under review

இலக்கிய மாமணி விருது

From Tamil Wiki
Revision as of 18:37, 25 January 2024 by ASN (talk | contribs) (Awardee Name Added: Link Created)

இலக்கிய மாமணி விருது, தமிழக அரசால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்று. தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் வகையில் பல்வேறு படைப்புகளைப் படைத்துவரும் தேர்ந்தெடுக்கப்படும் மூன்று எழுத்தாளர்களுக்கு 2021 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.

இலக்கிய மாமணி விருது

தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசால் இலக்கிய மாமணி விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, ஐந்து லட்ச ரூபாய் பரிசுத் தொகை, தங்கப்பதக்கம் மற்றும் தகுதிச் சான்றிதழ் கொண்டது.

இலக்கிய மாமணி விருது பெற்றவர்கள்

ஆண்டு விருதாளர்கள் பெயர்
2021 கு. சின்னப்ப பாரதி
கோணங்கி
புலவர் இரா. கலியபெருமாள்
2022 முனைவர் அரங்க. இராமலிங்கம்
கொ.மா. கோதண்டம்
முனைவர் சூர்யகாந்தன்
சிறப்புத் தேர்வு மணி அர்ஜீனன்
அர. திருவிடம்
க. பூரணச்சந்திரன்
2023 ஞா.மாணிக்கவாசகன்
சு. சண்முகசுந்தரம்
இலக்கியா நடராஜன்


உசாத்துணை


✅Finalised Page