under review

சுபமங்களா நெடுங்கதைகள்

From Tamil Wiki
Revision as of 07:18, 26 March 2023 by Logamadevi (talk | contribs)
சுபமங்களா இதழ்

சுபமங்களா மாத இதழ், ஶ்ரீராம் நிறுவனத்தால் 1988-ல் தொடங்கப்பட்டது. அனுராதா ரமணனின் ஆசிரியத்துவத்தில் பெண்களுக்கான இதழாக ஜனவரி 1991 வரை வெளிவந்தது. பிப்ரவரி 1991-ல் கோமல் சுவாமிநாதன் ஆசிரியர் பொறுப்பேற்றார். அது முதல் டிசம்பர் 1995 வரை அது ஓர் இலக்கிய இதழாக வெளிவந்தது.

சுபமங்களா நெடுங்கதைகள்

சுபமங்களா கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், குறுந்தொடர்கள் இவற்றோடு குறுநாவல் தன்மையுள்ள நீண்ட கதைகளையும் வெளியிட்டுள்ளது. சுபமங்களாவில் பல சோதனைக் கதைகள் வெளியாகியுள்ளன. புதிய தலைமுறையைச் சேர்ந்த இளம் படைப்பாளிகள் பலர் சுபமங்களாவில் தொடர்ந்து எழுதினர். பழைய எழுத்தாளர்களின் படைப்புக்களும் மறுவெளியீடு செய்யப்பட்டன. பெண் படைப்பாளிகளுக்கும் சுபமங்களா இடமளித்தது.

சுபமங்களா இதழ்களில் 16 நெடுங்கதைகள் வெளியாகியுள்ளன. . சா. கந்தசாமியின் 'சாந்தகுமாரி', மாத்தளை சோமுவின்' ஆயுதங்கள்', ஜெயமோகனின் 'மண்', ஐசக் அருமைராசனின் விடை தெரியாத விடுகதைகள், பிரபஞ்சனின் ’குமாரசாமியின் பகல் பொழுது’, கொத்தமங்கலம் சுப்புவின் 'மஞ்சள் விரட்டு', சாரு நிவேதிதாவின் 'பிளாட் நம்பர்: 27 திரிலோக்புரி', எஸ். ராமகிருஷ்ணனின் 'பெயரில்லாத ஊரின் பகல் வேளை', விமலாதித்த மாமல்லனின் 'ஒளி' போன்றவை இவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.

சுபமங்களா நெடுங்கதைகள் பட்டியல்

எண் எழுத்தாளர் ஆண்டு/மாதம் கதைத் தலைப்பு
1991
1 சா. கந்தசாமி பிப்ரவரி சாந்தகுமாரி
2 பிரபஞ்சன் மார்ச் குமாரசாமியின் பகல்பொழுது
3 மேலாண்மை பொன்னுசாமி ஏப்ரல் அந்நியம்
4 சூர்யகாந்தன் மே உயிருள்ள இறந்த காலங்கள்
5 ஐசக் அருமைராசன் ஜூன் விடைதெரியாத விடுகதைகள்
6 செ. யோகநாதன் அக்டோபர் சின்னஞ்சிறுமலர் மழையில் நனைந்து...
7 பிரபஞ்சன் நவம்பர் வர்க்கம்
8 மாத்தளை சோமு டிசம்பர் ஆயுதங்கள்
9 கொத்தமங்கலம் சுப்பு டிசம்பர் மஞ்சள் விரட்டு
1992
10 வெங்கட் பிப்ரவரி கோவலன் 1990
11 ஜெயமோகன் நவம்பர் மண்
1993
12 விக்ரமாதித்தியன் மார்ச் அம்மா ஏன் இப்படி?
13 சாருநிவேதிதா செப்டம்பர் பிளாக் நம்பர்: 27 திரிலேக்புரி
14 மேலாண்மை பொன்னுச்சாமி அக்டோபர் தழும்பு
15 எஸ். ராமகிருஷ்ணன் டிசம்பர் பெயரில்லாத ஊரின் பகல்வேளை
1994
16 விமலாதித்த மாமல்லன் ஜூலை ஒளி

உசாத்துணை


✅Finalised Page