இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1990
From Tamil Wiki
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1990
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | மனித முகமூடிகள் | கிருஷ்ணா | குங்குமம் |
பிப்ரவரி | வேரில் துடிக்கும் உயிர்கள் | போப்பு | செம்மலர் |
மார்ச் | பூவும் மானும் போட்ட சொக்காய் | திலகவதி | செம்மலர் |
ஏப்ரல் | சம்மதங்கள் ஏன் ? | பாவண்ணன் | இந்தியா டுடே |
மே | ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர் | இரா.முருகன் | தினமணி கதிர் |
ஜூன் | பட்டம் | இராகுலதாசன் | கலைமகள் |
ஜூலை | வெளிச்சம் | ஜி.எஸ் பாலகிருஷ்ணன் | கலைமகள் |
ஆகஸ்ட் | அன்றிரவு | எஸ். சங்கரநாராயணன் | சாவி |
செப்டம்பர் | வம்சம் | எஸ். சங்கரநாராயணன் | தாய் |
அக்டோபர் | கிழவி | ஜே.வி. நாதன் | ஆனந்த விகடன் |
நவம்பர் | தீ | சு. கணபதி | கணையாழி |
டிசம்பர் | அன்பு ஆயுதம் | பாலகுமாரன் | கல்கி |
1990-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை
1990-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, போப்பு எழுதிய ‘வேரில் துடிக்கும் உயிர்கள்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆர்வி இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை வி. பாபு தேர்வு செய்தார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
31-Jan-2023, 05:57:17 IST