ஜி. நாகராஜன்: Difference between revisions
Line 2: | Line 2: | ||
ஜி. நாகராஜன் (செப்டம்பர் 1, 1929 – பிப்ரவரி 19, 1981) தமிழ் எழுத்தாளர். நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். பாலியல் தொழிலாளர்கள், குற்றவாளிகள் ஆகியோரின் அடித்தள உலகை சித்தரிப்பவை இவருடைய எழுத்துக்கள். மனிதாபிமானநோக்கோ விமர்சனப்பார்வையோ இல்லாமல் அங்கதப்பார்வையுடன் அவ்வுலகை உருவாக்கிக் காட்டுபவை. கட்டற்ற வாழ்க்கைமுறை கொண்டவர் என்பதனாலும் ஒரு தீவிரமான ஆளுமைப்பிம்பம் இவருக்கு உள்ளது | ஜி. நாகராஜன் (செப்டம்பர் 1, 1929 – பிப்ரவரி 19, 1981) தமிழ் எழுத்தாளர். நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். பாலியல் தொழிலாளர்கள், குற்றவாளிகள் ஆகியோரின் அடித்தள உலகை சித்தரிப்பவை இவருடைய எழுத்துக்கள். மனிதாபிமானநோக்கோ விமர்சனப்பார்வையோ இல்லாமல் அங்கதப்பார்வையுடன் அவ்வுலகை உருவாக்கிக் காட்டுபவை. கட்டற்ற வாழ்க்கைமுறை கொண்டவர் என்பதனாலும் ஒரு தீவிரமான ஆளுமைப்பிம்பம் இவருக்கு உள்ளது | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
ஜி. நாகராஜன், செப்டெம்பர் 1, 1929 அன்று ஜி.கணேசையரின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவதாக மதுரையில் பிறந்தார். | ஜி. நாகராஜன், செப்டெம்பர் 1, 1929 அன்று வழக்கறிஞராக பணியாற்றிய ஜி.கணேசையரின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவதாக மதுரையில் பிறந்தார். சிறு வயதில் தாயை இழந்த நாகராஜன் ஆரம்ப வருடங்களில் மதுரையில் தாய் வழிப்பாட்டி வீட்டிலும் பின்னர் திருமங்கலத்தில் தாய்மாமன் வீட்டிலும் வளர்ந்தார். இடையில் தந்தையார் அவரைத் தம்மிடம் அழைத்துக் கொண்டு பாடங்களைத் தாமே சொல்லிக் கொடுத்தார். எட்டு ஒன்பதாம் வகுப்புகளை திருமங்கலம் நாடார் உயர்நிலைப் பள்ளியில் தாய்மாமா வீட்டில் தங்கிப் படித்தார். மறுபடியும் பழனி சென்று 10,11 ஆம் வகுப்புகளை எம்.ஹெச். பள்ளியில் படித்தார். இவர் வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாகவே இருந்திருக்கிறார். கல்லூரிப் படிப்பை மதுரையில் மதுரைக் கல்லூரியில் மேற்கொண்டார். அப்போது கணிதத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்று சி.வி. ராமனிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். மதுரைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படித்துத் தேர்ச்சி பெற்றார். | ||
== அரசியல் == | == அரசியல் == | ||
ஜி. நாகராஜன் முதலில் காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் [[மதுரை அமெரிக்கன் கல்லூரி]]யில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்டுத் தலைவர் [[எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்)|எஸ்.ராமகிருஷ்ணன்]] ஜி.நாகராஜனின் சிந்தனையில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியவர். சரஸ்வதி ஆசிரியர் [[வ.விஜயபாஸ்கரன்|வ.விஜயபாஸ்கர]]னுடன் தொடர்ச்சியாக கடிதத்தொடர்பில் இருந்தார். கம்யூனிஸ்டுத் தலைவர்கள் பாலதண்டாயுதம், ஆர்.கே.கண்ணன் ஆகியோரையும் சந்தித்து உரையாடிவந்தார். ஜி.நாகராஜன் மற்ற எழுத்தாளர்களைப் போல கம்யூனிஸ்டுக் கட்சியின் மனிதாபிமான இலட்சியவாதக் கொள்கைகளாலோ, அரசியல்போராட்டங்களாலோ கவரப்பட்டு கட்சிக்குள் சென்றவர் அல்ல. கம்யூனிஸ்ட் தத்துவ அடிப்படையை முறையாக கற்று அதன் மீதான நம்பிக்கையில் கட்சியில் சேர்ந்தார். அக்காலகட்டத்தில் கட்சி சித்தாந்தங்களை முழுமையாக வாசித்தறிந்தவர் என்னும் இடம் அவருக்கு இருந்தது. | ஜி. நாகராஜன் முதலில் காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் [[மதுரை அமெரிக்கன் கல்லூரி]]யில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்டுத் தலைவர் [[எஸ்.ராமகிருஷ்ணன் (ஆய்வாளர்)|எஸ்.ராமகிருஷ்ணன்]] ஜி.நாகராஜனின் சிந்தனையில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியவர். சரஸ்வதி ஆசிரியர் [[வ.விஜயபாஸ்கரன்|வ.விஜயபாஸ்கர]]னுடன் தொடர்ச்சியாக கடிதத்தொடர்பில் இருந்தார். கம்யூனிஸ்டுத் தலைவர்கள் பாலதண்டாயுதம், ஆர்.கே.கண்ணன் ஆகியோரையும் சந்தித்து உரையாடிவந்தார். ஜி.நாகராஜன் மற்ற எழுத்தாளர்களைப் போல கம்யூனிஸ்டுக் கட்சியின் மனிதாபிமான இலட்சியவாதக் கொள்கைகளாலோ, அரசியல்போராட்டங்களாலோ கவரப்பட்டு கட்சிக்குள் சென்றவர் அல்ல. கம்யூனிஸ்ட் தத்துவ அடிப்படையை முறையாக கற்று அதன் மீதான நம்பிக்கையில் கட்சியில் சேர்ந்தார். அக்காலகட்டத்தில் கட்சி சித்தாந்தங்களை முழுமையாக வாசித்தறிந்தவர் என்னும் இடம் அவருக்கு இருந்தது. | ||
Line 20: | Line 20: | ||
மர்மம் எஞ்சும் ஒரு தீ விபத்தில் ஆனந்தி இறந்து போன பிறகு ஜி.நாகராஜன் 1962-ல் நாகலட்சுமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆனந்தி என்று ஒரு மகளும் கண்ணன் என்று ஒரு மகனும் உண்டு. ஆனால் ஜி.நாகராஜன் குறைவான காலமே குடும்பத்துடன் இருந்தார். பின்னர் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் அதிக தொடர்பு இருக்கவில்லை. | மர்மம் எஞ்சும் ஒரு தீ விபத்தில் ஆனந்தி இறந்து போன பிறகு ஜி.நாகராஜன் 1962-ல் நாகலட்சுமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆனந்தி என்று ஒரு மகளும் கண்ணன் என்று ஒரு மகனும் உண்டு. ஆனால் ஜி.நாகராஜன் குறைவான காலமே குடும்பத்துடன் இருந்தார். பின்னர் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் அதிக தொடர்பு இருக்கவில்லை. | ||
மதுரை வாழ்க்கையில் ஜி.நாகராஜன் பல அடித்தள மக்களோடு பழகினார். குடிப்பழக்கமும் கஞ்சா பழக்கமும் ஏற்பட்டது. எந்த வேலையிலும் அவரால் நிலைக்க முடியவில்லை. ஊர் ஊராக சுற்றத் தொடங்கினார். நண்பர்களை தேடிச்சென்று அவர்களிடம் பணம் பெற்று குடித்து வாழ்வதை வழக்கமாக்கிக் கொண்டார். ஆ.மாதவன், நீல பத்மநாபன், சுந்தர ராமசாமி, நா.வானமாமலை, அசோகமித்திரன், மதுரை பேராசிரியர் பாலசுந்தரம், க்ரியா ராமகிருஷ்ணன், ஐராவதம், திலீப் குமார் என அவர் நாடிச்சென்ற எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் பலர் அவருடனான அவர்களின் அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளனர். | மதுரை வாழ்க்கையில் ஜி.நாகராஜன் பல அடித்தள மக்களோடு பழகினார். குடிப்பழக்கமும் கஞ்சா பழக்கமும் ஏற்பட்டது. எந்த வேலையிலும் அவரால் நிலைக்க முடியவில்லை. ஊர் ஊராக சுற்றத் தொடங்கினார். நண்பர்களை தேடிச்சென்று அவர்களிடம் பணம் பெற்று குடித்து வாழ்வதை வழக்கமாக்கிக் கொண்டார். [[ஆ. மாதவன்]], [[நீல பத்மநாபன்]], சுந்தர ராமசாமி, நா.வானமாமலை, [[அசோகமித்திரன்]], மதுரை பேராசிரியர் பாலசுந்தரம், க்ரியா ராமகிருஷ்ணன், [[ஐராவதம்]], [[திலீப் குமார்]] என அவர் நாடிச்சென்ற எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் பலர் அவருடனான அவர்களின் அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளனர். | ||
ஜி.நாகராஜன் பற்றிய விரிவான ஆளுமைவரைவை சுந்தர ராமசாமியின் நினைவோடை நூல் அளிக்கிறது. ஜி.நாகராஜனை சுந்தர ராமசாமி 1955 ல் சந்திக்கும்போது அவர் உடற்பயிற்சியால் இறுகிய உடலும் தன்னம்பிக்கை நிறைந்த வசீகரமான பாவனைகளும் கொண்டிருந்தார். நகைச்சுவையாகவும் விரிவான தகவலறிவுடனும் பேசுவதில் வல்லவர். அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகம், சென்னை பிரிட்டிஷ் நூலகம் போன்றவற்றில் மட்டும் கிடைக்கும் நூல்களை விரிவாக குறிப்புகள் எடுத்துக்கொண்டு ஆழ்ந்து படிக்கும் வழக்கம் அவருக்கு இருந்தது. பின்னாளில் குடியால் உடல் மெலிந்து, உணவு உண்ணமுடியாமல், ஒரு லட்டு வாங்கி அதன் சில விள்ளல்களை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்த ஜி.நாகராஜனின் சித்திரமும் அவரால் அளிக்கப்பட்டுள்ளது. | ஜி.நாகராஜன் பற்றிய விரிவான ஆளுமைவரைவை சுந்தர ராமசாமியின் நினைவோடை நூல் அளிக்கிறது. ஜி.நாகராஜனை சுந்தர ராமசாமி 1955 ல் சந்திக்கும்போது அவர் உடற்பயிற்சியால் இறுகிய உடலும் தன்னம்பிக்கை நிறைந்த வசீகரமான பாவனைகளும் கொண்டிருந்தார். நகைச்சுவையாகவும் விரிவான தகவலறிவுடனும் பேசுவதில் வல்லவர். அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகம், சென்னை பிரிட்டிஷ் நூலகம் போன்றவற்றில் மட்டும் கிடைக்கும் நூல்களை விரிவாக குறிப்புகள் எடுத்துக்கொண்டு ஆழ்ந்து படிக்கும் வழக்கம் அவருக்கு இருந்தது. பின்னாளில் குடியால் உடல் மெலிந்து, உணவு உண்ணமுடியாமல், ஒரு லட்டு வாங்கி அதன் சில விள்ளல்களை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்த ஜி.நாகராஜனின் சித்திரமும் அவரால் அளிக்கப்பட்டுள்ளது. | ||
ஜி.நாகராஜனை நன்கறிந்து பதிவு செய்த இன்னொருவர் விமர்சகர் [[சி. மோகன்]]. ’என் 17ஆவது வயதில் ஜி. நாகராஜனை ஓர் லட்சிய ஆண்மகன் தோற்றத்தில் நான் அறிந்திருக்கிறேன். உடற்கட்டும் வனப்பும் மிடுக்கும் கூடிய பேரழகன். அப்போது நான் மாணவன். அவர் கணித ஆசிரியர். தூய வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, நடுவிரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே சதா கனலும் சார்மினார் சிகரெட், சில வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் அவருடைய கடைசி சில ஆண்டுகளில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. உடல் நலிந்து, கசங்கிய அழுக்கு வேட்டி ஜிப்பாவோடும், கடைசி நாட்களில் கைகளில் சொறியோடும் அவர் அலைந்து திரிந்த காலம்’ என்று சி.மோகன் பதிவுசெய்கிறார். | |||
உடல்நிலை பாதிக்கப்பட்டு 1981-ல் இறந்தார். | உடல்நிலை பாதிக்கப்பட்டு 1981-ல் இறந்தார். | ||
Line 72: | Line 74: | ||
* [https://books.openedition.org/ifp/3242 நாகராஜன் பற்றிய கட்டுரை] | * [https://books.openedition.org/ifp/3242 நாகராஜன் பற்றிய கட்டுரை] | ||
* [https://www.jeyamohan.in/79605 நாகராஜன் பற்றி ஜெயமோகன்] | * [https://www.jeyamohan.in/79605 நாகராஜன் பற்றி ஜெயமோகன்] | ||
*https://stalinsaravanan.blogspot.com/2021/05/blog-post_14.html | |||
== இணைப்புகள் == | == இணைப்புகள் == | ||
{{first review completed}} | {{first review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:நாவலாசிரியர்கள்]] | [[Category:நாவலாசிரியர்கள்]] |
Revision as of 16:13, 1 May 2022
ஜி. நாகராஜன் (செப்டம்பர் 1, 1929 – பிப்ரவரி 19, 1981) தமிழ் எழுத்தாளர். நவீனத்துவம் தமிழுக்கு உருவாக்கியளித்த முக்கியமான கலைஞர். பாலியல் தொழிலாளர்கள், குற்றவாளிகள் ஆகியோரின் அடித்தள உலகை சித்தரிப்பவை இவருடைய எழுத்துக்கள். மனிதாபிமானநோக்கோ விமர்சனப்பார்வையோ இல்லாமல் அங்கதப்பார்வையுடன் அவ்வுலகை உருவாக்கிக் காட்டுபவை. கட்டற்ற வாழ்க்கைமுறை கொண்டவர் என்பதனாலும் ஒரு தீவிரமான ஆளுமைப்பிம்பம் இவருக்கு உள்ளது
பிறப்பு, கல்வி
ஜி. நாகராஜன், செப்டெம்பர் 1, 1929 அன்று வழக்கறிஞராக பணியாற்றிய ஜி.கணேசையரின் ஒன்பது குழந்தைகளில் ஏழாவதாக மதுரையில் பிறந்தார். சிறு வயதில் தாயை இழந்த நாகராஜன் ஆரம்ப வருடங்களில் மதுரையில் தாய் வழிப்பாட்டி வீட்டிலும் பின்னர் திருமங்கலத்தில் தாய்மாமன் வீட்டிலும் வளர்ந்தார். இடையில் தந்தையார் அவரைத் தம்மிடம் அழைத்துக் கொண்டு பாடங்களைத் தாமே சொல்லிக் கொடுத்தார். எட்டு ஒன்பதாம் வகுப்புகளை திருமங்கலம் நாடார் உயர்நிலைப் பள்ளியில் தாய்மாமா வீட்டில் தங்கிப் படித்தார். மறுபடியும் பழனி சென்று 10,11 ஆம் வகுப்புகளை எம்.ஹெச். பள்ளியில் படித்தார். இவர் வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாகவே இருந்திருக்கிறார். கல்லூரிப் படிப்பை மதுரையில் மதுரைக் கல்லூரியில் மேற்கொண்டார். அப்போது கணிதத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்று சி.வி. ராமனிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். மதுரைக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படித்துத் தேர்ச்சி பெற்றார்.
அரசியல்
ஜி. நாகராஜன் முதலில் காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்டுத் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன் ஜி.நாகராஜனின் சிந்தனையில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியவர். சரஸ்வதி ஆசிரியர் வ.விஜயபாஸ்கரனுடன் தொடர்ச்சியாக கடிதத்தொடர்பில் இருந்தார். கம்யூனிஸ்டுத் தலைவர்கள் பாலதண்டாயுதம், ஆர்.கே.கண்ணன் ஆகியோரையும் சந்தித்து உரையாடிவந்தார். ஜி.நாகராஜன் மற்ற எழுத்தாளர்களைப் போல கம்யூனிஸ்டுக் கட்சியின் மனிதாபிமான இலட்சியவாதக் கொள்கைகளாலோ, அரசியல்போராட்டங்களாலோ கவரப்பட்டு கட்சிக்குள் சென்றவர் அல்ல. கம்யூனிஸ்ட் தத்துவ அடிப்படையை முறையாக கற்று அதன் மீதான நம்பிக்கையில் கட்சியில் சேர்ந்தார். அக்காலகட்டத்தில் கட்சி சித்தாந்தங்களை முழுமையாக வாசித்தறிந்தவர் என்னும் இடம் அவருக்கு இருந்தது.
கணிதத்தில் தீவிரமான ஆர்வமும், தனித்திறமையும் கொண்டிருந்த ஜி.நாகராஜனை மதுரை அமெரிக்கன் கல்லூரி நிர்வாகம் கணிதத்தில் உயர்கல்விக்காக அமெரிக்காவுக்கு நிதியுதவியுடன் அனுப்ப எண்ணம் கொண்டிருந்தது. அவர் அன்று கணிதத்தில் ஒரு வளரும் மேதையாகவே கருதப்பட்டார். ஆனால் ஜி.நாகராஜன் கம்யூனிஸ்டுக் கட்சியில் ஆற்றிய அரசியல் செயல்பாடுகள் காரணமாக அமெரிக்கன் கல்லூரி நிர்வாகத்தால் ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். மதுரையில் இருந்து திருநெல்வேலி வந்து நா. வானமாமலைநடத்தி வந்த தனியார் கல்லூரி (Tutorial college) ஒன்றில் ஆசிரியராகச் சேர்ந்தார். தொ.மு.சி. ரகுநாதன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி போன்றவர்களோடு இக்காலத்தில் தொடர்பு ஏற்பட்டது. ஜி.நாகராஜன் நவீன இலக்கியங்களை வாசிக்கத் தொடங்கியது இக்காலகட்டத்தில்தான்.
1955ல் ஜி.நாகராஜன் திருநெல்வேலி நகர கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக பணி ஏற்றார். கம்யூனிஸ்டுக் கட்சி நடத்திய சில போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார்.கம்யூனிஸ்டுக் கட்சியில் உருவான பிரிவும், அதன் விளைவாக தலைவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதும் கம்யூனிஸ்டுக் கொள்கைகள் மேல் அவநம்பிக்கை கொள்ளச் செய்தன. முன்னரே நிகலாய் புகாரின் விசாரித்து தண்டிக்கப்பட்ட மாஸ்கோ விசாரணைகள் பற்றி ஆர்தர் கோஸ்லர் எழுதிய Darkness at Noon, ஆர்தர் கோஸ்லரும் ஸ்டீபன் ஸ்பெண்டரும் பிறரும் இணைந்து எழுதியThe God that Failed ஆகிய நூல்களை வாசித்த ஜி.நாகராஜன் அவற்றை சுந்தர ராமசாமி போன்றவர்களுக்கு பரிந்துரைத்ததுடன் தன்னுடைய அரசியல் ஐயங்களையும் பதிவுசெய்திருந்தார்.
1956 ல் ரஷ்யாவில் நிகிதா குருஷேவ் பதவிக்கு வந்து ஜோசப் ஸ்டாலின் காலகட்டத்து படுகொலைகள் அரசுமுறை அறிவிப்புகளாக உறுதிசெய்யப்பட்டபோது ஜி.நாகராஜன் கொண்டிருந்த ஐயங்கள் உறுதிப்பட்டன. சுந்தர ராமசாமி உள்ளிட்ட எழுத்தாளர்கள் கட்சியில் இருந்து உளம்விலகத் தொடங்கினர். செக்கோஸ்லேவாகிய அரசியல்தலைவர் மிலான் ஜிலாஸ் ஸ்டாலினின் அடக்குமுறை ஆட்சிமேல் முன்வைத்த விமர்சனங்களையும் ஜி.நாகராஜன் அக்காலங்களில் வாசித்து சுருக்கமாக மொழியாக்கமும் செய்திருக்கிறார்.
ஜி.நாகராஜன் பலபடிகளாக நீண்ட விவாதங்களுக்குப்பின் கம்யூனிசக் கொள்கைமேல் நீண்ட ஒரு விமர்சன்க்குறிப்பை கட்சித் தலைமைக்கு அனுப்பிவிட்டு கட்சியிலிருந்து விலகிக்கொண்டார். ஜி.நாகராஜன் பிறகு ஒருபோதும் கம்யூனிஸ்டுக் கொள்கைகள் மேல் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர் நூலில் கம்யூனிஸ்டுக் கட்சியையும், அதன் கொள்கைகளையும் அங்கதத்துடனேயே பதிவுசெய்திருக்கிறார்.
தனிவாழ்க்கை
நெல்லையில் இருந்த காலகட்டங்களில் ஜி.நாகராஜன் கம்யூனிஸ்டு கொள்கைமேல் கொண்ட ஐயங்களால் அலைக்கழிப்புற்றதாகவும், மதுப்பழக்கத்துக்கு ஆளானதாகவும், அக்காலகட்டங்களில் நெல்லையில் இருந்த பாலியல் தொழிலாளர்களின் உலகுக்குள் அவருக்கு தொடர்பு உருவாகியது என்றும் சுந்தர ராமசாமி ஜி.நாகராஜன் பற்றி எழுதிய நினைவோடை நூலில் குறிப்பிடுகிறார். புகழ்பெற்ற குறத்தி முடுக்கு நாவலில் வரும் குறத்தி முடுக்கு என்னும் பாலியல்தெரு நெல்லையிலுள்ளதுதான். இக்காலகட்டங்களில் ஒரு பாலியல்தொழிலாளர் பெண்ணை மணம்புரிய முயன்றதாகவும் அது நிகழவில்லை என்றும் ஜி.நாகராஜன் பற்றி க்ரியா வெளியிட்ட ‘ நாளை மற்றுமொரு நாளே’ நூலில் எழுதப்பட்டிருக்கும் ஜி.நாகராஜனின் வாழ்க்கைக்குறிப்பு (சுந்தர ராமசாமி எழுதியதாக இருக்கலாம். அக்குறிப்பில் பெயர் இல்லை) கூறுகிறது. குறத்தி முடுக்கின் கதையும் ஏறத்தாழ அதுவே.
கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து விலகியபின் ஜி.நாகராஜன் மீண்டும் மதுரைக்குத் திரும்பி அங்கே ஒரு தனியார் கல்லூரியில் ஆசிரியரானார். கணிதப் பாடம் எடுப்பதில் புகழ் பெற்றிருந்தார். அவர் பாடம் எடுக்கிறார் என்று திரை அரங்குகளில் விளம்பரம் செய்யப்பட்டது என்று சுந்தர ராமசாமி பதிவுசெய்கிறார். மதுரையில் அவருடைய குடிப்பழக்கம் பெருகியது. குடும்பத்தில் இருந்து விலகினார். விபச்சாரப்பெண்களுடன் நெருக்கம் உருவானது. 1959ல் ஜி.நாகராஜன் ஆனந்தியை மணந்தார். குடிப்பழக்கத்தால் ஆனந்தியை ஜி.நாகராஜன் கொடுமைசெய்ததாகவும், ஆனந்தி ஒரு மகளிர் விடுதியில் அடைக்கலம் தேடியதாகவும் நாளை மற்றுமொரு நாளே நாவலின் பின்குறிப்பு கூறுகிறது. ‘இவருடைய ஊதாரித்தனமும் குரூரமும் எந்தப் பெண் ஜென்மத்தாலும் தாங்கக்கூடியவை அல்ல’ என்று அக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.
மர்மம் எஞ்சும் ஒரு தீ விபத்தில் ஆனந்தி இறந்து போன பிறகு ஜி.நாகராஜன் 1962-ல் நாகலட்சுமி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆனந்தி என்று ஒரு மகளும் கண்ணன் என்று ஒரு மகனும் உண்டு. ஆனால் ஜி.நாகராஜன் குறைவான காலமே குடும்பத்துடன் இருந்தார். பின்னர் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் அதிக தொடர்பு இருக்கவில்லை.
மதுரை வாழ்க்கையில் ஜி.நாகராஜன் பல அடித்தள மக்களோடு பழகினார். குடிப்பழக்கமும் கஞ்சா பழக்கமும் ஏற்பட்டது. எந்த வேலையிலும் அவரால் நிலைக்க முடியவில்லை. ஊர் ஊராக சுற்றத் தொடங்கினார். நண்பர்களை தேடிச்சென்று அவர்களிடம் பணம் பெற்று குடித்து வாழ்வதை வழக்கமாக்கிக் கொண்டார். ஆ. மாதவன், நீல பத்மநாபன், சுந்தர ராமசாமி, நா.வானமாமலை, அசோகமித்திரன், மதுரை பேராசிரியர் பாலசுந்தரம், க்ரியா ராமகிருஷ்ணன், ஐராவதம், திலீப் குமார் என அவர் நாடிச்சென்ற எழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் பலர் அவருடனான அவர்களின் அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளனர்.
ஜி.நாகராஜன் பற்றிய விரிவான ஆளுமைவரைவை சுந்தர ராமசாமியின் நினைவோடை நூல் அளிக்கிறது. ஜி.நாகராஜனை சுந்தர ராமசாமி 1955 ல் சந்திக்கும்போது அவர் உடற்பயிற்சியால் இறுகிய உடலும் தன்னம்பிக்கை நிறைந்த வசீகரமான பாவனைகளும் கொண்டிருந்தார். நகைச்சுவையாகவும் விரிவான தகவலறிவுடனும் பேசுவதில் வல்லவர். அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரி நூலகம், சென்னை பிரிட்டிஷ் நூலகம் போன்றவற்றில் மட்டும் கிடைக்கும் நூல்களை விரிவாக குறிப்புகள் எடுத்துக்கொண்டு ஆழ்ந்து படிக்கும் வழக்கம் அவருக்கு இருந்தது. பின்னாளில் குடியால் உடல் மெலிந்து, உணவு உண்ணமுடியாமல், ஒரு லட்டு வாங்கி அதன் சில விள்ளல்களை மட்டுமே உணவாகக் கொண்டு வாழ்ந்த ஜி.நாகராஜனின் சித்திரமும் அவரால் அளிக்கப்பட்டுள்ளது.
ஜி.நாகராஜனை நன்கறிந்து பதிவு செய்த இன்னொருவர் விமர்சகர் சி. மோகன். ’என் 17ஆவது வயதில் ஜி. நாகராஜனை ஓர் லட்சிய ஆண்மகன் தோற்றத்தில் நான் அறிந்திருக்கிறேன். உடற்கட்டும் வனப்பும் மிடுக்கும் கூடிய பேரழகன். அப்போது நான் மாணவன். அவர் கணித ஆசிரியர். தூய வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா, நடுவிரலுக்கும் சுட்டு விரலுக்குமிடையே சதா கனலும் சார்மினார் சிகரெட், சில வருடங்களுக்குப் பின்னர், மீண்டும் அவருடைய கடைசி சில ஆண்டுகளில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. உடல் நலிந்து, கசங்கிய அழுக்கு வேட்டி ஜிப்பாவோடும், கடைசி நாட்களில் கைகளில் சொறியோடும் அவர் அலைந்து திரிந்த காலம்’ என்று சி.மோகன் பதிவுசெய்கிறார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு 1981-ல் இறந்தார்.
இலக்கிய வாழ்க்கை
1963-ல் தனது 'பித்தன் பட்டறை' வெளியீட்டகம் மூலம் "குறத்தி முடுக்கு" குறுநாவலை வெளியிட்டார். பத்திரிகை நிருபருக்கும் பாலியல் தொழிலாளியான தங்கத்திற்கும் உள்ள உறவு பற்றியும், பொதுவாக நிகழும் பாலியல் தொழிலாளிகளின் சிக்கல்கள் பற்றியும் பேசியது நாவல். நாட்டில் நடப்பதை தான் விரும்பும் அளவு சொல்லமுடியவில்லை என்று வருத்தம் கொண்டார்.
"நாளை மற்றுமொரு நாளே" 1974-ல் வெளியான நாவல். பதற்றமில்லாத நடையில் தமிழன் பார்க்க மறுக்கும் அவல இருள்களை கூறிய, பரபரப்பூட்டிய நாவல். இந்நாவல் உண்மை தாங்கி இருக்கும் ஒரு நாளின் சம்பவங்களின் தொகுப்பு. 'மனிதன் மகத்தான சல்லிப்பயல்' என்று அவர் சொன்னதன் அர்த்தங்கள் தான் இந்த நாவலின் பெரும் வியப்பாக விரிந்து நிற்கிறது.
அவருடைய முதல் கதையான `அணுயுகம்’ ஜூன் 8, 1957 அன்று `ஜனசக்தி' வார மலரில் வெளியானது. அவருடைய ஆரம்பகாலப் படைப்புகள் எல்லாமே கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய `ஜனசக்தி', `சாந்தி', `சரஸ்வதி' போன்ற இதழ்களில்தான் வெளியாகின.
அவருடைய 'கண்டதும் கேட்டதும்' என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை 'பித்தன் பட்டறை' மூலம் 1971-ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
ஆங்கிலத்தில் சில கட்டுரைகளையும், “With fate conspire” என்ற நூலையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்காக எழுதியிருக்கிறார்.
இலக்கிய இடம், மதிப்பீடு
ஜி. நாகராஜன் இருண்ட கீழ் உலகின் மிகையற்ற அழுத்தமான சித்திரத்தைப் பதிவு செய்தவர். மானுட உறவின் சாத்தியங்களை ஆராய்கிறார். அதன்மூலம் பெரிதும் கீழ் நடுத்தர மக்களுக்கு உரியதாக இருந்த தமிழிலக்கிய உலகில் அதிர்ச்சி அலைகளை எழுப்பினார்.
ஜெயமோகன் தமிழின் "குறிப்பிடத்தக்க நாவல்கள்"[1] வரிசையில் "நாளை மற்றுமொரு நாளே", "குறத்தி முடுக்கு" நாவல்களை வைக்கிறார்.
நூல்கள்
குறத்தி முடுக்கு', 'நாளை மற்றும் ஒரு நாளே' ஆகிய இரண்டு குறுநாவல்களும் 17 சிறுகதைகளுமே எழுதியுள்ளார். அதே போல ஆங்கிலத்தில் கட்டுரைகளும், ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்.
நாவல்கள்
- குறத்தி முடுக்கு - 1963
- நாளை மற்றும் ஒரு நாளே - 1974
சிறுகதைகள்
- எங்கள் ஊர்
- டெர்லின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
- யாரோ முட்டாள் சொன்ன கதை
- தீராக் குறை
- சம்பாத்தியம்
- பூர்வாசிரமம்
- அக்கினிப் பிரவேசம்
- நான் புரிந்த நற்செயல்கள்
- கிழவனின் வருகை
- பூவும் சந்தனமும்
- ஜீரம்
- போலியும் அசலும்
- துக்க விசாரனை
- மனிதன்
- இலட்சியம்
- ஓடிய கால்கள்
- நிமிஷக் கதைகள்
ஆங்கிலம்
- With fate conspire (included in ஜி. நாகராஜன் ஆக்கங்கள் நூல், published in Nagercoil, 2007)
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
ஆங்கிலம், பிரெஞ்சில் மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகள்
- Tomorrow is one more day - 2018 (Penguin Publisher)
- Le vagabond et son ombre: G. Nagarajan - 2020 (Institut français de Pondichéry)
உசாத்துணை
- நாகராஜன் பற்றிய கட்டுரை
- நாகராஜன் பற்றி ஜெயமோகன்
- https://stalinsaravanan.blogspot.com/2021/05/blog-post_14.html
இணைப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.