under review

நெய்தல் திணை

From Tamil Wiki
Revision as of 08:20, 26 August 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழ்நாட்டு நிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து வகை நிலத் திணைகளைக் கொண்டதாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் ஆகும். நெய்தல் நிலத்தின் அக ஒழுக்கம் இரங்கலும் இரங்கல் நிமித்தமும்,

நெய்தல் திணையின் முதற் பொருள்

  • கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் நெய்தல் திணையாகும். கடல், புணரி, துறை, பெருந்துறை, கழி, பெருமணல் அடைகரை, பல்பூங்கானல், தண்ணறுங்கானல், புன்னையங்கானல் போன்ற பெயர்களும் உண்டு. நெய்தல் திணையின் கடவுள் வருணன். 'வருணன் மேய பெருமணல் உலகமும்’ என்கிறது, தொல்காப்பியம்.
  • பெரும்பொழுது – கார்காலம், கூதிர்காலம், இளவேனில், முதுவேனில், முன் பனி, பின் பனி.
  • சிறுபொழுது – எற்பாடு

நெய்தல் திணையின் கருப்பொருள்கள்

தெய்வம் வருணன்
மக்கள் துறைவன், சேர்ப்பன், புலம்பன், பரதவர், பரத்தியர், உமணர்
ஊர் பட்டினம், பாக்கம்
உணவு மீன், உப்புக்குப் பெற்ற பொருள்
தொழில் மீன் பிடித்தல், உப்பு விளைத்தல், உப்பு விற்றல்.
நீர்நிலை மணற்கிணறு, உவர்க்கழி, நெடுங்கழி
மரங்கள் புன்னை, ஞாழல், பனை, தாழை
மலர்கள் தாழை, நெய்தல்
விலங்குகள் முதலை, சுறா
பறவைகள் கடற்காகம்
பண் செவ்வழிப்பண்
யாழ் விளரி யாழ்
பறை மீன்கோட்பறை

நெய்தல் திணையின் உரிப்பொருள்

அக ஒழுக்கம்: இரங்கலும் இரங்கல் நிமித்தமும் (தலைவனின்பிரிவு தாங்காது தலைவி வருந்தியிருத்தல்)

புற ஒழுக்கம்: தும்பைத் திணை (போரில் இரு தரப்பினரும் தும்பைப் பூமாலை சூடி நேருக்கு நேர் நின்று போரிடுதல்)

நெய்தல் திணைப் பாடல்கள்

ஐங்குறுநூறு, கலித்தொகை, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களில் நெய்தல் திணை பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page