under review

திருவருட்பா

From Tamil Wiki
திருவருட்பா

திருவருட்பா (1867- 1888) வடலூர் இராமலிங்க வள்ளலார் எழுதிய பாடல்களின் தொகுப்பு. இதில் இராமலிங்க வள்ளலார் பாடிய 5818 பாடல்கள் உள்ளன. ஆறு திருமுறைகளாக இவை பகுக்கப்பட்டுள்ளன.

முன்முயற்சிகள்

இராமலிங்க வள்ளலாரின் பாடல்கள் எளிமையான நடையில் பெரும்பாலும் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பண்டாரப்பாடல்களின் சந்தங்களுடன் அமைந்திருந்தன. ஆகவே அவை அச்சில் வராமலேயே பெரும்புகழ்பெற்றிருந்தன. வழிபாடுகளில் அவற்றை பாடினார்கள். அவற்றை பாடி அலையும் பண்டாரங்கலும் இருந்தனர். 1860-கள் முதல் சிறு பதிப்பாளர்கள் குஜிலிப் பதிப்புகளாக அவற்றை வெளியிட்டு சந்தைகளில் விற்றுவந்தனர். அவை பாடபேதங்களும் பிழையும் மலிந்தவையாக இருப்பதைக் கண்ட வள்ளலாரின் மாணவர் இறுக்கம் இரத்தின முதலியார் முறையான பதிப்பு கொண்டுவர விரும்பினார். ஏடுகளையும் கைப்பிரதிகளையும் தொகுத்தனர். அவற்றை முன்னரே அச்சிட்டுவெளியிட்டவர்களைச் சந்தித்து பிழையுடன் அச்சிடவேண்டாமென தடுத்தாலும், இழப்பீட்டுப் பணம் கொடுத்தாலும் அவை அச்சில்வந்துகொண்டே இருந்தன. ஆனால் வள்ளலார் தன் கவிதைகள் நூல்வடிவில் வருவதை விரும்பவில்லை, ஆகவே அனுமதி கொடுக்கவில்லை.

இதுசார்ந்து இறுக்கம் இரத்தின முதலியார் ஏராளமான கடிதங்களை இராமலிங்க வள்ளலாருக்கு அனுப்பினார். வள்ளலார் பதிலளிக்காமையால் கைப்பிரதிகளை அனுப்பிவைக்கும்படியும் அவை வந்துசேரும்வரை ஒருவேளை உணவே உண்ணப்போவதாக அறிவித்தார். அதையடுத்து இராமலிங்க வள்ளலார் கைப்பிரதிகள் சிலவற்றை அனுப்பினார். ஆனால் ஐந்தாண்டுகளாகியும் அனுமதி வழங்கவில்லை 1865-ல் மீண்டும் இறுக்கம் இரத்தின முதலியார் கடிதம் எழுதி மன்றாடவே வள்ளலார் அனுமதி வழங்கி கடிதம் எழுதினார்.

அனுமதி பெற்றபின் இறுக்கம் இரத்தின முதலியார் தன் நண்பர்கள் புதுவை வேலு முதலியார், சிவானந்தபுரம் செல்வராய முதலியார், தொழுவூர் வேலாயுத முதலியார் ஆகியோருடன் இணைந்து நூலாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார்.

திருவருட்பா

பெயர்கள்

நூலில் ஆசிரியரின் பெயர் வெறுமே இராமலிங்கம் பிள்ளை என்று இருக்கவேண்டும் என்று இராமலிங்க வள்ளலார் சொன்னார். இராமலிங்க சாமிகள் என இருக்கவேண்டுமென மாணவர்கள் விரும்பினர். அதை இராமலிங்க வள்ளலார் ஏற்கவில்லை. நூலுக்கு பிரபந்தத் திரட்டு என்றுதான் பெயர் எண்ணப்பட்டது. ஆனால் தொழுவூர் வேலாயுத முதலியார் திருவருட்பா என்னும் பெயரை தெரிவுசெய்தார். இதை அவர் திருவருட்பா வரலாறு என்னும் தலைப்பில் எழுதிய கவிதைகளில் சொல்லியிருக்கிறார்.

திருவருட்பா வெளியீட்டுப் பணி 1860-ல் தொடங்கி 1867-ல் முடிவுற்றது. முதலில் முதல் நான்கு திருமுறைகளும் இராமலிங்க வள்ளலாரின் மேற்பார்வையில், அவருடைய ஏற்புடன் வெளியாகின என்பதை அவர் எழுதிய கடிதங்கள் காட்டுகின்றன. நூலில் ஆசிரியர் பெயர் திருவருட்பிரகாச வள்ளலார் என இருந்ததைக் கண்டு இராமலிங்க வள்ளலார் சீற்றம் அடைந்ததாகவும் அவர் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளை என்று போடவே சொல்லியிருந்ததாகவும் தொழுவூர் வேலாயுத முதலியார் குறிப்பிடுகிறார். பின்னர் அப்பெயரை திருவருட்பிரகாச வள்ளல் + ஆர் என பிரித்து அந்த ஆர் மட்டுமே தான் என்றும், வள்ளல் அதில் பேசப்பட்டிருக்கும் இறைவனே என்றும் இராமலிங்க வள்ளலார் விளக்கிக் கொண்டு அமைதியடைந்தார்.

வெளியீடு

முதல் நான்கு திருமுறைகள். முதல்பதிப்பு 1867-ல் தொழுவூர் வேலாயுத முதலியாரால் வெளியிடப்பட்டது. அதற்கு சோமசுந்தரம் செட்டியார் நிதியுதவி அளித்தார்

ஐந்தாம் திருமுறை 1880-ல் தொழுவூர் வேலாயுத முதலியாரால் வெளியிடப்பட்டது. வள்ளலார் மறைவுக்குப் பின் இது வெளிவந்தது

ஆறாம் திருமுறையை தொழுவூர் வேலாயுத முதலியார் வெளியிடவில்லை. 1885-ல் அது வேலூர் பத்மநாப முதலியார் அச்சிட பெங்களூர் இராகவலு நாயக்கர் உதவியுடன் வெளியானது. சோடசாவதானம் தி.க.சுப்பராயச் செட்டியார் பிழைதிருத்தினார். ம.லோகநாதச் செட்டியார் நிதியுதவி வழங்கினார்

அனைத்து திருமுறைகளும் அடங்கிய முழுத்தொகுப்பு பூவை கல்யாணசுந்தர முதலியார் பார்வையிட பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியாரால் 1892-ல் வெளியிடப்பட்டது இதில்தான் பிருங்கிமாநகரம் இராமசாமி முதலியார் எழுதிய இராமலிங்க வள்ளலாரின் வாழ்க்கைச்சுருக்கம் இடம்பெற்றது,.

விவாதம்

இந்நூலுக்கு திருவருட்பா என்று பெயரிட்டதை எதிர்த்து ஈழநாட்டு சைவஅறிஞர் ஆறுமுக நாவலர் கடுமையான கண்டனங்களை எழுதினார். இராமலிங்க வள்ளலாரின் மாணவர்கள் அதற்கு மறுப்புரை எழுதினர். இந்த விவாதம் காலப்போக்கில் தனிநபர் தாக்குதலாக மாறி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு வரை சென்றது. (அருட்பா மருட்பா விவாதம்)

நூல் அமைப்பு

இந்நூல் காலவரிசைப்படியோ பொருள்வரிசைப்படியோ ஆறாகப் பகுக்கப்படவில்லை என ப. சரவணன் ஆய்வாளர் கருதுகிறார் (அருட்பா- மருட்பா விவாதம் நூல்)இதை ஆறாக பகுக்க தொழுவூர் வேலாயுத முதலியார் சொல்லும் காரணங்கள் மூன்று. ஐந்தெழுத்தான நமச்சிவாய வுடன் ஓம் சேர்க்க ஆறு எழுத்து. ஆறு சமயங்கள். ஆறு அத்துவாக்களின் மேல் உறுபொருளை காட்டுகிறது. தன் கருத்துக்கள் மாறிவருவதை உணர்ந்த வள்ளலார் புதிய பாடல்களை அளிக்கவில்லை. அவற்றையும் மேற்கொண்டு அவர் எழுதவிருப்பவற்றையும் ஆறாம் திருமுறை என வகுத்தார். இளமையில் சென்னையில் இருந்தபோது வள்ளலார் பாடிய திருத்தணிகைப் பதிகங்கள் கைக்குக் கிடைக்கவில்லை. அவற்றை ஐந்தாம் திருமுறையாக வெளியிடலாம் என எண்ணினார். எஞ்சியவற்றை நான்கு திருமுறைகளாக பகுத்தார்.

முதல் திருமுறை

  • திருவடிப் புகழ்ச்சி
  • விண்ணப்பக் கலிவெண்பா
  • நெஞ்சறிவுறுத்தல்
  • சிவநேச வெண்பா
  • மகாதேவ மாலை
  • திருவருண் முறையீடு
  • வடிவுடை மாணிக்க மாலை
  • இங்கித மாலை

இரண்டாம் திருமுறை

  • புண்ணிய விளக்கம்
  • அருள் நாம விளக்கம்
  • ஸ்ரீ சிவசண்முக நாம ஸங்கீர்த்தன லகிரி
  • நமச்சிவாய ஸங்கீர்த்தன லகிரி
  • நற்றுணை விளக்கம்
  • திருவருள் வழக்க விளக்கம்
  • சிவபுண்ணியத் தேற்றம்
  • முத்தி உபாயம்
  • அவலத் தழுங்கல்
  • பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல்
  • அபராதத் தாற்றாமை
  • அருளியல் வினாவல்
  • திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம்
  • காட்சிப் பெருமிதம்
  • கொடைமடப் புகழ்ச்சி
  • திருவருள் வேட்கை
  • அபராத விண்ணப்பம்
  • அறிவரும் பெருமை
  • அருள்விடை வேட்கை
  • எழுத்தறியும் பெருமான் மாலை
  • நெஞ்சொடு நேர்தல்
  • திருப்புகழ் விலாசம்
  • திருச்சாதனத் தெய்வத் திறம்
  • தியாக வண்ணப் பதிகம்
  • ஆடலமுதப் பத்து
  • திருவடிச் சரண்புகல்
  • சிவானந்தப் பத்து
  • சந்நிதி முறையீடு
  • தவத்திறம் போற்றல்
  • நெஞ்சுறுத்த திருநேரிசை
  • சிகாமணி மாலை
  • கலி முறையீடு
  • எதிர்கொள் பத்து
  • நெஞ்சொடு நேர்தல்
  • நெஞ்சறை கூவல்
  • நெஞ்சைத் தேற்றல்
  • நெஞ்சறிவுறூஉ
  • நெடுமொழி வஞ்சிi
  • பற்றின் திறம் பகர்தல்
  • அடிமைத் திறத் தலைசல்
  • அவத்தொழிற் கலைசல்
  • நாள் அவத்து அலைசல்
  • அவல மதிக்கு அலைசல்
  • ஆனாவாழ்வின் அலைசல்
  • அருள் திறத்து அலைசல்
  • திருவிண்ணப்பம்
  • பிரசாத விண்ணப்பம்
  • வழிமொழி விண்ணப்பம்
  • சிறுமை விண்ணப்பம்
  • ஆற்றா விண்ணப்பம்
  • இரங்கல் விண்ணப்பம்
  • காதல் விண்ணப்பம்
  • பொருள் விண்ணப்பம்
  • கொடி விண்ணப்பம்
  • நாடக விண்ணப்பம்
  • திருவண்ண விண்ணப்பம்
  • மருட்கை விண்ணப்பம்
  • கொடைமட விண்ணப்பம்
  • சிறு விண்ணப்பம்
  • பெரு விண்ணப்பம்
  • திருக்காட்சிக் கிரங்கல்
  • திரு அருட் கிரங்கல்
  • எண்ணத் திரங்கல்
  • நெஞ்சு நிலைக் கிரங்கல்
  • தனிமைக் கிரங்கல்
  • கழிபகற் கிரங்கல்
  • அர்ப்பித் திரங்கல்
  • அச்சத் திரங்கல்
  • புறமொழிக் கிரங்கல்
  • கருணை பெறா திரங்கல்
  • திருவருட் பதிகம்
  • பிரசாதப் பதிகம்
  • பிரார்த்தனைப் பதிகம்
  • திருப்புகற் பதிகம்
  • சிந்தைத் திருப்பதிகம்
  • உய்கைத் திருப்பதிகம்
  • ஆனந்தப் பதிகம்
  • திருவண்ணப் பதிகம்
  • போற்றித் திருப்பதிகம்
  • விண்ணப்பப் பதிகம்
  • தரிசனப் பதிகம்
  • அபராத விண்ணப்பம்
  • கலி விண்ணப்பம்
  • கருணை விண்ணப்பம்
  • அடிமைப் பதிகம்
  • உள்ளப் பதிகம்
  • சரணப் பதிகம்
  • நெஞ்சொடு நெகிழ்தல்
  • பொதுத் தனித் திருவெண்பா
  • திருக்குறிப்பு நாட்டம்
  • தனித் திருப்புலம்பல்
  • பரம ராசியம்
  • திருப்புகழ்ச்சி
  • தனித் திருவிருத்தம்
  • அறநிலை விளக்கம்
  • அருள்நிலை விளக்கம்
  • திருமருந்தருள் நிலை
  • திருவருள் விலாசம்
  • சிவ சிதம்பர சங்கீர்த்தனம்
  • அம்மை திருப்பதிகம்
  • கலைமகளார் திருப்பதிகம்
  • ஆனந்த களிப்பு
  • பாங்கியர்க் கறிவுறுத்தல்
  • வெண்ணிலா
  • நடேசர் கொம்மி
  • சிலதா ஸம்வாதம்
  • நடேசர் கீர்த்தனை
  • வினா உத்தரம்
  • நற்றாய் கவன்றது
  • சல்லாப லகரி
  • வேட்கைக் கொத்து
  • தலைமகளின் முன்ன முடிபு

மூன்றாம் திருமுறை

  • திரு உலாப் பேறு
  • நாரையும் கிளியும் நாட்டுறு தூது
  • இரங்கன் மாலை
  • திரு உலா வியப்பு
  • சல்லாப வியன்மொழி
  • இன்பக் கிளவி
  • இன்பப் புகழ்ச்சி
  • திரு உலாத் திறம்
  • வியப்பு மொழி
  • புணரா விரகு பொருந்துறு வேட்கையின் இரங்கல்
  • குறி ஆராய்ச்சி
  • காட்சி அற்புதம்
  • ஆற்றாக் காதலின் இரங்கல்
  • திருக்கோலச் சிறப்பு
  • சோதிடம் நாடல்
  • திருஅருட் பெருமிதம்
  • காதற் சிறப்புக் கதுவா மாண்பு
  • ஆற்றா விரகம்
  • காதல் மாட்சி

நான்காம் திருமுறை

  • அன்பு மாலை
  • அருட்பிரகாச மாலை
  • பிரசாத மாலை
  • ஆனந்த மாலை
  • பத்தி மாலை
  • செளந்தர மாலை
  • அதிசய மாலை
  • அபராத மன்னிப்பு மாலை
  • ஆளுடைய பிள்ளையார் அருண்மாலைi
  • ஆளுடைய அரசுகள் அருண்மாலை
  • ஆளுடைய நம்பிகள் அருண்மாலை
  • ஆளுடைய அடிகள் அருண்மாலை

ஐந்தாம் திருமுறை

  • சித்தி விநாயகர் பதிகம்
  • வல்லபை கணேசர் பிரசாத மாலை
  • கணேசத் திருஅருள் மாலை
  • தனித் திருமாலை
  • பிரார்த்தனை மாலை
  • எண்ணப் பத்து
  • செழுஞ்சுடர் மாலை
  • குறைஇரந்த பத்து
  • ஜீவசாட்சி மாலை
  • ஆற்றா முறை
  • இரந்த விண்ணப்பம்
  • கருணை மாலை
  • மருண்மாலை விண்ணப்பம்
  • பொறுக்காப் பத்து
  • வேட்கை விண்ணப்பம்
  • ஆறெழுத் துண்மை
  • போக் குரையீடு
  • பணித்திறம் வேட்டல்
  • நெஞ்சொடு புலத்தல்
  • புன்மை நினைந் திரங்கல்
  • திருவடி சூட விழைதல்
  • ஆற்றா விரக்கம்
  • ஏழைமையின் இரங்கல்
  • பணித்திறஞ் சாலாப் பாடிழிவு
  • காணாப் பத்து
  • பணித்திறஞ் சாலாமை
  • குறை நேர்ந்த பத்து
  • முறையிட்ட பத்து
  • நெஞ்சவலங் கூறல்
  • ஆற்றாப் புலம்பல்
  • திருவருள் விழைதல்
  • புண்ணியநீற்று மான்மியம்
  • உறுதி உணர்த்தல்
  • எண்ணத் தேங்கல்
  • கையடை முட்டற் கிரங்கல்
  • அடியார்பணி அருளவேண்டல்
  • நாள் அவம்படாமை வேண்டல்
  • அன்பிற் பேதுறல்
  • கூடல் விழைதல்
  • தரிசனை வேட்கை
  • நாள்எண்ணி வருந்தல்
  • ஏத்தாப் பிறவி இழிவு
  • பவனிச் செருக்கு
  • திருவருள் விலாசப் பத்து
  • திருவருட் பேற்று விழைவு
  • செல்வச் சீர்த்தி மாலை
  • செவி அறிவுறுத்தல்
  • தேவ ஆசிரியம்
  • இங்கிதப் பத்து
  • போற்றித் திருவிருத்தம்
  • தனித் திருத்தொடை
  • தெய்வமணி மாலை
  • கந்தர் சரணப்பத்து
  • திருப்பள்ளித்தாமம் தாங்கல்
  • சண்முகர் கொம்மி
  • சண்முகர் வருகை
  • (பொது) தனித் திருமாலை
  • அருண்மொழி மாலை
  • இன்ப மாலை
  • கண் நிறைந்த கணவன்
  • இராமநாம சங்கீர்த்தனம்
  • இராமநாமப் பதிகம்
  • வீரராகவர் போற்றிப் பஞ்சகம்
  • இரேணுகை பஞ்சகம்
  • வைத்தியநாதர் பதிகம்
  • கண்ணமங்கைத் தாயார் துதி
  • பழமலைப் பதிகம்
  • பழமலையோ கிழமலையோ
  • பெரியநாயகியார் தோத்திரம்
  • அருணகிரி விளங்க வளர்ந்த சிவக்கொழுந்து
  • திருவோத்தூர் சிவஞான தேசிகன் தோத்திரம்
  • திருவோத்தூர் சிவஞானதேசிகன் திருச்சீர் அட்டகம்
  • திருமுகப் பாசுரம்
  • சிங்கபுரிக் கந்தர் பதிகம்
  • தெய்வத் தனித் திருமாலை
  • ஆனந்த நடனப் பதிகம்
  • சிவகாமவல்லி துதி
  • சிவ பரம்பொருள்
  • நடராஜ அலங்காரம்
  • முறையீட்டுக் கண்ணி
  • திருவடிக் கண்ணி
  • பேரன்புக் கண்ணி
  • மங்களம்

ஆறாம் திருமுறை

  • பரசிவ வணக்கம்
  • அருட்பெருஞ்ஜோதி அகவல்
  • அருட்பெருஞ்சோதி அட்டகம்
  • பதி விளக்கம்
  • சிவபதி விளக்கம்
  • ஆற்றாமை
  • நான் ஏன் பிறந்தேன்
  • மாயைவலிக் கழுங்கல்
  • முறையீடு
  • அடியார் பேறு
  • ஆன்ம விசாரத் தழுங்கல்
  • அவா அறுத்தல்
  • திருவருள் விழைதல்
  • சிற்சபை விளக்கம்
  • திருவடி முறையீடு
  • தற் சுதந்தரம் இன்மை
  • அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு
  • திருக்கதவந் திறத்தல்
  • பிள்ளைச் சிறு விண்ணப்பம்
  • பிள்ளைப் பெரு விண்ணப்பம்
  • சுத்த சன்மார்க்க வேண்டுகோள்
  • ஆன்ம தரிசனம்
  • சிவ தரிசனம்
  • வாதனைக் கழிவு
  • அனுபோக நிலயம்
  • தற்போத இழப்பு
  • மாயையின் விளக்கம்
  • அபயத் திறன்
  • பிரிவாற்றாமை
  • பிரியேன் என்றல்
  • திருவருட் பேறு
  • அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவர்
  • திருமுன் விண்ணப்பம்
  • இறை எளிமையை வியத்தல்
  • அபயம் இடுதல்
  • உண்மை கூறல்
  • அருள்விளக்க மாலை
  • வரம்பில் வியப்பு
  • திருவடிப் புகழ்ச்சி
  • கண்கொளாக் காட்சி
  • காட்சிக் களிப்பு
  • கண்டேன் கனிந்தேன் கலந்தேன் எனல்
  • இறை திருக்காட்சி
  • திருவடி நிலை
  • அச்சோப் பத்து
  • அருட்ஜோதி நிலை
  • பேரானந்தப் பெருநிலை
  • ஆண்டருளிய அருமையை வியத்தல்
  • இறைவனை ஏத்தும் இன்பம்
  • திருநடப் புகழ்ச்சி
  • பெறாப் பேறு
  • பொதுநடம்
  • திருவருட் பெருமை
  • அருள் ஆரமுதப் பேறு
  • உபதேச உண்மை
  • இறை இன்பக் குழைவு
  • அனுபவ நிலை
  • கைம்மாறின்மை
  • வேண்டுகோள்
  • உலப்பில் இன்பம்
  • செய்பணி வினவல்
  • ஆற்ற மாட்டாமை
  • திருப்பள்ளி எழுச்சி
  • திரு உந்தியார்
  • அடைக்கலம் புகுதல்
  • பற்றறுத்தல்
  • சிற்சத்தி துதி
  • பிரிவாற்றாமை
  • ஆனந்தானுபவம்
  • சிவபுண்ணியப் பேறு
  • அந்தோ பத்து
  • சன்மார்க்க நிலை
  • சிவானந்தப் பற்று
  • தலைவி தோழிக்கு உரைத்தல்
  • நற்றாய் கூறல்
  • பாங்கி தலைவிபெற்றி உரைத்தல்
  • தலைவி தலைவன் செயலைத் தாய்க் குரைத்தல்
  • தலைவி வருந்தல்
  • நற்றாய் செவிலிக்குக் கூறல்
  • திருவடிப் பெருமை
  • தோழிக் குரிமை கிளத்தல்
  • அருட்பெருஞ்சோதி அடைவு
  • அடிமைப் பேறு
  • உத்திரஞானசிதம்பர மாலை
  • திருவருட்பேறு
  • நெஞ்சோடு நேர்தல் (தில்லையும் பார்வதிபுரமும்)
  • கைம்மாறின்மை
  • பாமாலை ஏற்றல்
  • திருவருட் கொடை
  • உற்ற துரைத்தல்
  • அனுபவ சித்தி
  • இன்பத்திறன்
  • சிவயோக நிலை
  • அழிவுறா அருள்வடிவப் பேறு
  • பேரருள் வாய்மையை வியத்தல்
  • பொன்வடிவப் பேறு
  • நடராஜபதி மாலை
  • சற்குருமணி மாலை
  • தத்துவ வெற்றி
  • பேறடைவு
  • உய்வகை கூறல்
  • இறைவரவு இயம்பல்
  • தலைவி கூறல்
  • உலகர்க்கு உய்வகை கூறல்
  • புனித குலம் பெறுமாறு புகலல்
  • சுத்த சிவநிலை
  • ஞானசரியை (வாய்பறை ஆர்த்தல்)
  • சமாதி வற்புறுத்தல்
  • உலகப்பேறு
  • தனித் திருஅலங்கல்
  • நெஞ்சொடு கிளத்தல்
  • மெய்யருள் வியப்பு
  • அம்பலவாணர் வருகை
  • அம்பலவாணர் அணையவருகை
  • அம்பலவாணர் ஆடவருகை
  • ஆடேடி பந்து
  • ஞான மருந்து
  • சிவசிவ ஜோதி
  • ஜோதியுள் ஜோதி
  • அஞ்சாதே நெஞ்சே
  • இது நல்ல தருணம்
  • என்ன புண்ணியம் செய்தேனோ
  • வருவார் அழைத்துவாடி
  • பெரு வழக்கு
  • ஆடிய பாதம்
  • அபயம் அபயம் அபயம்
  • அற்புதம் அற்புதமே
  • ஆணிப்பொன்னம்பலக் காட்சி
  • அக்கச்சி
  • ஊதூது சங்கே
  • சின்னம் பிடி
  • கண்புருவப் பூட்டு
  • பிரபஞ்ச வெற்றி
  • அம்பலத்தரசே
  • போகம் சுகபோகம்
  • சூதுமன்னு மிந்தையே
  • நடு நாடி
  • தங்குறுவம்பு
  • பொது நிலை அருள்வது
  • வான சிற்கன
  • ஒதவடங்காது
  • விரைசேர் சடையாய்
  • பசியாத அமுதே
  • நீடிய வேதம்
  • வேத சிகாமணியே
  • பத நம்புறு
  • அனுபவ மாலை
  • சத்திய வார்த்தை
  • சத்திய அறிவிப்பு
  • ஜோதி ஜோதி

இலக்கிய இடம்

வள்ளலாரின் திருவருட்பா தமிழில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய முதன்மையான பக்தி இலக்கியமாக மதிப்பிடப்படுகிறது. வள்ளலார் எழுதிய பக்திசார்ந்த சிறுநூல்களின் தொகுப்பாகிய இது வள்ளலார் மரபினரால் சைவத் திருமுறைகளின் நிலையில் வைத்து பயிலப்படுகிறது. உள்ளடக்க அடிப்படையில் இந்நூல் தமிழின் சிற்றிலக்கியங்களின் மரபைச் சேர்ந்தது. பக்தியுடன் தமிழ் அகத்துறை சார்ந்த உளநிலைகளையும் இணைத்துக் கொண்ட பாடல்களும் இதில் உள்ளன. பக்திக்குரிய நெகிழ்வான, கற்பனாவாதம் சார்ந்த உளநிலைகொண்ட இப்பாடல்கள் இசைத்தன்மையும் எளிமையான நேரடி மொழியமைப்பும் கொண்டவை. மரபான அணிகளும் சொல்லழகும் கொண்டவை ஆயினும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குரிய வாழ்க்கைக்கூறுகளும் கவித்துவமாக பயின்றுவருகின்றன. தமிழ் மரபிலக்கியத்தின் இறுதிப்பெரும்படைப்பு என்று திருவருட்பா மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:20 IST