first review completed

க.ரா. ஜமதக்னி: Difference between revisions

From Tamil Wiki
(photo added)
No edit summary
Line 14: Line 14:
ஜமதக்னி, டார்வினின் உயிர்களின் தோற்றம், ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு, லாப்லசின் வெண்மேக சித்தாந்தம் போன்றவை குறித்து இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினார். தினமணி இதழில் [[கம்பராமாயணம்]], வால்மீகி ராமாயணம் குறித்த ஒப்பாய்வுக் கட்டுரைகளை எழுதினார்.  
ஜமதக்னி, டார்வினின் உயிர்களின் தோற்றம், ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு, லாப்லசின் வெண்மேக சித்தாந்தம் போன்றவை குறித்து இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினார். தினமணி இதழில் [[கம்பராமாயணம்]], வால்மீகி ராமாயணம் குறித்த ஒப்பாய்வுக் கட்டுரைகளை எழுதினார்.  


ஹிந்தி மொழியின் காவியமான ‘காமாயனி’யை ‘காமன் மகள்’ என்ற தலைப்பில் கவிதை நடையில் மொழிபெயர்த்தார். காளிதாசனின் ரகுவம்சத்தையும் மேகதூதத்தையும் தமிழில் மொழிபெயர்த்தார். கம்ப ராமாயணத்திலிருந்து சில பாடல்களை ஹிந்திக்கு மொழிபெயர்த்தார்.
ஹிந்தி மொழியின் காவியமான ‘காமாயனி’யை ‘காமன் மகள்’ என்ற தலைப்பில் கவிதை நடையில் மொழிபெயர்த்தார். காளிதாசனின் ரகுவம்சத்தையும் மேகதூதத்தையும் தமிழில் மொழிபெயர்த்தார். கம்பராமாயணத்திலிருந்து சில பாடல்களை ஹிந்திக்கு மொழிபெயர்த்தார்.


க.ரா. ஜமதக்னியின் மொழியாக்கச் சாதனைகளில் குறிப்பிடத்தகுந்தது, மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ நூலின் ஆறு தொகுதிகளையும் தமிழில் மொழிபெயர்த்ததாகும். தனது 75 – ஆம் வயதில் மொழிபெயர்ப்பினைத் தொடங்கி 79 - ஆம் வயதில் அப்பணியை நிறைவு செய்தார்.  க.ரா. ஜமதக்னி, நான்கு ஆண்டுகளில் 10,000 பக்கங்களில் மூலதனத்தையும், மிகைமதிப்புக் கோட்பாட்டையும் மொழியாக்கம் செய்தார்.
க.ரா. ஜமதக்னியின் மொழியாக்கச் சாதனைகளில் குறிப்பிடத்தகுந்தது, மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ நூலின் ஆறு தொகுதிகளையும் தமிழில் மொழிபெயர்த்தது. தனது 75 – ஆம் வயதில் மொழிபெயர்ப்பினைத் தொடங்கி 79 - ஆம் வயதில் அப்பணியை நிறைவு செய்தார்.  க.ரா. ஜமதக்னி, நான்கு ஆண்டுகளில் 10,000 பக்கங்களில் மூலதனத்தையும், மிகைமதிப்புக் கோட்பாட்டையும் மொழியாக்கம் செய்தார்.
[[File:K.R. Jamadhakni.jpg|thumb|K.R. Jamadhakni]]
[[File:K.R. Jamadhakni.jpg|thumb|K.R. Jamadhakni]]


Line 96: Line 96:


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{Ready for review}}
{{First review completed}}

Revision as of 08:39, 7 February 2024

எழுத்தாளர் ஜமதக்னி
கே.ஆர். ஜமதக்னி இள வயதுப்படம்

க.ரா. ஜமதக்னி (கே.ஆர். ஜமதக்னி) (ஏப்ரல் 15, 1903 – மே 27, 1981) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், சுதந்திரப் போராட்ட வீரர், மார்க்ஸிய அறிஞர். தமிழ்நாட்டில் சோஷலிஸ்ட் கட்சியை நிறுவிய முன்னோடிகளில் ஒருவர். ஜமதக்னி மொழிபெயர்த்த ‘மூலதனம்’ நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. 2009-ல் தமிழக அரசு ஜமதக்னியின் எழுத்துகளை நாட்டுடமை ஆக்கியது

பிறப்பு, கல்வி

க.ரா. ஜமதக்னி, வட ஆற்காடு மாவட்டத்தில் (இன்றைய வேலூர் மாவட்டம்) உள்ள காவேரிப்பாக்கத்திற்கு அருகில் உள்ள கடப்பேரி என்னும் சிற்றூரில், ஏப்ரல் 15, 1903 அன்று, ராகவ நாயக்கர் – முனியம்மாள் இணையருக்குப் பிறந்தார். வாலாஜாவில் பள்ளிக் கல்வி கற்றார். வேலூர் ஊரிஸ் கல்லூரியில் இண்டர்மீடியட் கற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று கலையியலில் பட்டம் பெற்றார். ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகளைக் கற்றார்.

தனி வாழ்க்கை

க.ரா. ஜமதக்னி, பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின் சுதந்திர எழுத்தாளராக இயங்கினார். சுதந்திரப் போராட்ட வீராங்கனையும், கடலூர் அஞ்சலையம்மாளின் மகளுமான அம்மாக்கண்ணு என்ற லீலாவதியை மணம் செய்துகொண்டார். மகன்: சிவாஜி. மகள்கள்: கிருபா, சாந்தி.

க.ரா. ஜமதக்னி நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

ஜமதக்னி, டார்வினின் உயிர்களின் தோற்றம், ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு, லாப்லசின் வெண்மேக சித்தாந்தம் போன்றவை குறித்து இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினார். தினமணி இதழில் கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம் குறித்த ஒப்பாய்வுக் கட்டுரைகளை எழுதினார்.

ஹிந்தி மொழியின் காவியமான ‘காமாயனி’யை ‘காமன் மகள்’ என்ற தலைப்பில் கவிதை நடையில் மொழிபெயர்த்தார். காளிதாசனின் ரகுவம்சத்தையும் மேகதூதத்தையும் தமிழில் மொழிபெயர்த்தார். கம்பராமாயணத்திலிருந்து சில பாடல்களை ஹிந்திக்கு மொழிபெயர்த்தார்.

க.ரா. ஜமதக்னியின் மொழியாக்கச் சாதனைகளில் குறிப்பிடத்தகுந்தது, மார்க்ஸ் எழுதிய ‘மூலதனம்’ நூலின் ஆறு தொகுதிகளையும் தமிழில் மொழிபெயர்த்தது. தனது 75 – ஆம் வயதில் மொழிபெயர்ப்பினைத் தொடங்கி 79 - ஆம் வயதில் அப்பணியை நிறைவு செய்தார். க.ரா. ஜமதக்னி, நான்கு ஆண்டுகளில் 10,000 பக்கங்களில் மூலதனத்தையும், மிகைமதிப்புக் கோட்பாட்டையும் மொழியாக்கம் செய்தார்.

K.R. Jamadhakni

இதழியல்

க.ரா. ஜமதக்னி, 1934-ல், ‘வீர சுதந்திரம்’ என்ற பெயரில் இதழ் ஒன்றைச் சிலகாலம் நடத்தினார்.

பொறுப்புகள்

வாலாஜா பேட்டையில் உள்ள தீனபந்து ஆசிரம நிறுவனர்களில் க.ரா. ஜமதக்னியும் ஒருவர்

அரசியல்

காந்தியம்

க.ரா. ஜமதக்னி, காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். வேலூர் கோட்டையின் மீது கல்வீசித் தாக்குதல் நிகழ்த்தியதற்காக ஆறு மாதம் சிறைத்தண்டனை பெற்றார். நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். 1928-ல் ராஜ துரோகக் குற்றம் சாட்டப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஓராண்டு கடுங்காவல் தண்டனைக்குப் பின் விடுதலையானார். மீண்டும் போராட்டங்களில் ஈடுபட்டார். சட்ட மறுப்புப் போராட்டம், உப்புச் சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.

மார்க்ஸியம்

க.ரா. ஜமதக்னிக்கு சிறையில் சக கைதியாக இருந்த சிங்காரவேலர் மூலம் மார்க்ஸிய சித்தாந்தம் அறிமுகமானது. 1931-ல், கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு ஏறத்தாழ 9 வருடங்கள் சிறையில் இருந்தார்.

சோஷலிஸ்ட் கட்சி

க.ரா. ஜமதக்னி, 1938-ல் சோஷலிஸ்ட் கட்சி உருவானபோது சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோருடன் இணைந்து அக்கட்சி தமிழகத்தில் உருவாவதற்குப் பாடுபட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

க.ரா. ஜமதக்னி, தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானதும் அதன் நிறுவன உறுப்பினரானார். அக்கட்சியின் வட ஆர்க்காடு மாவட்டத்தின் முதல் செயலாளராகப் பணியாற்றினார். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார். 1939-ல் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்படிக் கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் வேலூர், கோவை சிறைகளில் அடைக்கப்பட்டார்.

1947-ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபின், அரசியலில் இருந்து ஒதுங்கினார். தனது வாழ்க்கையை இலக்கியப் பணிகளுக்கு அர்ப்பணித்தார்.

மறைவு

க.ரா. ஜமதக்னி, மே 27, 1981-ல் காலமானார்.

நாட்டுடைமை

மு. கருணாநிதி, தமிழக முதல்வராகப் பணியாற்றியபோது, 1998-99 ஆம் ஆண்டு தமிழக நிதிநிலை அறிக்கையில் க.ரா. ஜமதக்னியின் மூலதனம் மொழிபெயர்ப்பு நூலை வெளிக்கொணர ஐந்து லட்ச ரூபாயை ஒதுக்கினார். 2009-ல் தமிழக அரசு க.ரா. ஜமதக்னியின் எழுத்துகளை நாட்டுடைமை ஆக்கியது

மதிப்பீடு

க.ரா. ஜமதக்னி, சுதந்திரப் போராட்ட வீரராகவும், இலக்கியவாதியாகவும் ஒரு சேர இயங்கினார். தமிழ்நாட்டில் சோஷலிஸ்ட் கட்சி உருவானதற்குக் காரணமான முன்னோடி அரசியல்வாதியாக அறியப்படுகிறார். காரல் மார்க்ஸின் மூலதனம், மிகை மதிப்பு, மார்க்ஸியம் உள்ளிட்ட நூல்களைத் தமிழர்கள் அறியச் செய்த முன்னோடி மொழிபெயர்ப்பாளராக மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

கட்டுரை நூல்கள்
  • உயிர்களின் தோற்றம்
  • பூமியின் வரலாறு
  • பிரபஞ்ச வரலாறு
  • தத்துவமும், வாழ்வும்
  • தத்துவஞான - விஞ்ஞானக் குறிப்புகள்
  • வாழ்வு உயர வழி
  • மார்க்ஸியம் அல்லது சமூக மாறுதலின் வரலாறு
  • விஞ்ஞானம்
  • இந்தியாவில் சோஷலிசம்
  • சோஷலிஸ்ட் கீதங்கள்
  • இந்தியாவிற்கு ஏன் சோஷலிசம்?
  • நீ ஏன் சோஷலிஸ்ட் ஆனாய்?
  • அபேதவாதப் பாட்டுகள்
  • லெனின்
  • பக்த விஜயம்
  • கனிந்த காதல்
  • தேசிய கீதம்
  • மார்க்ஸியம்
மொழியாக்க நூல்கள்
  • மூலதனம்
  • மிகைமதிப்புக் கோட்பாடு
  • மேக சந்தேஸம்
  • காமன் மகள்
  • ரகு வம்சம்
ஆன்மிக, இலக்கிய உரை நூல்கள்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.