standardised

உருவாக்கக் கால எழுத்துகள்

From Tamil Wiki
Revision as of 18:22, 11 March 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)

தமிழில் நவீன உரைநடைப்புனைவுகள் உருவாகி வந்த காலகட்டத்தைச் சேர்ந்த படைப்புக்கள் உருவாக்ககால எழுத்துக்கள் எனப்படுகின்றன. இவை மரபான இலக்கியக் கதைகள், செவிவழிக் கதைகள், நாட்டார் கதைகள் ஆகியவற்றை உரைநடையில் சொல்லும் பாணியில் அமைந்தவை. பின்னர் ஆங்கிலம் வழியாக ஐரோப்பிய இலக்கியங்களை தழுவி எழுதப்பட்ட எழுத்துக்கள் உருவாயினர். உரைநடை இலக்கியம் தமிழில் உருக்கொள்வதற்கான எல்லா வழிகளும் இந்த வகை எழுத்துக்களில் பரிசீலிக்கப்பட்டுள்ளன. பொதுவாக 1850 முதல் 1900 வரையிலான எழுத்துக்களை இவ்வகையில் சேர்ப்பதுண்டு. இவ்வகை எழுத்துக்கள் மேலும் இருபதாண்டுகள் வந்துகொண்டிருந்தன.

பார்க்க: நவீனத் தமிழிலக்கியம்

நூல்பட்டியல்

  • வசனசம்பிரதாயக் கதை - முத்துக்குட்டிப் புலவர்
  • அசன்பே சரித்திரம் - சித்தி லெவ்வை மரைக்காயர் - 1885
  • பிரேமகலாவத்யம் - திரிசிரபுரம் சு.வை.குருசாமி சர்மா - 1893
  • மோகனாங்கி - தி.தசரவணமுத்துப்பிள்ளை - 1895
  • தானவன் என்ற போலிஸ் நிபுணன் கண்டுபிடித்த அற்புத குற்றங்கள் - பண்டித ச.ம.நடேச சாஸ்திரி - 1900
  • தீனதயாளு - பண்டித ச.ம.நடேச சாஸ்திரி -1902
  • திக்கற்ற இரு குழந்தைகள் - பண்டித ச.ம.நடேச சாஸ்திரி - 1902
  • கோமளம் குமரியானது - பண்டித ச.ம.நடேச சாஸ்திரி - 1903
  • மாமி கொலுவிருக்கை - பண்டித ச.ம.நடேச சாஸ்திரி - 1903
  • மதிகெட்ட மனைவி - பண்டித ச.ம.நடேச சாஸ்திரி -1903
  • தலையணை மந்திரோபதேசம் - பண்டித ச.ம.நடேச சாஸ்திரி - 1903
  • வந்தோத்யானம் - பண்டித ச.ம.நடேச சாஸ்திரி - 1904
  • ஞானப்பிரகாசம் -ராஜாத்தி அம்மாள் - 1897
  • கமலினி - சருக்கை ராமசாமி ஐயங்கார் - 1897
  • ஞானபூஷணி - வி.நடராஜ ஐயர் - 1897
  • மீதி இருள் - அருமைநாயகம் - 1898
  • மதிவாணன் - சூரியநாராயண சாஸ்திரி (பரிதிமாற்கலைஞர்) -1898
  • லீலை - பலராமய்யர் - 1898
  • ஜீவரத்தினம் - மயிலை இராமலிங்க முதலியார் - 1901
  • மோகனசுந்தரி - மயிலை இராமலிங்க முதலியார் - 1901
  • பங்கஜவல்லி - மயிலை இராமலிங்க முதலியார் - 1901
  • ராதாராணி - டி.ஏ.சாமிநாதய்யர் - 1901
  • மரகதவல்லி - ப.சி.கோவிந்தசாமி ராஜா - 1902
  • ஹனுமான் சிங் - பிரணதார்த்திஹர சிவம் - 1902
  • மங்கம்மாள்- கூடலிங்கம் பிள்ளை - 1902
  • கமலாக்ஷி - தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளை - 1910
  • விஜயசுந்தரம் - தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளை - 1913
  • ஞானசுந்தரம் - தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளை - 1910
  • ஞானாம்பிகை - தி.ம.பொன்னுச்சாமிப் பிள்ளை - 1913
  • சிவஞானம் - தி.ம.பொன்னுச்சாமிப்பிள்ளை - 1920
  • ஞானப்பிரகாசம் - தி.ம.பொன்னுச்சாமிப்பிள்ளை - 1920
  • மணவினை கெடுத்தது ஒரு பெண் வேலை - ம.கொ.விஜயராகவ முதலியார் - 1904
  • விவேகரச வீரன் கதை - பாலசுப்ரமணிய பிள்ளை - 1905
  • ஸுஜாதா - பண்டிதை விசாலாட்சி அம்மாள் - 1905
  • வனஸுதா - பண்டிதை விசாலாட்சி அம்மாள் - 1908
  • விஜயலக்ஷ்மி - தேவகுஞ்சரி அம்மாள் - 1907
  • மீனலோசனி - மு.கோவிந்தசாமி ஐயர் - 1909
  • சத்தியவல்லி - ஆர்.பி.குழந்தைச்சாமிப்பிள்ளை - 1909
  • அக்ஞாதவாசம் அல்லது மாண்டவர் மீண்ட மாயம் - பி.எஸ்.நாராயணசாமி ஐயர் - 1912
  • கோமதி கோகிலமானது - என்.ஆர்.சுப்ரமணிய சர்மா - 1911
  • பத்மரேகை அல்லது கற்பகச்சோலை ரகசியம் - நாகை சி.கோபாலகிருஷ்ண பிள்ளை - 1912
  • தனபாலன் - நாகை சி.கோபாலகிருஷ்ண பிள்ளை - 1912
  • சந்திரோதயம் அல்லது அலைகடல் அரசி - நாகை சி.கோபாலகிருஷ்ண பிள்ளை - 1912
  • குமுதவல்லி - மறைமலையடிகள் - 1921
  • கோகிலாம்பாள் கடிதங்கள் - மறைமலையடிகள் - 1921
  • ஜயலக்ஷ்மி - வரகவி அ.சுப்ரமணிய பாரதி - 1912
  • ஜடாவல்லவர் - வரகவி அ.சுப்ரமணிய பாரதி - 1912
  • விஜயபாஸ்கரன் அல்லது ஒரு குற்றத்துக்கு ஒன்பது குற்றம்வரகவி - அ.சுப்ரமணிய பாரதி - 1922
  • வேலையின் கூலி அல்லது கள்வர் கவர்ந்த கல்யாணப்பெண் - எம்.எஸ்.கிருஷ்ணசாமி சர்மா - 1912
  • மங்கல்யப்பிச்சை அல்லது கற்புக்கரசி - ஏகாம்பர முதலியார் - 1912
  • ஜெயசீலன் - மீனாட்சிசுந்தரம்மாள் - 1912
  • கிருபாம்பிகை - சோ.ரா.சீனிவாச பிள்ளை - 1912
  • ஞானகாந்தி - செ.மு.ராஜு செட்டியார் - 1912
  • காதலி - செ.மு.ராஜுசெட்டியார் - 1912
  • அன்பானந்தம் - செ.மு.ராஜுசெட்டியார் - 1912
  • சந்திரசேகரி - செ.மு.ராஜுசெட்டியார் - 1922
  • நாகரீகம் - செ.மு.ராஜுசெட்டியார் - 1924
  • குசாவதி - செ.மு.ராஜுசெட்டியார் - 1926
  • செல்வராஜ - பி.ஆபிரகாம் - 1914
  • ராஜமகேந்திரம்பி - ஆபிரகாம் - 1914
  • ராஜாம்பாள் - பி.ஆபிரகாம் - 1914
  • நோறாமணி - டி.எஸ்.துரைசாமி - 1914
  • வசந்தா - டி.எஸ்.துரைசாமி - 1914
  • மனோகரி - டி.எஸ்.துரைசாமி - 1914
  • சரஸாட்சி - டி.எஸ்.துரைசாமி - 1914
  • கருங்குயில் குன்றத்துக் கொலை - டி.எஸ்.துரைசாமி - 1914
  • ரமணி - சு.அ.சுப்ரமணிய பிள்ளை - 1914
  • சாரதாம்பாள் சரித்திரம் - எஸ்.ஏ.ராமசாமி ஐயர் - 1914
  • விஜயகாருண்யம் - ஏ.பாலகிருஷ்ணபிள்ளை - 1914
  • பொற்றொடி - குருமலை சுந்தரம்பிள்ளை - 1914
  • ஜகஜ்ஜோதி - எஸ்.சாமிநாதய்யர் - 1915
  • பரிமளா - எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு - 1923
  • மருத்துவன் மகள் - மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை - 1927
  • தப்பிலி - மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை
  • பிரேமாகரன் - விசாலாட்சி அம்மாள் - 1933
  • ராஜலக்ஷ்மி - விசாலாட்சி அம்மாள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.