இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1993
From Tamil Wiki
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1993
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | பாதிப்புகள் | சோம. வள்ளியப்பன் | கல்கி |
பிப்ரவரி | கடிதம் | திலீப் குமார் | இந்தியா டுடே |
மார்ச் | இன்று முதல் தென்றல் | திலகவதி | இந்தியா டுடே |
ஏப்ரல் | உப்பு | பாவண்ணன் | இந்தியா டுடே |
மே | அப்பா | காரை. ஆடலரசன் | தினமணி கதிர் |
ஜூன் | பூ ஒன்று புயலானது | எஸ். லட்சுமிகாந்தன் | இதயம் பேசுகிறது |
ஜூலை | அதுவும் கடந்து... | வத்ஸலா | சுபமங்களா |
ஆகஸ்ட் | அக்கதை | மேலாண்மை பொன்னுச்சாமி | கல்கி |
செப்டம்பர் | காலி மனை | கிருஷ்ணா | குங்குமம் |
அக்டோபர் | குடை | சுப்ரா | சுபமங்களா |
நவம்பர் | பாட்டியின் வீடு | க.வை பழனிசாமி | செம்மலர் |
டிசம்பர் | காவடியாட்டம் | யூமா வாஸுகி | கணையாழி |
1993-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை
1993-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, திலீப்குமார் எழுதிய ‘கடிதம்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. அசோகமித்திரன் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை சீதாலக்ஷ்மி விஸ்வநாத் தேர்வு செய்தார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
31-Jan-2023, 06:05:49 IST