under review

பெரும்பற்றப் புலியூர் நம்பி

From Tamil Wiki

பெரும்பற்றப் புலியூர் நம்பி (பொ.யு. 13-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

பெரும்பற்றப் புலியூர் நம்பி சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரில் பொ.யு. 13-ம் நூற்றாண்டில் பிறந்தார். தமிழ், வட மொழி இலக்கண இலக்கியங்களைக் கற்றார். திருத்தில்லையில் கூத்தியற்றும் இறைவனிடம் பக்தி கொண்டதால் பெரும்பற்றப் புலியூர் நம்பி என வழங்கப்பட்டிருக்கலாம் என அறிஞர்களால் நம்பப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

பழநி மாம்பழக்கவிச் சிங்க நாவலர் வேம்பத்தூரைப் புகழ்ந்து செய்யுட்கள் பாடியுள்ளார். அறக்கருத்துக்களை செய்யுட்களாக பாடினார். பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க பொ.யு. 1228-ல் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் நூலை ஆயிரத்தி எழுநூற்றி ஐம்பத்தி மூன்று செய்யுடகளாக இயற்றினார். இந்நூலை இயற்றி பாண்டிய அரசனிடம் இறையில் நிலம், பல்லக்கு போன்றவைகளைப் பெற்றுள்ளார்.

பாடல் நடை

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்:

சொக்கனென் றொருகா லோதில்
துயர்கெடும் பகையு மாளும்
சொக்கனென் றொருகா லோதில்
தொலைவிலாச் செல்வம் உண்டாம்
சொக்கனென் றொருகா லோதில்
சுருதி செல் யாண்டுஞ் செல்லும்
சொக்கனென் றொருகா லோதில்
சொர்க்கமும் எளிதா மன்றே

நூல் பட்டியல்

  • திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்

உசாத்துணை


✅Finalised Page