under review

தருமபுரம் ப. சுவாமிநாதன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected the links to Disambiguation page)
No edit summary
Line 1: Line 1:
{{OtherUses-ta|TitleSection=சுவாமிநாதன்|DisambPageTitle=[[சுவாமிநாதன் (பெயர் பட்டியல்)]]}}
{{OtherUses-ta|TitleSection=சுவாமிநாதன்|DisambPageTitle=[[சுவாமிநாதன் (பெயர் பட்டியல்)]]}}
[[File:Dharmapuram P. Swaminathan.jpg|thumb|தருமபுரம் ப. சுவாமிநாதன்]]
[[File:Dharmapuram P. Swaminathan.jpg|thumb|தருமபுரம் ப. சுவாமிநாதன்]]
தருமபுரம் ப. சுவாமிநாதன் (தருமபுரம் பஞ்சநாத முதலியார் சுவாமிநாதன்) (மே 29, 1923 – அக்டோபர் 15, 2009) தேவாரப் பேரறிஞர். தமிழிசை ஆய்வாளர். தேவாரத் திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு பண்ணிசையோடு அளித்தார். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பண்ணிசைப் பயிற்சி அளித்தார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
தருமபுரம் ப. சுவாமிநாதன் (தருமபுரம் பஞ்சநத முதலியார் சுவாமிநாதன்) (மே 29, 1923 – அக்டோபர் 15, 2009) தேவாரப் பேரறிஞர். தேவாரத் திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு பண்ணிசையோடு அளித்தார். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பண்ணிசைப் பயிற்சி அளித்தார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.


பிறப்பு, கல்வி
== வாழ்க்கைக் குறிப்பு ==
தருமபுரம் ப. சுவாமிநாதன், மே 29, 1923 அன்று, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள வீராக்கண் என்ற ஊரில், பஞ்சநத முதலியார் – பார்வதி அம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இயற்பெயர்: ராஜகோபால். உடன்பிறந்தோர் ஆறுபேர். தந்தை கணக்கராகப் பணியாற்றிய பூவனூரில் வளர்ந்தார். மேலபூவனூரில் உள்ள திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் பூவனூரில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.


[[Category:Tamil Content]]
== இசை வாழ்க்கை ==
{{Being created}}
சுவாமிநாதனின் வீட்டுக்கு அருகில் ஒரு [[தேவார (பெயர் பட்டியல்)|தேவார]]ப் பாடசாலை இருந்தது. அதிலிருந்து கேட்கும் பாடல் ஒலியால் கவரப்பட்டார். அவற்றைக் கேட்டுக் கேட்டு தேவார பக்திப் பாடல்களை உச்சரிப்பு சுத்தத்துடன் பாடும் திறன் பெற்றார். அது போலவே அவ்வூரில் இருந்த வேத பாடசாலையில் ஒலிக்கும் மந்திரங்களாலும் ஈர்க்கப்பட்டார். ஊரின் பெரிய பண்ணையார் வீட்டில் ஒலித்த எஸ்.வி. சுப்பையா பாகவதர், [[எஸ்.ஜி. கிட்டப்பா]] போன்றோரின் கிராமபோன் இசைப் பாடல்களால் ஈர்க்கப்பட்டார்.
 
ஒரு சமயம் சுவாமிநாதன் பாடுவதைக் கேட்ட உறவினர் சௌரிராஜ முதலியார், சுவாமிநாதனை [[தருமபுர ஆதீனம்|தருமபுர ஆதீன]] மடத்தில் உள்ள தேவாரப் பாடசாலையில் சேர்ந்து பயிலப் பரிந்துரைத்தார். அவ்வாறே தனது 12-ம் வயதில் தருமபுர ஆதீன மடத்துப் பள்ளியில் சேர்க்கப்பட்டார் சுவாமிநாதன். [[ஆர். வேலாயுத ஓதுவார்|ஆர். வேலாயுத ஓதுவா]]ரிடம் பண்ணிசை பயின்றார். கூடவே தருமபுர ஆதீனகர்த்தர் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரியாரின் அணுக்கத் தொண்டராகவும் பணியாற்றினார். அருள்நந்தித் தம்பிரானின் வழிகாட்டலில் தேவாரப் பயிற்சி பெற்றார். ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். ‘தேவார இசைமணி’ என்ற பட்டம் பெற்றார்.
 
சுவாமிநாதன், 25-வது ஆதினகர்த்தர் கயிலை சுப்பிரமணிய தேசிகர் எனும் சிவகுருநாதத் தம்பிரானின் அழைப்பின் பேரில் தருமபுர ஆதின ஓதுவாராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். தொடர்ந்து சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் [[சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை]]யின் வழிகாட்டலில் நான்கு ஆண்டுகள் இசை பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ‘சங்கீத பூஷணம்’ பட்டம் பெற்றார். மதுரை சுப்பிரமணிய முதலியாரிடம் மேலும் சில ஆண்டுகள் தம் இசைப் பயிற்சியைத் தொடர்ந்தார்.
 
== தனி வாழ்க்கை ==
தருமபுரம் ப. சுவாமிநாதன், 1981-ல், சுலோசனாவை மணந்துகொண்டார். இவர்களுக்கு மகப்பேறு இல்லை.
 
== இசைப் பணிகள் ==
தருமபுரம் ப. சுவாமிநாதன், தருமபுர ஆதீன தேவாரப் பாடசாலையில் [[பன்னிரு திருமுறை]] ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இசை கற்பித்தார். அவர்களுள் குடந்தை வி. லக்ஷ்மணன், [[திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார்]] போன்றோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.
 
தருமபுரம் ப. சுவாமிநாதன், யாழ்ப்பாணத்தில், 1960-களில் சைவ பரிபாலன சபை ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பண்ணிசை மாணவர்கள் பலரை உருவாக்கினார். 1968-ல் தருமபுர ஆதினத்தின் ஆசிரியர் பணியில் இருந்து விலகிய சுவாமிநாதன், தமிழகமெங்கும் சென்று [[தேவாரம் பாடல் பெற்ற திருத்தலங்கள்|தேவாரப் பாடல்கள்]] பாடும் பணியில் ஈடுபட்டார். இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று தமிழிசையைப் பரப்பினார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இசைப் பணியில் ஈடுபட்டார்.
 
== அமைப்புச் செயல்பாடுகள் ==
தருமபுரம் ப. சுவாமிநாதன் இசைப் பணியோடு கூடவே பல்வேறு ஆன்மிக, சமய நற்பணிகளை மேற்கொண்டார். பூந்தமல்லியில் உள்ள வைத்தியநாதர் ஆலயத்தில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்குச் செய்வித்தார். குன்றத்தூரில் உள்ள [[சேக்கிழார்]] கோயிலில் இருமுறை குடமுழுக்கு நடத்தினார். குன்றத்தூர் (திருநாகேஸ்வரம்) நால்வர் திருக்கோயில் திருப்பணியில் ஈடுபட்டு இருமுறை குடமுழுக்குச் செய்தார். 1969-ல், ’திருமுறை வழிபாட்டு அன்பர்கள் திருக்கூட்டம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஆலயங்கள் தோறும் தேவார முற்றோதல் பணிகளை மேற்கொண்டார். சென்னை, குன்றத்தூரில், ‘தருமபுரம் ப. சுவாமிநாதன் அறக்கட்டளை’ எனத் தம் பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவி, இசை மற்றும் ஆன்மிகம் சார்ந்த பணிகளை முன்னெடுத்தார்.
 
== வானொலி ==
தருமபுரம் ப. சுவாமிநாதன், 1952 முதல் சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் முதல் தர இசைக் கலைஞராகப் பணியாற்றினார். பல்வேறு பண்ணிசை நிகழ்ச்சிகளை வழங்கினார்.
 
== இசைப் பேழைகள் ==
தருமபுரம் சுவாமிநாதன் பாடிய பன்னிரு திருமுறைகள் ஒலிநாடாக்களாகவும், இசைப் பேழைகளாகவும் பதிவு செய்யப்பட்டு வெளியாகின. திருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள் 10,325 பாடல்களைத் தனது குரலில் பாடிப் பதிவு செய்தார். அவை மட்டுமில்லாமல், [[பட்டினத்தார்]] பாடல், [[தாயுமானவர்]] பாடல், [[திருப்புகழ்]], [[அபிராமி அந்தாதி]], திருமந்திரம், சொக்கநாத வெண்பா, [[கந்தர் கலிவெண்பா]], தட்சிணாமூர்த்தி திருவருட்பா, [[காரைக்கால் அம்மையார்]] பாடல்கள், திருமயிலைக் கற்பகாம்பிகை தோத்திரம், அம்பிகைத் தோத்திரம், [[திருவருட்பா]]வில் பல பாடல்கள் என ஆயிரக்கணக்கில் பல பாடல்களைப் பாடிப் பதிவு செய்தார். 12 இசைத்தட்டுக்களும், 800 ஒலிநாடாக்களும் தருமபுரம் ப. சுவாமிநாதனின் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
== தேவாரம் தளம் ==
தருமபுரம் ப. சுவாமிநாதன் பாடியுள்ள 10,325 பாடல்களுள், 393 பாடல்கள் தேவாரம்<ref>[https://thevaaram.org/index.php தேவாரம்]</ref> தளத்தில் அவரது குரலிலேயே கேட்கக் கிடைக்கின்றன.
 
== விருதுகள் ==
 
* தருமபுர ஆதினம் அளித்த ’தருமை ஆதீனத் திருமுறை இசைப் புலவர்’ பட்டம் மற்றும் மகரகண்டிகை
* தருமை ஆதீனத் தேவாரப் பாடசாலை வழங்கிய ‘தேவார இசைமணிப் பட்டம்’
* சென்னை தமிழ் இசைச் சங்கம் வழங்கிய ‘[[இசைப்பேரறிஞர்கள்|இசைப்பேரறிஞர்]]’ பட்டம்
* [[தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்]] அளித்த ’கலைமாமணி’ பட்டம்
* தமிழக அரசின் அரசவைக் கலைஞர்
* தமிழ்நாடு அரசின் 'மாநிலக் கலைஞர்' விருது
* இந்தியக் குடியரசுத் தலைவரின் விருது
* [[மதுரை ஆதீனம்]] அளித்த ‘திருமுறைத் திலகம்’ பட்டம்
* [[குன்றக்குடி அடிகளார்]] அளித்த ‘திருமுறை வித்தகர் பட்டம்’
* [[கிருபானந்த வாரியார்]] அளித்த ‘திருமுறை இசைக்கடல்’ பட்டம்
* திருச்சி திருமுறை மன்றம் அளித்த ‘திருமுறைச் சித்தர்’ பட்டம்
* சென்னை திருமுறைக் கூட்டம் அளித்த ‘திருநாவுடையார்’ பட்டம்
* தஞ்சை திருமுறைக் கூட்டம் அளித்த ‘திருமுறைப் பேரொளி’ பட்டம்
* சென்னை தெய்வத்தமிழ் மன்றம் அளித்த ‘அகில உலகத் திருமுறை இசைச் சக்கரவர்த்தி’
* [[இராமலிங்க வள்ளலார்|இராமலிங்கர்]] பணி மன்றம் வழங்கிய ‘இசைக்கலைச் செல்வர்’
* திருமுறை வழிபாட்டு அன்பர்கள் திருக்கூட்டம் அளித்த ‘அருளிசை அண்ணல்’
* சிதம்பரம் தீட்சிதர்கள் அளித்த ‘திருமுறை இசைப்பேரொளி’ பட்டம்
* வளவனூர் அன்பர்கள் அளித்த ‘இசைஞானியார்’ பட்டம்
* சென்னை மியூசிக் அகாடமி அளித்த டி.டி.கே. விருது
 
== மறைவு ==
தருமபுரம் ப. சுவாமிநாதன், அக்டோபர் 15, 2009 அன்று காலமானார்.
 
== மதிப்பீடு ==
தருமபுரம் ப. சுவாமிநாதன், பண்ணிசை மரபு வழுவாமல், தெளிவான குரல் மற்றும் உச்சரிப்புச் சுத்தத்துடன் திருமுறைப் பாடல்களைப் பாடியவர். நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர். அர்ப்பணிப்போடு அவர்களுக்கு இசை பயிற்றுவித்தார். தமிழிசை வளர்த்த மூத்த இசைக் கலைஞர்களுள் ஒருவராகவும், தேவாரத் திருமுறைகளைப் பல இடங்களுக்கும் பரவச் செய்த முன்னோடி இசை ஆசிரியராகவும், முன்னோடி பண்ணிசைக் கலைஞராகவும் மதிப்பிடப்படுகிறார்.
 
“பண்ணிசை உலகில் நம் தலைமுறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசைக்குப் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தவர்.” என்று மறவன்புலவு [[க. சச்சிதானந்தன்]] மதிப்பிட்டார்.
 
== உசாத்துணை ==
 
* [https://nganesan.blogspot.com/2009/10/dharmapuram-swaminathan.html நா. கணேசன் தளக் கட்டுரை]
* [https://www.dinamalar.com/dinam-dinam/on-the-same-day/on-the-same-day/4233234 தினமலர் தளக் கட்டுரை]
* [https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2009/Oct/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-90628.html தினமணி தள அஞ்சலிக் கட்டுரை]
* [https://www.youtube.com/watch?v=GpLVl8QAk8E&list=PL1EgcFeClKCTeXIa6vqnN16b61soWzKl_ தேவாரப் பாடல்கள், தருமபுரம் ப. சுவாமிநாதன்]
* [https://www.youtube.com/watch?v=H-tnRl_wCvg&list=RDH-tnRl_wCvg&start_radio=1&pp=ygVC4K6k4K6w4K-B4K6u4K6q4K-B4K6w4K6u4K-NIOCuqi4g4K6a4K-B4K614K6-4K6u4K6_4K6o4K6-4K6k4K6p4K-NoAcB திருவாசகப் பாடல்கள், தருமபுரம் ப. சுவாமிநாதன்]
* [https://www.youtube.com/watch?v=FCJjjuRQ4ig&list=PL1EgcFeClKCQMTGB0ui6__PCwyOlkFb-s திருப்புகழ்ப் பாடல்கள், தருமபுரம் ப. சுவாமிநாதன்]
* [https://www.youtube.com/watch?v=RuAo7w80qvk&list=PLnjj31Pfm9gqOmSFp3mOVo8qkWkFvCTFw திருவருட்பாப் பாடல்கள், தருமபுரம் ப. சுவாமிநாதன்]
* [https://www.youtube.com/watch?v=7KbOZOlHXEs தருமபுரம் ப. சுவாமிநாதன் நூற்றாண்டு விழா உரை]
* Dharmapuram Swaminathan – autobigraphical essay - 80th birthday malar
 
== அடிக்குறிப்பு ==
{{Ready for review}}

Revision as of 22:51, 1 June 2026

சுவாமிநாதன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுவாமிநாதன் (பெயர் பட்டியல்)
தருமபுரம் ப. சுவாமிநாதன்

தருமபுரம் ப. சுவாமிநாதன் (தருமபுரம் பஞ்சநத முதலியார் சுவாமிநாதன்) (மே 29, 1923 – அக்டோபர் 15, 2009) தேவாரப் பேரறிஞர். தேவாரத் திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு பண்ணிசையோடு அளித்தார். நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு பண்ணிசைப் பயிற்சி அளித்தார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உள்படப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு

தருமபுரம் ப. சுவாமிநாதன், மே 29, 1923 அன்று, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலம் அருகில் உள்ள வீராக்கண் என்ற ஊரில், பஞ்சநத முதலியார் – பார்வதி அம்மாள் இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இயற்பெயர்: ராஜகோபால். உடன்பிறந்தோர் ஆறுபேர். தந்தை கணக்கராகப் பணியாற்றிய பூவனூரில் வளர்ந்தார். மேலபூவனூரில் உள்ள திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர் பூவனூரில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார்.

இசை வாழ்க்கை

சுவாமிநாதனின் வீட்டுக்கு அருகில் ஒரு தேவாரப் பாடசாலை இருந்தது. அதிலிருந்து கேட்கும் பாடல் ஒலியால் கவரப்பட்டார். அவற்றைக் கேட்டுக் கேட்டு தேவார பக்திப் பாடல்களை உச்சரிப்பு சுத்தத்துடன் பாடும் திறன் பெற்றார். அது போலவே அவ்வூரில் இருந்த வேத பாடசாலையில் ஒலிக்கும் மந்திரங்களாலும் ஈர்க்கப்பட்டார். ஊரின் பெரிய பண்ணையார் வீட்டில் ஒலித்த எஸ்.வி. சுப்பையா பாகவதர், எஸ்.ஜி. கிட்டப்பா போன்றோரின் கிராமபோன் இசைப் பாடல்களால் ஈர்க்கப்பட்டார்.

ஒரு சமயம் சுவாமிநாதன் பாடுவதைக் கேட்ட உறவினர் சௌரிராஜ முதலியார், சுவாமிநாதனை தருமபுர ஆதீன மடத்தில் உள்ள தேவாரப் பாடசாலையில் சேர்ந்து பயிலப் பரிந்துரைத்தார். அவ்வாறே தனது 12-ம் வயதில் தருமபுர ஆதீன மடத்துப் பள்ளியில் சேர்க்கப்பட்டார் சுவாமிநாதன். ஆர். வேலாயுத ஓதுவாரிடம் பண்ணிசை பயின்றார். கூடவே தருமபுர ஆதீனகர்த்தர் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரியாரின் அணுக்கத் தொண்டராகவும் பணியாற்றினார். அருள்நந்தித் தம்பிரானின் வழிகாட்டலில் தேவாரப் பயிற்சி பெற்றார். ஆறு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். ‘தேவார இசைமணி’ என்ற பட்டம் பெற்றார்.

சுவாமிநாதன், 25-வது ஆதினகர்த்தர் கயிலை சுப்பிரமணிய தேசிகர் எனும் சிவகுருநாதத் தம்பிரானின் அழைப்பின் பேரில் தருமபுர ஆதின ஓதுவாராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றினார். தொடர்ந்து சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் வழிகாட்டலில் நான்கு ஆண்டுகள் இசை பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். ‘சங்கீத பூஷணம்’ பட்டம் பெற்றார். மதுரை சுப்பிரமணிய முதலியாரிடம் மேலும் சில ஆண்டுகள் தம் இசைப் பயிற்சியைத் தொடர்ந்தார்.

தனி வாழ்க்கை

தருமபுரம் ப. சுவாமிநாதன், 1981-ல், சுலோசனாவை மணந்துகொண்டார். இவர்களுக்கு மகப்பேறு இல்லை.

இசைப் பணிகள்

தருமபுரம் ப. சுவாமிநாதன், தருமபுர ஆதீன தேவாரப் பாடசாலையில் பன்னிரு திருமுறை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பல நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இசை கற்பித்தார். அவர்களுள் குடந்தை வி. லக்ஷ்மணன், திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார் போன்றோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

தருமபுரம் ப. சுவாமிநாதன், யாழ்ப்பாணத்தில், 1960-களில் சைவ பரிபாலன சபை ஆதரவில் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து பண்ணிசை மாணவர்கள் பலரை உருவாக்கினார். 1968-ல் தருமபுர ஆதினத்தின் ஆசிரியர் பணியில் இருந்து விலகிய சுவாமிநாதன், தமிழகமெங்கும் சென்று தேவாரப் பாடல்கள் பாடும் பணியில் ஈடுபட்டார். இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று தமிழிசையைப் பரப்பினார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக இசைப் பணியில் ஈடுபட்டார்.

அமைப்புச் செயல்பாடுகள்

தருமபுரம் ப. சுவாமிநாதன் இசைப் பணியோடு கூடவே பல்வேறு ஆன்மிக, சமய நற்பணிகளை மேற்கொண்டார். பூந்தமல்லியில் உள்ள வைத்தியநாதர் ஆலயத்தில் திருப்பணிகளை மேற்கொண்டு குடமுழுக்குச் செய்வித்தார். குன்றத்தூரில் உள்ள சேக்கிழார் கோயிலில் இருமுறை குடமுழுக்கு நடத்தினார். குன்றத்தூர் (திருநாகேஸ்வரம்) நால்வர் திருக்கோயில் திருப்பணியில் ஈடுபட்டு இருமுறை குடமுழுக்குச் செய்தார். 1969-ல், ’திருமுறை வழிபாட்டு அன்பர்கள் திருக்கூட்டம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஆலயங்கள் தோறும் தேவார முற்றோதல் பணிகளை மேற்கொண்டார். சென்னை, குன்றத்தூரில், ‘தருமபுரம் ப. சுவாமிநாதன் அறக்கட்டளை’ எனத் தம் பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவி, இசை மற்றும் ஆன்மிகம் சார்ந்த பணிகளை முன்னெடுத்தார்.

வானொலி

தருமபுரம் ப. சுவாமிநாதன், 1952 முதல் சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் முதல் தர இசைக் கலைஞராகப் பணியாற்றினார். பல்வேறு பண்ணிசை நிகழ்ச்சிகளை வழங்கினார்.

இசைப் பேழைகள்

தருமபுரம் சுவாமிநாதன் பாடிய பன்னிரு திருமுறைகள் ஒலிநாடாக்களாகவும், இசைப் பேழைகளாகவும் பதிவு செய்யப்பட்டு வெளியாகின. திருமுறையில் உள்ள 18,246 பாடல்களுள் 10,325 பாடல்களைத் தனது குரலில் பாடிப் பதிவு செய்தார். அவை மட்டுமில்லாமல், பட்டினத்தார் பாடல், தாயுமானவர் பாடல், திருப்புகழ், அபிராமி அந்தாதி, திருமந்திரம், சொக்கநாத வெண்பா, கந்தர் கலிவெண்பா, தட்சிணாமூர்த்தி திருவருட்பா, காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமயிலைக் கற்பகாம்பிகை தோத்திரம், அம்பிகைத் தோத்திரம், திருவருட்பாவில் பல பாடல்கள் என ஆயிரக்கணக்கில் பல பாடல்களைப் பாடிப் பதிவு செய்தார். 12 இசைத்தட்டுக்களும், 800 ஒலிநாடாக்களும் தருமபுரம் ப. சுவாமிநாதனின் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தேவாரம் தளம்

தருமபுரம் ப. சுவாமிநாதன் பாடியுள்ள 10,325 பாடல்களுள், 393 பாடல்கள் தேவாரம்[1] தளத்தில் அவரது குரலிலேயே கேட்கக் கிடைக்கின்றன.

விருதுகள்

  • தருமபுர ஆதினம் அளித்த ’தருமை ஆதீனத் திருமுறை இசைப் புலவர்’ பட்டம் மற்றும் மகரகண்டிகை
  • தருமை ஆதீனத் தேவாரப் பாடசாலை வழங்கிய ‘தேவார இசைமணிப் பட்டம்’
  • சென்னை தமிழ் இசைச் சங்கம் வழங்கிய ‘இசைப்பேரறிஞர்’ பட்டம்
  • தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் அளித்த ’கலைமாமணி’ பட்டம்
  • தமிழக அரசின் அரசவைக் கலைஞர்
  • தமிழ்நாடு அரசின் 'மாநிலக் கலைஞர்' விருது
  • இந்தியக் குடியரசுத் தலைவரின் விருது
  • மதுரை ஆதீனம் அளித்த ‘திருமுறைத் திலகம்’ பட்டம்
  • குன்றக்குடி அடிகளார் அளித்த ‘திருமுறை வித்தகர் பட்டம்’
  • கிருபானந்த வாரியார் அளித்த ‘திருமுறை இசைக்கடல்’ பட்டம்
  • திருச்சி திருமுறை மன்றம் அளித்த ‘திருமுறைச் சித்தர்’ பட்டம்
  • சென்னை திருமுறைக் கூட்டம் அளித்த ‘திருநாவுடையார்’ பட்டம்
  • தஞ்சை திருமுறைக் கூட்டம் அளித்த ‘திருமுறைப் பேரொளி’ பட்டம்
  • சென்னை தெய்வத்தமிழ் மன்றம் அளித்த ‘அகில உலகத் திருமுறை இசைச் சக்கரவர்த்தி’
  • இராமலிங்கர் பணி மன்றம் வழங்கிய ‘இசைக்கலைச் செல்வர்’
  • திருமுறை வழிபாட்டு அன்பர்கள் திருக்கூட்டம் அளித்த ‘அருளிசை அண்ணல்’
  • சிதம்பரம் தீட்சிதர்கள் அளித்த ‘திருமுறை இசைப்பேரொளி’ பட்டம்
  • வளவனூர் அன்பர்கள் அளித்த ‘இசைஞானியார்’ பட்டம்
  • சென்னை மியூசிக் அகாடமி அளித்த டி.டி.கே. விருது

மறைவு

தருமபுரம் ப. சுவாமிநாதன், அக்டோபர் 15, 2009 அன்று காலமானார்.

மதிப்பீடு

தருமபுரம் ப. சுவாமிநாதன், பண்ணிசை மரபு வழுவாமல், தெளிவான குரல் மற்றும் உச்சரிப்புச் சுத்தத்துடன் திருமுறைப் பாடல்களைப் பாடியவர். நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர். அர்ப்பணிப்போடு அவர்களுக்கு இசை பயிற்றுவித்தார். தமிழிசை வளர்த்த மூத்த இசைக் கலைஞர்களுள் ஒருவராகவும், தேவாரத் திருமுறைகளைப் பல இடங்களுக்கும் பரவச் செய்த முன்னோடி இசை ஆசிரியராகவும், முன்னோடி பண்ணிசைக் கலைஞராகவும் மதிப்பிடப்படுகிறார்.

“பண்ணிசை உலகில் நம் தலைமுறையில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர். திருமுறைகளைப் பொருள் விளங்குமாறு இசைத்தவர். பண்ணிசைக்குப் பல்கலைக்கழகமாகவே திகழ்ந்தவர்.” என்று மறவன்புலவு க. சச்சிதானந்தன் மதிப்பிட்டார்.

உசாத்துணை

அடிக்குறிப்பு

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.