முழுமையறிவு: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
[[File:Muzu.jpeg|thumb|முழுமையறிவு]] | [[File:Muzu.jpeg|thumb|முழுமையறிவு]] | ||
[[File:A class.jpg|thumb|முழுமையறிவு ஒரு வகுப்பு]] | [[File:A class.jpg|thumb|முழுமையறிவு ஒரு வகுப்பு]] | ||
| Line 5: | Line 4: | ||
== தொடக்கம் == | == தொடக்கம் == | ||
[[File:Andhimazhai 2025-06-20 bp2o4t4j WhatsApp-Image-2025-06-19-at-11.14.49.jpg|thumb|முழுமையறிவு வகுப்பு]] | |||
எழுத்தாளர் [[ஜெயமோகன்]] இந்த அமைப்பை 2022ல் தொடங்கினார். குரு [[நித்ய சைதன்ய யதி]] கலை, இலக்கியம், அறிவியல், ஆன்மிகம் ஆகியவை இணைத்து கற்பிக்கப்படவேண்டும் என்னும் கொள்கை கொண்டிருந்தார். அவை ஒன்றையொன்று நிரப்புபவை என அவர் சொன்னார். அதன்பொருட்டு அவர் தொடங்கிய இயக்கம் மதிப்பீடுகளின் சேர்ந்திசை (Symphony of Values) என அழைக்கப்பட்டது. அந்த கண்ணோட்டத்தின் செயல்முறையையே முழுமையறிவு என ஜெயமோகன் வரையறை செய்தார். | எழுத்தாளர் [[ஜெயமோகன்]] இந்த அமைப்பை 2022ல் தொடங்கினார். குரு [[நித்ய சைதன்ய யதி]] கலை, இலக்கியம், அறிவியல், ஆன்மிகம் ஆகியவை இணைத்து கற்பிக்கப்படவேண்டும் என்னும் கொள்கை கொண்டிருந்தார். அவை ஒன்றையொன்று நிரப்புபவை என அவர் சொன்னார். அதன்பொருட்டு அவர் தொடங்கிய இயக்கம் மதிப்பீடுகளின் சேர்ந்திசை (Symphony of Values) என அழைக்கப்பட்டது. அந்த கண்ணோட்டத்தின் செயல்முறையையே முழுமையறிவு என ஜெயமோகன் வரையறை செய்தார். | ||
Revision as of 10:32, 17 September 2025
முழுமையறிவு (2022) தமிழ்நாட்டில் நிகழ்ந்து வரும் ஒரு தொடர்கல்விச் செயல்பாடு. தத்துவம், கலை, இலக்கியம், மருத்துவம் மற்றும் அகப்பயிற்சிகள் சார்ந்த வகுப்புகளை வாரந்தோறும் ஒருங்கிணைக்கும் அமைப்பு. ஜெயமோகன் இதை தன் குரு நித்ய சைதன்ய யதியின் வழிகாட்டுதலின்படி தொடங்கி ஒருங்கிணைக்கிறார். வெவ்வேறு துறைநிபுணர்கள் வகுப்புகளை நடத்தி வருகிறார்கள்.
தொடக்கம்
எழுத்தாளர் ஜெயமோகன் இந்த அமைப்பை 2022ல் தொடங்கினார். குரு நித்ய சைதன்ய யதி கலை, இலக்கியம், அறிவியல், ஆன்மிகம் ஆகியவை இணைத்து கற்பிக்கப்படவேண்டும் என்னும் கொள்கை கொண்டிருந்தார். அவை ஒன்றையொன்று நிரப்புபவை என அவர் சொன்னார். அதன்பொருட்டு அவர் தொடங்கிய இயக்கம் மதிப்பீடுகளின் சேர்ந்திசை (Symphony of Values) என அழைக்கப்பட்டது. அந்த கண்ணோட்டத்தின் செயல்முறையையே முழுமையறிவு என ஜெயமோகன் வரையறை செய்தார்.
இடம், வகுப்புகள்
ஜெயமோகன் ஈரோடு, அந்தியூர் அருகே நிறுவிய நித்யவனம் என்னும் மலைத்தங்குமிடத்தில் இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வார இறுதியிலும் வகுப்புகள் நிகழ்கின்றன. இவை ஜெயமோகனின் வலைத்தளம் (https://www.jeyamohan.in/) மற்றும் முழுமையறிவு இணையப்பக்கம் ( https://unifiedwisdom.guru/ ) ஆகியவற்றில் முறையாக அறிவிக்கப்படுகின்றன. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்படுகிறது. அறுபதுபேர் வரை ஒரு வகுப்பில் கலந்துகொள்ளலாம்.
துறைகள், ஆசிரியர்கள்
முழுமையறிவு வகுப்புகளில் வெவ்வேறு துறைகள் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
- ஜெயமோகன் (இந்திய தத்துவம்)
- நிஷா மன்சூர் (இஸ்லாமிய சூஃபி மெய்யியல்)
- சௌந்தரராஜன் (யோகப்பயிற்சி)
- சிறில் அலெக்ஸ் (கிறிஸ்தவ மெய்யியல்)
- வி. அமலன் ஸ்டேன்லி (பௌத்த மெய்யியல், விபாசனா)
- தில்லை செந்தில்பிரபு (நவீன தியானம், உளக்குவிப்புப் பயிற்சி)
- ஏ.வி. மணிகண்டன் (நவீன மேலைநாட்டு காட்சிக்கலை)
- எஸ். ஜெயக்குமார் (இந்திய ஆலயச்சிற்பக்கலை, மரபிசை)
- மரபின்மைந்தன் முத்தையா (மரபிலக்கியம், சைவம்)
- ஜா. ராஜகோபாலன் ( வைணவதத்துவம், பிரபந்தம்)
- சுனில் கிருஷ்ணன் (ஆயுர்வேதம்)
- அஜிதன் (மேலைத்தத்துவம், மேலை மரபிசை)
- மாரிராஜ் (நவீன மருத்துவம்)
- லோகமாதேவி (தாவரவியல் அறிமுகம்)
- விஜயசாரதி (பறவை அறிமுகம்)
- ஈஸ்வரமூர்த்தி (பறவை அறிமுகம்)
- ஃபயாஸ் காதிரி ( உருது இலக்கியம், கஸல் அறிமுகம்)
