13 ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய நூல்கள்
From Tamil Wiki
தமிழ் இலக்கிய வரலாற்றில் சமய நூல்களும் உரை நூல்களும் உருவான நூற்றாண்டு, பதிமூன்றாம் நூற்றாண்டு. பதிமூன்றாம் நூற்றாண்டில் உருவான இலக்கிய நூல்கள் சிலவற்றின் பட்டியல் இது.
பதிமூன்றாம் நூற்றாண்டு இலக்கிய நூல்கள்
நூல்கள் | ஆசிரியர்கள் |
---|---|
சிவஞான சித்தியார், இருபா இருபஃது | அருணந்தி சிவம் |
தமிழ்ப் பாரதம் | அருணிலை விசாகன் |
காங்கேயன் பிள்ளைத் தமிழ் | ஆதிச்சதேவன் |
இரணியவதைப் பரணி | இரணியவதைப் பரணி ஆசிரியர் |
அவிநய உரை | இராச பவித்திரப் பல்லவரையர் |
ஆதிச்சதேவன் | காரணை விழுப்பரையன் |
குறள் உரை | காளிங்கர் |
தனிப்பாடல் | சத்தி முற்றப் புலவர் |
தொல்காப்பியம் - சொல்லதிகார உரை | சேனாவரையர் |
குறள் உரை; நாலடி உரை | தருமனார் |
சாசனப் பாடல் | தாயின் நல்லபெருமாள் |
குறள் உரை | தாமத்தர் |
உள்ளமுடையான் சோதிட நூல் | திருக்கோட்டி நம்பி |
திருவாய்மொழி வாசகமாலை | திருக்கோனேரி தாஸ்யை |
பெருவஞ்சி | திருவரங்குளமுடையான் |
சிந்துப் பிரபந்தம் | திருவாழி பரப்பினான் கூத்தன் |
குறள் உரை | நச்சர் |
திருவாய் மொழி ஒன்பதினாயிரப்படி திருவாய்மொழி உரைகள் | நஞ்சீயர் |
அகப்பொருள் விளக்கம் | நாற்கவிராச நம்பி |
பரமார்த்த தரிசனம் | பட்டனார் |
நாலடியார் உரை | பதுமனார் |
தனியன் | பரகாலதாசர் |
குறள் உரை | பரிமேலழகர் |
நன்னூல் | பவணந்தி முனிவர் |
குருபரம்பரை ஆறாயிரப்படி | பின் பழகியபெருமாள் ஜீயர் |
நளவெண்பா | புகழேந்தி |
நாலாயிரப் பிரபந்த வியாக்கியானம் | பெரியவாச்சான் பிள்ளை |
திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் | பெரும்பற்றப் புலியூர் நம்பி |
திருக்கோவையார் உரை | பேராசிரியர் (2) |
தொல்காப்பியப் பொருளதிகார உரை | பேராசிரியர் (1) |
தஞ்சைவாணன் கோவை | பொய்யாமொழிப் புலவர் |
உண்மை விளக்கம் | மனவாசகங் கடந்தார் |
அறநெறிச்சாரம் | முனைப்பாடியார் |
சிவஞானபோதம் | மெய்கண்டார் |
ஈடு முப்பத்தாறாயிரப்படி | வடக்குத் திருவீதிப் பிள்ளை |
வார்த்தாமாலை | வார்த்தாமாலை தொகுத்தவர் |
உசாத்துணை
- தமிழ் இலக்கிய வரலாறு: பதின்மூன்றாம் நூற்றாண்டு: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ் இலக்கிய வரலாறு: நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை: தமிழ் இணைய மின்னூலகம்
- தமிழ்ச்சுரங்கம் தளம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Jan-2023, 08:49:17 IST