வெளிச்சங்கள்
From Tamil Wiki
வெளிச்சங்கள் (1973) தமிழில் வானம்பாடி கவிதை இயக்கத்தின் வெளிப்பாடாக உருவான முதல் கவிதைத் தொகுப்பு.
வெளியீடு
வானம்பாடி கவிதை இதழ் வெளியாகத் தொடங்கி டிசம்பர் 1973-ல் வானம்பாடி இதழ் பத்து இலக்கங்கள் வெளிவந்த பின் இந்த தொகுப்பு வெளிவந்தது. வானம்பாடி கவிதை இயக்கம் வெளியிட்ட முதல்நூல் என்பதனால் ஒரு வரலாற்று அடையாளம் இந்நூலுக்கு உள்ளது.
இடம்பெற்ற கவிஞர்கள்
வெளிச்சங்கள் தொகுப்பில்அதில் 33 கவிஞர்களின் கவிதைகள் இருந்தன.
- அக்கினி புத்திரன்
- அரசப்பன்
- அறிவன்
- புலவர் ஆதி
- இளமுருகு
- இன்குலாப்
- கங்கைகொண்டான்
- கதிரேசன்
- ஞானி
- சக்திக்கனல்
- சித்தன்
- சிற்பி,
- பா. செயப்பிரகாசம்
- ஜனசுந்தரம்
- தமிழ்நாடன்
- தமிழவன்
- தமிழன்பன்
- தேனரசன்
- பிரபஞ்சன்
- புவியரசு
- மு.மேத்தா
- ரவீந்திரன்
- பா.வேலுச்சாமி
- ஜீவ ஒளி
- செந்தமிழ் மாறன்
- ஜனசுந்தரம்
- முல்லை ஆதவன்
ஆகிய கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருந்தன.
வானம்பாடிகளின் இரண்டாவது தொகுப்பு ’சிநேக புஷ்பங்கள்' 1976-ல் வெளிவந்தது. வானம்பாடிகளின் வெளிச்சங்கள் தொகுப்புக்கு முன்னுதாரணமாக அமைந்தது எழுத்து கவிதை இயக்கம் வெளியிட்ட புதுக்குரல்கள் என்னும் தொகுப்பு. நேர் எதிரான அழகியல்பார்வை கொண்டது அது
உசாத்துணை
- வானம்பாடி பற்றி வெங்கட் சாமிநாதன்
- நா முத்துநிலவன் புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்
- இடதுசாரிச் சிந்தனைகளை இளம் உள்ளங்களில் வலுப்படுத்த வேண்டும்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:48 IST