இலக்கியச் சிந்தனை சிறந்த சிறுகதைகள்-1992
From Tamil Wiki
இலக்கியச் சிந்தனை அமைப்பு பிப்ரவரி 28, 1970-ல் தொடங்கப்பட்டது. இலக்கிய ஆர்வலர்களான ப. லட்சுமணன், ப. சிதம்பரம், ஆர். அனந்தகிருஷ்ண பாரதி மூவரும் இணைந்து சென்னையில் இவ்வமைப்பைத் தொடங்கினர். தமிழ் இதழ்களில் மாதந்தோறும் வெளிவரும் சிறுகதைகளில் சிறந்த சிறுகதையைத் தேர்ந்தெடுப்பதுடன், ஆண்டுதோறும் அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக இவ்வமைப்பு வெளியிட்டது. சிறந்த சிறுகதையை எழுதிய எழுத்தாளர் பரிசளித்துச் சிறப்பிக்கப்படுகிறார்.
இலக்கியச் சிந்தனை சிறுகதைகள் பட்டியல்-1992
மாதம் | சிறுகதைத் தலைப்பு | ஆசிரியர் | இதழ் |
---|---|---|---|
ஜனவரி | கலைந்துபோன கனவு ராஜ்யம் | இலங்கை சிவகுமார் | கணையாழி (இதழ்) |
பிப்ரவரி | பகிர்வின் சந்தோஷம் | சுப்ரபாரதிமணியன் | குங்குமம் |
மார்ச் | தடமாற்றம் | செம்பூர் ஜெயராஜ் | கணையாழி |
ஏப்ரல் | அவள் அறியாள் | என்.ஆர். தாசன் | கவிதாசரண் |
மே | ஜான்சி | அசோக்ராஜா | குங்குமம் |
ஜூன் | நசுக்கம் | சோ. தர்மன் | சுபமங்களா |
ஜூலை | சாபம் | பாவண்ணன் | கணையாழி |
ஆகஸ்ட் | ஏழு முனிக்கும் இளைய முனி! | சி.எம். முத்து | ஆனந்த விகடன் |
செப்டம்பர் | புவனாவும் வியாழக் கிரகமும் | ஆர்.சூடாமணி | புதிய பார்வை |
அக்டோபர் | சாம்ராஜ்யம் | களந்தை பீர்முகம்மது | தாமரை |
நவம்பர் | ஒரு நாள்... | பிரபஞ்சன் | அமுதசுரபி |
டிசம்பர் | ஒவ்வொரு கல்லாய்... | கந்தர்வன் | புதிய பார்வை |
1992-ம் ஆண்டின் சிறந்த சிறுகதை
1992-ம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக, சோ. தர்மன் எழுதிய ‘நசுக்கம்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரேமா நந்தகுமார் இக்கதையைத் தேர்ந்தெடுத்தார். மாதத்தின் சிறந்த சிறுகதையை இரா. முருகன் தேர்வு செய்தார்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
31-Jan-2023, 06:05:24 IST