under review

காதல் இலக்கிய இதழ்

From Tamil Wiki
Revision as of 06:58, 17 February 2023 by Logamadevi (talk | contribs)
முதல் காதல் இதழ்

'காதல்' மலேசியாவில் வெளிவந்த ஓர் இலக்கிய இதழ் ஆகும். இரண்டாயிரத்திற்குப் பின் மலேசியாவில் உருவான இளம் படைப்பாளிகளுக்கு கட்டற்ற புனைவுக் களமாக இவ்விதழ் விளங்கியது. நவீன இலக்கியவாதிகளை மலேசியாவுக்கு அழைத்து வந்து, உரையாடல்களை உருவாக்கியதில் முன்னோடியாகத் திகழ்ந்தது.

பின்னணி

காதல் 2

பிப்ரவரி 2006-ல், முதல் 'காதல்' இலக்கிய இதழ் பிரசுரமானது. 'நவீன இலக்கியத்தை நோக்கி' எனும் அடைமொழியுடன் வெளிவந்த காதல் இதழ், நேர்காணல்கள், சிறுகதைகள், நவீன கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. 64 பக்கங்களில் மாத இதழாக 'காதல்' இலக்கிய இதழ் வெளிவந்தது. நவம்பர் 2006 வெளிவந்த பத்தாவது இதழுடன் 'காதல்' நிறுத்தப்பட்டது.

ஆசிரியர் குழு

காதல் 3

காதல் இலக்கிய இதழின் நிர்வாக ஆசிரியர் பெரு.அ. தமிழ்மணி ஆவார். இதழின் ஆசிரியராக வீ.அ. மணிமொழியும் இணை ஆசிரியராக எழுத்தாளராக ம.நவீனும் பொறுப்பேற்றிருந்தனர். முதல் இதழில் எழுத்தாளர் நிர்மலா பெருமாள், சு. யுவராஜன் ஆகியோர் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றனர். நான்காவது இதழில் பா.அ. சிவம், எம்.ஏ.அலி, தனபாலன் ஆகியோர் ஆசிரியர் குழுவில் இணைந்தனர். எட்டாவது இதழில் ஏ. தேவராஜன் ஆசிரியர் குழுவில் இணைந்தார். அனைத்து இதழ்களுக்கு ஓவியர் சந்துரு பக்க வடிவமைப்பாளராகப் பணியாற்றினார்.

முகப்பு அட்டை

காதல் 4

காதல் இலக்கிய இதழின் தனிச்சிறப்பாக அதன் வடிவமைப்பு கருதப்பட்டது. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் அதன் முகப்பு அட்டை மா. இராமையா, சீ. முத்துசாமி, கோ. புண்ணியவான், முல்லை ராமையா, ஓவியர் சந்திரன் என மலேசிய ஆளுமைகளின் படங்களைத் தாங்கி மலர்ந்தது.

இலக்கிய நிகழ்ச்சிகள்

காதல் 5

நவீன இலக்கியத்தை முன்னெடுக்கும் நோக்கில் காதல் இலக்கிய இதழ் சில இலக்கியச் சந்திப்புகளை ஏற்பாடு செய்தது.

பங்களிப்பு

காதல் 6

காதல் இலக்கிய இதழ் மலேசிய எழுத்தாளர்களின் நேர்காணல்களுக்கு முதன்மை கொடுத்தது. இதனால் இலக்கியம் குறித்த உரையாடல்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டன. இளம் எழுத்தாளர்கள் தங்கள் பரிட்சார்த்த முயற்சிகளை நிகழ்த்திப்பார்க்க காதல் இதழ் களம் அமைத்துக்கொடுத்தது. மனுஷ்ய புத்திரன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களைக் கொண்டு நடத்திய தொடர் உரையாடல்களால் மலேசியாவில் நவீன இலக்கியம் குறித்த புரிதலை ஆழப்படுத்தியது.

சர்ச்சை

காதல் 8

காதல் இலக்கிய இதழின் வருகை மரபு எழுத்தாளர்களிடையே விமர்சனங்களை உண்டாக்கியது. உங்கள் குரல் இதழில் சீனி நைனா முகம்மது அவர்கள் காதல் இதழின் வருகையை மரபுக்கு எதிரானதாக விமர்சித்து எழுதினார். காதல் இதழில் வந்த சிறுகதைகள் ஆபாசமானவை என உள்துறை அமைச்சுக்கு புகார்கள் வழங்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாயின.

நிறுத்தம்

காதல் 10

காதல் இதழ் பொருளாதார நட்டத்தை எதிர்நோக்கியது. ஒவ்வொரு இதழும் இருநூறு பிரதிகளுக்கு மேல் விற்பனையாகவில்லை. நவம்பர் 2006ல் அவ்விதழ் தொடர்ந்து நடத்த முடியாமல் பெரு.அ. தமிழ்மணியால் நிறுத்தப்பட்டது.

துணை நூல்கள்


✅Finalised Page