சாகித்ய அகாதெமி பால் சாகித்ய புரஸ்கார் விருதுகள்
From Tamil Wiki
Revision as of 11:14, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
பால் சாகித்ய புரஸ்கார் விருது, சிறார் இலக்கியத்துக்குச் சிறந்த பங்களிப்பாற்றும் எழுத்தாளர்களுக்கு, சாகித்ய அகாதெமி நிறுவனத்தால், ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2010-ம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது.
பால் சாகித்ய புரஸ்கார்
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த சிறார் இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாதெமியின் பால் சாகித்ய புரஸ்கார் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2010-ம் ஆண்டு முதல் நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த குழந்தை இலக்கியப் படைப்பாளிக்கு, இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், தகுதிச்சான்றும், சால்வையும், கேடயமும் கொண்டது.
பால் சாகித்ய புரஸ்கார் விருதாளர்கள் (2022 வரை)
ஆண்டு | எழுத்தாளர் பெயர் | படைப்பு | நூலின் தன்மை |
---|---|---|---|
2010 | மா. கமலவேலன் | அந்தோணியின் ஆட்டுக்குட்டி | நாவல் |
2011 | ம.இலெ. தங்கப்பா | சோளக்கொள்ளை பொம்மை | கவிதைகள் |
2012 | கொ.மா. கோதண்டம் | காட்டுக்குள்ளே இசைவிழா | சிறுகதைத் தொகுப்பு |
2013 | ரேவதி (ஈ.எஸ். ஹரிஹரன்) | பவளம் தந்த பரிசு | சிறுகதைத் தொகுப்பு |
2014 | இரா. நடராசன் | விஞ்ஞான விக்கிரமாதித்தன் கதைகள் | சிறுகதைத் தொகுப்பு |
2015 | செல்லக்கணபதி | தேடல் வேட்டை | கவிதைகள் |
2016 | குழ. கதிரேசன் | ஒட்டு மொத்தப் பங்களிப்பிற்காக | ஒட்டு மொத்தப் பங்களிப்பு நூல்கள் |
2017 | வேலு சரவணன் | ஒட்டு மொத்தப் பங்களிப்பிற்காக | ஒட்டு மொத்தப் பங்களிப்பு நூல்கள் |
2018 | கிருங்கை சேதுபதி | சிறகு முளைத்த யானை | கவிதைகள் |
2019 | தேவி நாச்சியப்பன் | ஒட்டு மொத்தப் பங்களிப்பிற்காக | ஒட்டு மொத்தப் பங்களிப்பு நூல்கள் |
2020 | யெஸ். பாலபாரதி | மரப்பாச்சி சொன்ன ரகசியம் | நாவல் |
2021 | மு. முருகேஷ் | அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை | சிறுகதைத் தொகுப்பு |
2022 | ஜி. மீனாட்சி | மல்லிகாவின் வீடு | சிறுகதைத் தொகுப்பு |
உசாத்துணை
✅Finalised Page