]
* [https://www.jeyamohan.in/116380/ பிரபஞ்சன் அஞ்சலி]
* [https://www.jeyamohan.in/117174/ பிரபஞ்சனும் ஷாஜியும்]
* [https://www.jeyamohan.in/117174/ பிரபஞ்சனும் ஷாஜியும்]
 
* [https://vallinam.com.my/version2/?p=5854 ம. நவீன் - வல்லினம் கட்டுரை]
* [https://vallinam.com.my/version2/?p=5854 ம. நவீன்-வல்லினம் கட்டுரை]
*[https://www.hindutamil.in/news/literature/519926-writer-prabanjan-2.html பிரபஞ்சன்: காலம் கலை கலைஞன் | writer prabanjan - hindutamil.in]
 
*[https://www.dinamani.com/specials/nool-aragam/2022/feb/28/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3799707.html பிரபஞ்சன் சில நினைவுகள்]
 
*[https://freetamilebooks.com/prapanchan-55/ பிரபஞ்சன் 55]
 
*[https://web.archive.org/web/20111006205821/http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=139 பிரபஞ்சன் எஸ்.ராமகிருஷ்ணன்]
 
*[https://imayamannamalai.blogspot.com/2019/01/blog-post_17.html இமையம்: பிரபஞ்சன் என்ற எழுத்தாளுமை - இமையம்]
 
*[https://www.hindutamil.in/news/literature/517898-writer-prabanchan.html பிரபஞ்சன்: வாழ்தலின் மகத்துவம் | writer prabanchan - hindutamil.in]
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section -->
*[https://www.hindutamil.in/news/literature/517898-writer-prabanchan-2.html பிரபஞ்சன்: வாழ்தலின் மகத்துவம் | writer prabanchan - hindutamil.in]
 
*[https://www.panippookkal.com/ithazh/archives/17389    பிரபஞ்சன்  : பனிப்பூக்கள்]
 
*[https://youtu.be/qyjTZCXB_wM மானுட மனங்களை வென்ற பிரபஞ்சன் | எழுத்தாளர் பிரபஞ்சன் | Writer Prapanjan, Puthu Yugam TV]
<!-- This is an invisible comment. Please add or edit categories here. Do not remove the section -->
*[https://youtu.be/OGqtqQ0dwRg பிரபஞ்சன் உரை | சென்னைப் பேரழிவு : நாம் கற்றதும் கடந்ததும் - YouTube]
*[https://www.dinamani.com/tamilnadu/2018/dec/22/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-3062626.html தினமணி செய்திl]
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:நாவலாசிரியர்கள்]]
[[Category:எழுத்தாளர்கள்]]
[[Category:இதழாளர்கள்]]
[[Category:இலக்கிய விமர்சகர்கள்]]
[[Category:கட்டுரையாளர்கள்]]
[[Category:இதழ்கள்]]

Latest revision as of 10:12, 24 February 2024

பிரபஞ்சன்
பிரபஞ்சன்

பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கியவிமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர்.

பிறப்பு, கல்வி

பிரபஞ்சனின் இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கும்பகோணம் அருகே துக்காச்சி- கடலங்குடியை பூர்விகமாக கொண்டவர்கள் பிரபஞ்சனின் முன்னோர். தென்னையில் இருந்து கள் எடுத்து விற்பவர்கள். சோலைவிவசாயிகள் என அழைக்கப்பட்டனர். சாரங்கபாணி அம்புஜம்மாள் இணையருக்கு ஏப்ரல் 27, 1945-ல் பிறந்தார்.

மதுக்கடை நடத்தியிருந்த சாரங்கபாணியின் மைந்தர். பாண்டிச்சேரியில் பெத்தி செமினார் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பிரபஞ்சன்

பிரபஞ்சன் ஜூலை 5, 1970-ல் பிரமிளா ராணியை மணந்தார். கௌதம், கௌரிசங்கர், சதீஷ்குமார் என மூன்று மகன்கள். முறையான தமிழ்க் கல்வி கொண்ட பிரபஞ்சன் எழுத்தாளராகவே வாழ வேண்டும் என்ற விழைவால் தஞ்சையில் கிடைத்த தமிழாசிரியர் பணியை மறுத்து புதுவை 'மாலை முரசு’வில் பணியாற்றினார். பின்னர் சென்னைக்கு வந்தார். இதழாளராக குங்குமம், குமுதம், ஆனந்தவிகடன் இதழ்களில் பணியாற்றினார். 1990 முதல் அவர் முழுநேர எழுத்தாளனாகத் தன்னை ஆக்கிக்கொண்டார். தொலைக்காட்சி தொடர்களுக்கு எழுதினார். மக்கள் தொலைக்காட்சியில் இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தினார். திரைப்படங்களுக்கான கதைவிவாதங்களிலும் கலந்துகொண்டார்.

சென்னையில் அரசு சார்பில் இதழாளர்களுக்காக அளிக்கப்பட்ட பீட்டர்ஸ் காலனி இல்லத்தில் பிரபஞ்சன் பெரும்பாலும் வாழ்ந்தார். குடும்பம் பாண்டிச்சேரியில் இருந்தது.

இறுதிக்காலம்

தன் மனைவி மறைவுக்குப்பின் தனியாக வாழ்ந்த பிரபஞ்சனுக்கு மு.வேடியப்பன், பவா செல்லதுரை, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரின் முன்னெடுப்பில் 'எழுத்துலகில் பிரபஞ்சன் 55’ என்ற ஒரு நாள் நிகழ்வு ஏப்ரல் 29, 2017 அன்று நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் இலக்கிய ஆர்வலர்கள் அளித்த ரூ.12 லட்சத்து ஐம்பதாயிரம் பணமும் அவருக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற புதுவை முதலமைச்சர், அவருக்கு புதுவை அரசு விழா எடுக்கும் என்று அறிவித்ததோடு அதை நிறைவேற்றவும் செய்தார். 2018 மே முதல் வாரத்தில் அரசு சார்பில் விழா எடுத்ததோடு, ரூ.10 லட்சம் பணமும் வழங்கினார்.

பிரபஞ்சன் இறுதிக்காலத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டபோது இதழாளர் பி.என்.எஸ்.பாண்டியன் அவருக்கு அணுக்கமானவராக இருந்து பார்த்துக்கொண்டார். பாண்டிச்சேரியில் தன் பூர்விக இடமான லாசுப்பேட்டைக்கு சென்றார். பாண்டிச்சேரி மதகடிப்பட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

பிரபஞ்சன்

இதழியல்

பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார்.

அரசியல்

பிரபஞ்சன் இடதுசாரி அரசியல் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். பின்னர் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவாளர் ஆனார். இறுதிக்காலத்தில் திராவிட இயக்கத்திலும் பெரியாரியக் கொள்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

பிரபஞ்சன்2
தொடக்கம்

கோடைக் கால விடுமுறைகளின்போது விழுப்புரத்தில் வசித்த தாத்தா வீட்டுக்குச் செல்கையில் அங்கிருந்த அலமாரியில் நிறைந்திருந்த தமிழ் இலக்கிய நூல்களை வாசித்துத் தன் ரசனையை வளர்த்துக்கொண்டார். பதினான்காம் வயதிலேயே ரோமன் ரோலந்து நூலகத்தில் அவர் அப்பா அவரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டார். பதினாறாவது வயதில் சென்னையில் இருந்து சேத்தூர் கூத்தன் என்பவர் நடத்திய பரணி என்னும் இதழில் அவரது முதல் சிறுகதை 'என்ன உலகமடா’ 1961-ல் வெளியானது. அதே ஆண்டில் பன்மொழிப்புலவர் ப.சுந்தரவேலனார் நடத்திய கலைச்செல்வி இதழில் முதல் கட்டுரை வெளியானது.

கவிதைகள்

புதுச்சேரியில் பிறந்தவராக இருந்தாலும் தஞ்சையில் பயின்றபோது தஞ்சைவாழ்க்கைமேல் பிரபஞ்சனுக்கு ஈடுபாடு உருவானது. இசையார்வமும் தஞ்சாவூருக்குரிய உணவுப்பழக்கமும் அவருடைய நுண்ரசனைகளில் இறுதிவரை நீடித்தது. கரந்தை தமிழ்ச்சங்கத்தில் பயில்கையில் கீழ்வெண்மணி படுகொலை அவரை இடதுசாரி ஆதரவாளராக ஆக்கியது. மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். பின்னர் அன்று உருவான கட்சிசாராத இடதுசாரி அரசியலில் ஆர்வம் கொண்டார். வானம்பாடி கவிதை இயக்கம் மேல் ஈடுபாடுகொண்டார், வானம்பாடி இதழில் பிரபஞ்சகவி என்னும் பெயரில் எழுதினார். வானம்பாடி கவிதை இயக்கத்தின் வெளியீடான வெளிச்சங்கள் தொகுப்பில் அவருடைய கவிதை உள்ளது. பிரபஞ்சகவி என்ற பெயரை பிரபஞ்சன் என சுருக்கிக்கொண்டார்

சிறுகதைகள்

பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச் சென்றபின் பெரும்பாலும் அவற்றிலேயே எழுதினார். 1980 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் நான்கு சிறுகதை தொகுதிகளை வெளியிட்டார். பிரபஞ்சனின் சிறுகதைகள் அவற்றின் முற்போக்கு கருத்துக்களுக்காகப் புகழ்பெற்றவை

நாவல்கள்

பிரபஞ்சன் பெரும்பாலான நாவல்களை தொடர்கதைகளாகவே எழுதினார். அவருடைய புகழ்பெற்ற முதல் நாவல் மகாநதி. தினமணிக் கதிர் இதழில் 1990-ல் தொடராக வந்த வரலாற்று நாவல் 'வானம் வசப்படும்’ 1995-ல் சாகித்ய அகாதமி விருது பெற்றது. ஆனந்தரங்கம் பிள்ளையின் காலத்தைக் களமாகக் கொண்ட நாவல் அது. `வானம் வசப்படும்' அதன் தொடர்ச்சியாக அமைந்த நாவல்.

பிரபஞ்சன் இறுதிக்காலத்தில் மகாபாரதத்தை மறுஆக்கமும் விமர்சனமும் செய்து மகாபாரத மாந்தர்கள் என்னும் நூலை எழுதினார். இராமாயணத்தையும் மறு ஆக்கம் செய்தார்.

நாடகங்கள்

பிரபஞ்சன் நவீன நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் எழுதிய முட்டை எனும் நாடகம் புகழ்பெற்றது.

பிரபஞ்சன்3

விருதுகளும் பரிசுகளும்

  • 1982 தமிழக அரசு விருது (ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்)
  • 1983 இலக்கியசிந்தனை விருது (சிறுகதை பிரம்மம்)
  • 1986 தமிழக அரசு விருது (நேற்று மனிதர்கள்)
  • 1987 புதுவை அரசு விருது (ஆண்களும் பெண்களும்)
  • 1991 இலக்கிய சிந்தனை விருது (மானுடம் வெல்லும்)
  • 1995 சாகித்திய அகாதமி விருது (வானம் வசப்படும்)
  • 1996 பாரதிய பாஷா பரிஷத் விருது (வானம் வசப்படும்)
  • 1998 தினத்தந்தி ஆதித்தனார் விருது (சந்தியா )
  • 1998 புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது
  • 2007 தென்னிந்திய பதிப்பாளர் சங்க விருது
  • 2009 கோயம்புத்தூர் கஸ்தூரி ரங்கம்மாள் விருது - மகாநதி
  • 2013 சாரல் விருது
  • 2014 க.நா.சு விருது
  • 2016 முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது
பிரபஞ்சன்- பாண்டிச்சேரி அரசுவிழா

மறைவு

டிசம்பர் 21, 2018-ல் மறைந்தார். பாண்டிச்சேரி அரசு, அரசு மரியாதையுடன் அவரை அடக்கம் செய்தது.

இலக்கிய இடம்

பிரபஞ்சன்- தமிழக அரசு விருது

பிரபஞ்சன் தமிழ் முற்போக்கு இலக்கியத்தில் உருவான யதார்த்தவாத அழகியலை பொதுவாசகர்களின்பொருட்டு பிரபல இதழ்களில் சற்று எளிமையாக்கிக் கொண்டுசென்றவர். அவருடைய கதைகளில் மனிதாபிமான நோக்கை வெளிப்படுத்தினார். கட்டுரைகளில் சீற்றமும் வேகமும் இருந்தாலும் கதைகளில் உணர்வுநெகிழ்வுகளே இருந்தன. பிரபஞ்சனின் சிறுகதைகளில் சில தி.ஜானகிராமனின் உலகுக்கு அணுக்கமாக இசை சார்ந்த வாழ்க்கையை சித்தரிப்பவை.

பிரபஞ்சனின் சாதனை என்பது மானுடம் வெல்லும் நாவல்தான். தமிழ் வரலாற்றுநாவல்கள் பெரும்பாலும் மிகையுணர்ச்சிகளும் சாகசத்தன்மையும் கொண்ட கற்பனாவாதப் படைப்புகள். வரலாற்றை பொற்காலமாகப் புனைந்து உரைப்பவை, வரலாற்று நாயகர்களை கொண்டாடுபவை. மானுடம் வெல்லும் நாவல் எளிய மனிதர்களை வரலாற்றில் வைத்துப் பார்த்தது. வரலாற்றை தரவுகளுக்கு அணுக்கமாக நின்று மிகையுணர்ச்சியோ சாகசமோ இல்லாமல் சித்தரித்தது. ஆகவே விமர்சகர்களால் தமிழின் முதல் வரலாற்றுநாவல் என்று மதிப்பிடப்பட்டது.

படைப்புகள்

பிரபஞ்சன் 46 புத்தகங்களுக்கும் கூடுதலாக எழுதியுள்ளார்.

பிரபஞ்சன்- சாகித்ய அக்காதமி
நாவல்கள்
  • மானுடம் வெல்லும்
  • வானம் வசப்படும்
  • மகாநதி
  • சந்தியா
  • காகித மனிதர்கள்
  • பெண்மை வெல்க
  • காதலெனும் ஏணியிலே
  • சுகபோகத்தீவுகள்
  • திரை
  • தீவுகள்
  • நீலநதி
  • பதவி
  • முதல் மழை துளி
  • மகாபாரத மாந்தர்கள்
  • பூக்களை மிதிப்பவர்கள்
  • பூக்கள் நாளையும் மலரும்
சிறுகதை தொகுப்புகள்
  • நேற்று மனிதர்கள்
  • விட்டு விடுதலையாகி
  • இருட்டு வாசல்
  • ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்
  • அப்பாவின் வேஷ்டி
  • சித்தன் போக்கு
  • பிரபஞ்சன் - சிறுகதைகள்
  • தபால்காரர் பெண்டாட்டி
  • அந்தக்கதவு மூடப்படுவதில்லை
  • நாளைக்கும் வரும் கிளிகள்
  • குயிலம்மை
  • மரி என்கிற ஆட்டுக்குட்டி
  • யாசுமின் அக்கா
  • ருசி
  • ஒரு மனுஷி
  • கழுதைக்கு அஞ்சுகால்கள்
  • ஒரு சினேகத்தின் கதை
குறுநாவல்கள்
  • ஆண்களும் பெண்களும்
நாடகங்கள்
  • முட்டை
  • அகல்யா
கட்டுரைகள்
  • பிரபஞ்சன் கட்டுரைகள்
  • பெண்
  • வாழ்தலும் வாழ்தல்நிமித்தமும்
  • மயிலிறகு குட்டி போட்டது
  • அப்பாவின் வேஷ்டி
  • தாழப் பறக்காத பரத்தையர் கொடி
  • ஈரோடு தமிழர் உயிரோடு
  • கண்ணீரால் காப்போம்
  • எமதுள்ளம் சுடர்விடுக
  • துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்
நேர்காணல்கள்
  • பிரபஞ்சனின் நேர்காணல்கள்
  • படைப்பே அரசியல்செயல்பாடுதான்

உசாத்துணை


✅Finalised Page