சிதம்பரத் தொண்டைமான்
- சிதம்பரம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சிதம்பரம் (பெயர் பட்டியல்)
- தொண்டைமான் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தொண்டைமான் (பெயர் பட்டியல்)
சிதம்பரத் தொண்டைமான் (பதினெட்டாம் நூற்றாண்டு) தமிழ்க் கவிஞர். வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகளின் மாணவர். தொ.மு.சி.ரகுநாதன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஆகியோரின் தந்தை வழி தாத்தா
இலக்கியப்பணிகள்
சிதம்பரத் தொண்டைமான் திருநெல்வேலியில் புதுக்கோட்டையில் இருந்து குடியேறிய தொண்டைமான் குடியில் பிறந்தவர். சிதம்பரத் தொண்டைமானின் சிறிய தந்தை அருணாசலத் தொண்டைமான் வண்ணச்சரபம் திருப்புகழ்ச்சாமிகள், முருகதாச சுவாமிகள் என்ற பெயர்களால் அறியப்படும் கவிஞர். சிதம்பரத் தொண்டைமான் தண்டபாணி சுவாமிகளின் மாணவர்.
சிதம்பரத் தொண்டைமான் `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை', `நெல்லைப்பள்ளு' ஆகிய நூல்களை எழுதினார்.
சிதம்பரத் தொண்டைமானின் மகன் முத்தையா தொண்டைமான். அவருடைய மகன்கள் ஆலயக்கலை அறிஞர் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், மற்றும் முற்போக்கு எழுத்தாளரான தொ.மு.சி. ரகுநாதன்.
நூல்கள்
- ஸ்ரீரெங்கநாதர் அம்மானை
- நெல்லைப்பள்ளு
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
18-Mar-2023, 18:41:36 IST