தமிழ் விக்கி: Difference between revisions
No edit summary |
No edit summary |
||
Line 16: | Line 16: | ||
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம், ஈரோடு அமைப்பின் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான ‘[[தமிழ் விக்கி- தூரன் விருது|தமிழ்விக்கி- தூரன் விருது]]’ விழா ஈரோட்டில் நிகழவிருக்கிறது. தமிழில் கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் முன்னோடியான அறிஞர் [[பெரியசாமித் தூரன்]] பெயரில் இவ்விருது வழங்கப்படுகிறது. | விஷ்ணுபுரம் இலக்கியவட்டம், ஈரோடு அமைப்பின் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான ‘[[தமிழ் விக்கி- தூரன் விருது|தமிழ்விக்கி- தூரன் விருது]]’ விழா ஈரோட்டில் நிகழவிருக்கிறது. தமிழில் கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் முன்னோடியான அறிஞர் [[பெரியசாமித் தூரன்]] பெயரில் இவ்விருது வழங்கப்படுகிறது. | ||
தமிழ்ப் பண்பாட்டாய்வில் பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி – தூரன் விருதை சுவடியியல் ஆய்வாளர் [[மோ.கோ. கோவைமணி]] அவர்களுக்கு வழங்குகிறோம். | |||
நிகழ்வு நாள், பொழுது: ஆகஸ்ட் 14 மாலை முதல் ஆகஸ்ட் 15 மாலை வரை | நிகழ்வு நாள், பொழுது: ஆகஸ்ட் 14 மாலை முதல் ஆகஸ்ட் 15 மாலை வரை |
Revision as of 07:24, 8 August 2024
நண்பர்களுக்கு
வணக்கம்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம், ஈரோடு அமைப்பின் சார்பில் 2024 ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்விக்கி- தூரன் விருது’ விழா ஈரோட்டில் நிகழவிருக்கிறது. தமிழில் கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் முன்னோடியான அறிஞர் பெரியசாமித் தூரன் பெயரில் இவ்விருது வழங்கப்படுகிறது.
தமிழ்ப் பண்பாட்டாய்வில் பணியாற்றிய ஆய்வாளர்களுக்கு வழங்கப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்விக்கி – தூரன் விருதை சுவடியியல் ஆய்வாளர் மோ.கோ. கோவைமணி அவர்களுக்கு வழங்குகிறோம்.
நிகழ்வு நாள், பொழுது: ஆகஸ்ட் 14 மாலை முதல் ஆகஸ்ட் 15 மாலை வரை
நிகழ்வு இடம்: ராஜ்மகால் திருமணமண்டபம், கவுண்டச்சிப்பாளையம், சென்னிமலை சாலை. ஈரோடு
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக
1. கல்வெட்டு அறிஞர் வெ. வேதாசலம்
2. பாறை ஓவிய அறிஞர் காந்திராஜன்
3. காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ப. ஜெகநாதன்
4. மலையாள விமர்சகர் எம்.என். காரஸேரி
5. விருதுபெறும் முனைவர் கோவைமணி
ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
விருதுவிழாவை ஒட்டி வழக்கம்போல சிறப்பு நாதஸ்வர நிகழ்வு நடைபெறும். பெரியசாமித் தூரன் அவர்களின் தமிழிசைப் பாடல்களை சின்னமனூர் ஏ.விஜய்கார்த்திகேயன், இடும்பாவனம் பிரகாஷ் இளையராஜா ஆகிய இசைக்கலைஞர்கள் வாசிப்பார்கள். இரண்டு மணி நேரம் இந்த இசைநிகழ்வு நடைபெறும். (தமிழ் விக்கி- தூரன் விழா 2024 - நாதஸ்வரக் கலைஞர்கள்)
இந்நிகழ்வுக்கான பாடல்கள் முன்னரே அளிக்கப்பட்டுள்ளன. இந்த இசைநிகழ்வில் கலந்துகொள்பவர்கள் அவ்விசைப்பாடல்களை கேட்டுவிட்டு வருவது இசைக்குள் நுழைவதற்கு மிக உதவியானதாக அமையும். (தமிழ்விக்கி- தூரன் விழா 2024: தமிழிசை நிகழ்வு, இசைக்கப்படும் பாடல்கள்)
இந்த நிகழ்வு நடக்கும் ஈரோடு அருகே உள்ள வெள்ளோடு ராஜ் மஹால் கல்யாணமண்டபத்தில் வழக்கம்போல வாசகர்களும் நண்பர்களும் ஆகஸ்ட் 14 அன்று இரவு தங்கலாம். எழுத்தாளர் ஜெயமோகன் உட்பட விஷ்ணுபுரம் நண்பர்கள் அங்கு தங்குவார்கள்
விழாவிற்கு உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.
ராஜ்மகால் கல்யாணமண்டபத்திற்கு விழா மாலையில் வந்துசேர்வதற்கு வண்டி தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ளலாம். விஷ்ணுபுரம் அலுவலகம் பேருந்துநிலையம் அருகே உள்ளது. அங்கே வருபவர்களுக்கு வண்டி ஏற்பாடு செய்யப்படும். தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.(தொ எண்: 9500384307) ஆட்டோ மற்றும் பேருந்தில் எளிதில் வரமுடியும்
நல்வரவு
விழாக்குழு
ஆசிரியர் குழு | பதிவு வகைகள் | பங்களிக்க | தொடர்புக்கு | ஒருங்கிணைப்பாளர்கள் |
சமூகப் பங்களிப்புடன் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கும் இணையக் கலைக்களஞ்சியமான தமிழ் விக்கி முதன்மையாகத் தமிழிலக்கியம், கலை, பண்பாடு சார்ந்த தகவல்களின் தொகுப்பு. ஆவணப்பதிவாக மட்டும் இல்லாமல் படங்களுடனும் நேர்த்தியான மொழியுடனும் வாசிப்புக்குரிய இதழாகவும் அமைந்துள்ளது. மிக விரிவான உள்தொடுப்புகளுடன் ஒவ்வொன்றையும் உரிய அனைத்துடனும் தொடர்புபடுத்தி முழுமையான அறிதலை அளிக்கிறது. உசாத்துணைகள், இணையத்தொடுப்புகள் ஆகியன ஆய்வுக்கு உதவியான மையமாக இதை ஆக்குகின்றன.
வாசகர்களே திருத்தவும் பங்களிக்கவும் வாய்ப்புள்ள பொதுத்தளம் ஆயினும் மூத்த படைப்பாளிகளும் கல்வித்துறை ஆய்வாளர்களும் அடங்கிய ஆசிரியர் குழுவால் சரிபார்க்கப்பட்டு, ஆலோசனைக்குழுவின் ஒப்புதலுடன்தான் திருத்தங்களும் பதிவுகளும் வெளியிடப்படும்.