சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-3
சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 3 (2015), சிற்றிலக்கிய நூல்களின் தொகுப்பு. இதனைத் தொகுத்தவர் ச.வே. சுப்பிரமணியன். மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தொகுதி 3-ல், 44 கலம்பக இலக்கிய நூல்கள் இடம் பெற்றன.
பிரசுரம், வெளியீடு
தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் சிலவற்றின் தொகுப்பான சிற்றிலக்கியக் களஞ்சியங்கள் நூல், ஆறு தொகுதிகளாக வெளிவந்தது. சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 3, 44 கலம்பக இலக்கிய நூல்களின் தொகுப்பாகும். டிசம்பர், 2015-ல் இந்நூல் வெளியானது. மெய்யப்பன் பதிப்பகம் இதனை வெளியிட்டது. தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் இவற்றைத் தொகுத்தளித்தார்.
உள்ளடக்கம்
சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 3-ல் சிற்றிலக்கிய அறிமுகம், சிற்றிலக்கியங்களின் பட்டியல், கலம்பக இலக்கியங்கள் பற்றிய அறிமுகம், அதன் இலக்கணம், வகைமைகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. இவற்றுடன் 44 கலம்பக இலக்கிய நூல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நூல் விளக்கக் குறிப்புகள், பாட்டு முதற்குறிப்பு அகராதி போன்றவையும் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்பில் 20 ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய கலம்பக இலக்கிய நூல்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.
கலம்பக இலக்கியங்கள்
கீழ்க்காணும் 44 கலம்பக இலக்கியங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றன.
- நந்திக் கலம்பகம்
- ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகம்
- திருவரங்கக் கலம்பகம்
- திருக்கலம்பகம்
- திருப்பாதிரிப் புலியூர் கலம்பகம்
- தில்லைக் கலம்பகம்
- திருவாமாத்தூர்க் கலம்பகம்
- ஞான விநோதன் கலம்பகம்
- மதுரைக் கலம்பகம்
- காசிக் கலம்பகம்
- திருவெங்கைக் கலம்பகம்
- திருஅருணைக் கலம்பகம்
- திருச்செந்திற் கலம்பகம்
- புள்ளிருக்குவேளூர்க் கலம்பகம்
- திருக்காவலூர்க் கலம்பகம்
- வாட்போக்கிக் கலம்பகம்
- புதுவைக் கலம்பகம்
- நெல்லைக் கலம்பகம்
- திருவேங்கடக் கலம்பகம்
- திருவெண்ணெய்க் கலம்பகம்
- நசரைக் கலம்பகம்
- திருவிடைமருதூர்க் கலம்பகம்
- அழகர் கலம்பகம்
- திருக்கழுக்குன்றக் கலம்பகம்
- திருவொற்றியூர்க் கலம்பகம்
- சீகாளத்திக் கலம்பகம்
- வீரமாமுனிவர் கலம்பகம்
- திருக்கண்ணப்புரக் கலம்பகம்
- மதீனக் கலம்பகம்
- குன்றக்குடிக் கலம்பகம்
- குமரக்கோட்டக் கலம்பகம்
- மகிழ்மாக் கலம்பகம்
- கச்சிக் கலம்பகம்
- பேரைக் கலம்பகம்
- கண்ணப்பர் கலம்பகம்
- கோவைக் கலம்பகம்
- திருப்போரூர் வேம்படி விநாயகர் கலம்பகம்
- திருச்சிற்றம்பல தேசிகர் கலம்பகம்
- திருமுருகன் கலம்பகம்
- திருஞானசம்பந்தர் கலம்பகம்
- திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் கலம்பகம்
- நவநீதிகிருட்டிணன் கலம்பகம்
- திருமயிலாசலக் கலம்பகம்
- குறுக்குத்துறை கலம்பகம்
மதிப்பீடு
சிற்றிலக்கியங்களில் ஒன்றான கலம்பக இலக்கியங்களின் தொகுப்பாக சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி – 3 அமைந்துள்ளது. தமிழின் குறிப்பிடத்தகுந்த கலம்பக நூல்கள் பலவும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமிழாய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் பயன்படும் எளிதில் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
உசாத்துணை
- சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-1, பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: டிசம்பர், 2015.
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.