under review

முத்தையா தொண்டைமான்

From Tamil Wiki
Revision as of 14:13, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:தமிழறிஞர்கள் to Category:தமிழறிஞர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
முத்தையா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்தையா (பெயர் பட்டியல்)
தொண்டைமான் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தொண்டைமான் (பெயர் பட்டியல்)
முத்தையா தொண்டைமான்
முத்தம்மாள், மனைவி

முத்தையா தொண்டைமான் (பொ.யு.பதினெட்டாம் நூற்றாண்டு) தமிழறிஞர். திருநெல்வேலியில் தொண்டைமான் குடியில் பிறந்தவர். தொ.மு.சி. ரகுநாதன், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் ஆகியோரின் தந்தை

பிறப்பு, கல்வி

முத்தையா தொண்டைமான் திருநெல்வேலியில் குடியேறிய தொண்டைமான் வம்சத்தின் ஒரு கிளையில் சிதம்பரத் தொண்டைமானின் மகனாகப் பிறந்தார்.சென்னை சித்திரகலாசாலையில் வேலாயுத ஆசாரியாரிடம் மாணவராக ஓவியம் பயின்றார்.

தனிவாழ்க்கை

முத்தையா தொண்டைமான் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் முப்பத்தைந்து ஆண்டுகள் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் மனைவி முத்தம்மாள்.

முத்தையா தன் முறைப்பெண்ணான முத்தம்மாளை மணந்தார். ஆலயக்கலை ஆய்வாளார் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் முற்போக்கு எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோர் இவருடைய மகன்கள்.

இலக்கியப் பணி

முத்தையா தொண்டைமான் ஓவியர், கவிஞர், ஆங்கிலத்தில் புலமை கொண்டவர். இராமலிங்க வள்ளலார் மீது ஈடுபாடு கொண்டவர். அவரைப்போலவே கவிதைகளை எழுதினார்.

நூல்கள்

  • திருவொற்றியூர் தியாகேசர் காதல்
  • நெல்லை நாயகர் குறம்
  • அருள் கடன் விண்ணப்பம்
  • ஆட்கொண்ட பதிகம்
  • பகவத் கீதை அகவல்

உசாத்துணை

கள்ளர் வரலாறு இணையப்பக்கம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 18-Mar-2023, 18:42:14 IST