under review

செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
(Moved categories to bottom of article)
Line 37: Line 37:
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
* மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
*[https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2009/may/17/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-13615.html#:~:text=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%85%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%20%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D,%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%20%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C%20%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81 தலைமுறை-ரக்தியும் விரக்தியும் தினமணி 17 மே,2009]

[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]
 
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]

Revision as of 15:36, 29 December 2022

செம்பொன்னார் கோயில் ராமசாமிப்பிள்ளை

செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை (1880 - ஏப்ரல் 19, 1923) (செம்பொன்னார் கோயில் ராமசாமிப் பிள்ளை) புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை குடும்பம்
செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை குடும்பம் நன்றி: www.sembanarkovilbrothers.com

ராமஸ்வாமி பிள்ளை செம்பொன்னார்கோவிலைச் சேர்ந்த பல்லவி வைத்தியநாத பிள்ளையின் மகனாக 1850-ஆம் ஆண்டு பிறந்தார். ஆறுமுகம் பிள்ளை, பொன்னுஸ்வாமி பிள்ளை, செல்லம்மாள், நாகம்மாள், லக்ஷ்மி அம்மாள், சுந்தராம்பாள் ஆகியோர் உடன்பிறந்தவர்கள்.

முதலில் தன் தந்தை வைத்தியநாத பிள்ளையிடமும் பின்னர் கோட்டை சுப்பராய பிள்ளை என்ற நாதஸ்வரக் கலைஞரிடமும் நாதஸ்வரம் பயின்றார்.

தனிவாழ்க்கை

நாதஸ்வரக் கலைஞர் மாயூரம் மாணிக்கம் பிள்ளையின் மகள் குட்டியம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுடைய குழந்தைகள்:

  1. கோவிந்தஸ்வாமி பிள்ளை (நாதஸ்வரம்)
  2. சேது அம்மாள் (கணவர்: திருவீழிமிழலை சுப்பிரமணிய பிள்ளை - நாதஸ்வரம்)
  3. தக்ஷிணாமூர்த்தி பிள்ளை (நாதஸ்வரம்)
  4. விஸ்வநாத பிள்ளை (நாதஸ்வரம்)
  5. தனபாக்கியம் (கணவர்: பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை - தவில்)
  6. கிருஷ்ணமூர்த்தி பிள்ளை (நாதஸ்வரம்)

ராமஸ்வாமிப் பிள்ளையின் மகன்கள் செம்பொன்னார்கோவில் கோவிந்தஸ்வாமி பிள்ளையும் அவர் தமையன் செம்பொன்னார்கோவில் தக்ஷிணாமூர்த்தி பிள்ளையும் ’செம்பொன்னார்கோவில் சகோதரர்கள்’ எனப் புகழ்பெற்றவர்கள். இவரது வாரிசுகள் நாதஸ்வரக் கலையில் இன்றும் புகழ் பெற்றிருக்கிறார்கள்.

இசைப்பணி

ராமஸ்வாமி பிள்ளை கடினமான ரக்திகளும் பல்லவிகளும் வாசிப்பதில் பெயர் பெற்றவர். தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனங்களில் வாசித்து பல சன்மானங்கள் பெற்றவர். ராமநாதபுரம் சமஸ்தானம், சேத்தூர், சிவகிரி, உடையார்பாளையம், சிங்கம்பட்டி ஜமீன்களில் ராமஸ்வாமி பிள்ளைக்கு நல்ல மதிப்பு இருந்தது.

முதன்முதலில் நாதஸ்வர இசையை இசைத்தட்டுக்களில் பதிவு செய்தவர் ராமஸ்வாமி பிள்ளை. இந்த இசைத்தட்டுக்களில் உடன் தவில் வாசித்தவர் அம்மாசத்திரம் கண்ணுஸ்வாமி பிள்ளை.

அதிதுரித காலத்தில் வாசிப்பதில் ராமஸ்வாமி பிள்ளை வல்லவர் என்பதை 'வாதாபி கணபதிம்’ கீர்த்தனை இசைத்தட்டில் அறியலாம். ராக ஆலாபனை, ஸ்வர ப்ரஸ்தாரங்களில் ராமஸ்வாமி பிள்ளை கொண்டிருந்த திறமையை 'நாட்டைக்குறிஞ்சி’ வாசிப்பில் அறியலாம்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை ஏப்ரல் 19, 1923 அன்று மறைந்தார்.

இதர இணைப்புகள்

உசாத்துணை

✅Finalised Page