முத்தையா தொண்டைமான்
From Tamil Wiki
- முத்தையா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: முத்தையா (பெயர் பட்டியல்)
- தொண்டைமான் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: தொண்டைமான் (பெயர் பட்டியல்)
முத்தையா தொண்டைமான் (பொ.யு.பதினெட்டாம் நூற்றாண்டு) தமிழறிஞர். திருநெல்வேலியில் தொண்டைமான் குடியில் பிறந்தவர். தொ.மு.சி. ரகுநாதன், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் ஆகியோரின் தந்தை
பிறப்பு, தனிவாழ்க்கை
முத்தையா தொண்டைமான் திருநெல்வேலியில் குடியேறிய தொண்டைமான் வம்சத்தின் ஒரு கிளையில் சிதம்பரத் தொண்டைமானின் மகனாகப் பிறந்தார்.
முத்தையா தன் முறைப்பெண்ணான முத்தம்மாளை மணந்தார். ஆலயக்கலை ஆய்வாளார் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் முற்போக்கு எழுத்தாளர் தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோர் இவருடைய மகன்கள்
இலக்கியப் பணி
முத்தையா தொண்டைமான் ஓவியர், கவிஞர், ஆங்கிலத்தில் புலமை கொண்டவர். இராமலிங்க வள்ளலார் மீது ஈடுபாடு கொண்டவர். அவரைப்போலவே கவிதைகளை எழுதினார்.
நூல்கள்
- திருவொற்றியூர் தியாகேசர் காதல்
- நெல்லை நாயகர் குறம்
- அருள் கடன் விண்ணப்பம்
- ஆட்கொண்ட பதிகம்
- பகவத் கீதை அகவல்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
18-Mar-2023, 18:42:14 IST