under review

பொதுவாசிப்பு எழுத்துக்கள்

From Tamil Wiki
Revision as of 13:16, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Link text corrected)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தமிழில் பொதுவாசிப்புக்கான எழுத்துக்கள் 1900 முதல் தொடங்கி ஐம்பதாண்டுகளில் பெரிய வணிக இயக்கமாக மாறின. இவை விமர்சகர்களால் வணிக எழுத்து, கேளிக்கை எழுத்து என்று வகைப்படுத்தப்பட்டன. இவை வாசகனை மகிழ்வூட்டும் நோக்கம் கொண்டவை. வாசகனுக்கு பிடிக்கும்படி மொழி, உருவம், பேசுபொருள் ஆகிய மூன்றையும் அமைத்துக்கொண்டவை. ஆகவே பரபரப்பு, மிகையுணர்வு,நாடகத்தன்மை மிக்க காட்சிகள், வாசகன் எளிதில் அடையாளம் காணத்தக்க மாதிரிக் கதாபாத்திரங்கள், மர்மம், திகில், திருப்பங்கள் ஆகியவை கொண்டவை. வாசகன் ஊகித்துக்கொள்ளவோ, சிந்திக்கவோ எதையும் விடுவதில்லை. வாசகனின் படைப்பு வளர்ச்சியடையவும் விடுவதில்லை.இவை வாசகனை ஆசிரியனை நோக்கி கொண்டுவருவதற்குப் பதிலாக ஆசிரியன் வாசகனை நோக்கிச் சென்று எழுதுபவை.

இந்தப் பிரிவினை அறுதியாகச் செய்யத்தக்கது அல்ல. பொதுவாசிப்புக்கான தளத்தில் வெற்றிபெற்ற இலக்கியப் படைப்புகளும் உண்டு. ஆயினும் தமிழில் இலக்கிய வரலாற்றை தொகுத்துக்கொள்ள இந்தப் பகுப்பு மிக உதவியானது.

பார்க்க நவீனத் தமிழிலக்கியம்

நாவல்கள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Nov-2023, 10:00:42 IST