under review

முல்லைத் திணை

From Tamil Wiki
Revision as of 07:42, 17 August 2023 by Tamizhkalai (talk | contribs)

தமிழ்நாட்டு நிலப்பரப்பு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து வகை நிலங்களைக் கொண்டது. காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலம். முல்லை நிலக் கடவுள் மாயோன் என்னும் திருமால் . முல்லைத் திணையின் அக ஒழுக்கம் ஆற்றலும் ஆற்றல் நிமித்தமும்,

முல்லை நிலத்தின் முதற்பொருள்

  • காடும், காடு சார்ந்த பகுதிகளும் முல்லைத் திணை. முல்லை நிலத்தின் தெய்வம் மாயோன். 'மாயோன் மேய காடுறை உலகமும்’ என்கிறது தொல்காப்பியம்.
  • முல்லையின் பெரும்பொழுது: கார் காலம்
  • சிறுபொழுது: மாலைக் காலம்.

முல்லை நிலத்தின் கருப்பொருள்கள்

தெய்வம் மாயோன் (திருமால்)
மக்கள் ஆயர், ஆய்ச்சியர், இடையர் , இடைச்சியர், தோன்றல், கிழத்தி
ஊர் பாடி, சேரி
உணவு வரகு, சாமை, பால், நெய்
தொழில் ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல், கால்நடை வளர்ப்பு
நீர் காட்டாறு
மரங்கள் கொன்றை, காயா, குருந்து
மலர்கள் முல்லை, தோன்றி
விலங்குகள் மான், முயல், பசு, ஆடு, மரை
பறவைகள் காட்டுக் கோழி, கருடன்
பண் சாதாரிப்பண்
யாழ் குழல், யாழ்
பறை ஏறுகோட்பறை

முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள்

  • அக ஒழுக்கம்: பிரிவுத்துயரை ஆற்றியிருத்தல்
  • புற ஒழுக்கம்: வஞ்சித் திணை (பகைவரை வெல்ல வஞ்சினம் கூறி வஞ்சிப்பூச் சூடிப் போருக்குப் புறப்படுதல்)

முல்லைத் திணைப் பாடல்கள்

முல்லைப்பாட்டு, ஐங்குறுநூறு, கலிதொகை, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை போன்ற சங்க இலக்கிய நூல்களில் முல்லைத் திணை பற்றிய பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

உசாத்துணை


✅Finalised Page