under review

புனிதன்

From Tamil Wiki
புனிதன்

புனிதன் (சண்முகசுந்தரம்) தமிழ் எழுத்தாளர். குமுதம் இதழின் உதவி ஆசிரியர்களில் ஒருவர். சுந்தர பாகவதர் என்ற பெயரிலும் எழுதியிருக்கிறார்

வாழ்க்கை குறிப்பு

புனிதனின் இயற்பெயர் சண்முக சுந்தரம். தர்மபுரியில் பிறந்தவர். பள்ளியில் படிக்கையில் கி.ஆ.பெ. விஸ்வநாதம் நடத்திய தமிழ்நாடு இதழில் ஒட்டக்கூத்தன் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதினார். முருகு சுப்பிரமணியம் நடத்திய பொன்னி இதழிலும் எழுதியிருக்கிறார். கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் எல்.டி.எம். படித்தார். 1951-ல் ஐ.டி.ஐ.ரேடியோ மெக்கானிசம் துறையில் அரசு உதவிச் சம்பளத்தோடு படிக்கச் சேர்ந்தார்.

இதழியல்

புனிதன்

தி.நகரில் வடக்கு உஸ்மான் ரோடில் ஐடிஐ வளாகத்தில் தங்கியிருந்தபோது உஸ்மான் ரோடு குறுக்குத் தெருக்களில் ஒன்றான வியாசராவ் தெருவில் தமிழ்வாணன் தன் சகோதரர் ஆனாருனாவுடன் குடியிருந்தார். ஆனாருனா நடத்தி வந்த உணவகத்தில் சாப்பிட்டுவந்த ராயவரம் நடராசன் என்பவர் புனிதனின் ரேடியோமெக்கானிச வகுப்பு தோழர். அவர் புனிதனை அழைத்துச் சென்று தமிழ்வாணனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்வாணன் நடத்திவந்த கல்கண்டு இதழில் சண்முகம், சுந்தரம் என்ற பெயர்களில் ஒரே இதழில் இரு கதைகளை எழுதினார். 1952 ஜூன் மாதம் கல்கண்டு இதழில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். அங்கே ரா.கி.ரங்கராஜன் ஏற்கனவே உதவி ஆசிரியராக இருந்தார். புனிதன் கல்கண்டு இதழில் தேசபந்து என்ற பெயரில் எழுதினார்

குமுதம் ஆசிரியர் குழு. ரா.கி.ரங்கரானன் புனிதன் ஜ.ரா.சுந்தரேசன்

கல்கண்டு இதழில் இருந்து 1954-ல் குமுதம் இதழில் உதவியாசிரியராகச் சேர்ந்தார். ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், புனிதன் மூவரும் ஆசிரியர் எஸ்.ஏ.பி.அண்ணாமலையுடன் இணைந்து பணியாற்றி குமுதம் இதழை தமிழிலேயே அதிகமாக விற்கும் இதழாக மாற்றினர். புனிதன் தணிகை என்ற பெயரில் புகைப்படங்கள் எடுத்தார். சுந்தர பாகவதர் என்ற பெயரில் கதாகாலட்சேப பாணியில் கதைகளை எழுதினார். 1988-ல் குமுதத்தில் இருந்து ஓய்வுபெற்றபின் கல்கி நிறுவனம் வெளியிட்ட கோகுலம் இதழின் ஆசிரியரானார்.

நூல்கள்

  • என்னைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
  • அப்புறம் என்ன ஆச்சு?
  • அவன் அவள் அது
  • ஆசைமுகம் மறந்துபோச்சே
  • குட்டி நட்சத்திரம்
  • இவர் அவரல்ல
  • பேருக்கு ஒரு மனைவி
  • கலா என் கிளாஸ்மேட்
  • 27 அடி+அழகி
  • அதோ அவன்தான்
  • ஒரு தரம் ஒரே தரம்
  • தந்தையுமானவன்
  • பெண்ணே பொய்மானே
  • அணைக்க அணைக்க
  • நெஞ்சுக்குள் வை

உசாத்துணை


✅Finalised Page