under review

தி.ந. ராமச்சந்திரன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 20: Line 20:
டி.என்.ஆர் மொழி பெயர்ப்பாளராக உருவாவதற்கு [[திருலோக சீதாராம்|திரிலோக சீதாராமன்]]  முக்கியக்  காரணமாக இருந்தார். சீதாராம் நடத்திய 'சிவாஜி' இதழில் டி.என்.ஆர் எழுதினார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் வந்த இந்த இதழில்தான் பாரதி மற்றும் சேக்கிழார் பாடல்களை ஆங்கிலத்தில்  தி.ந. ராமச்சந்திரனின்  மொழியாக்கம் செய்து வெளியிட்டார். மெய்கண்ட சாத்திரங்களான [[நெஞ்சுவிடு தூது]], சிவப்பிரகாசம், [[திருவுந்தியார்]] [[திருக்களிற்றுப்படியார்]], [[கொடிக்கவி]] முதலாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

தருமபுர ஆதீனம் வழி [[ஆறாம் திருமுறை]], [[கைவல்ய நவநீதம்|கைவல்லிய நவநீதம்]], சைவ சித்தாந்த நிறுவனத்தின் வழி 'பதி பசு பாசம்' ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் இவரது [[பெரிய புராணம்|பெரியபுராணம்]] மொழிபெயர்ப்பை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டது. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் [[திருவாசகம்]] மொழிபெயர்ப்பை வெளியிட்டது.  
தருமபுர ஆதீனம் வழி [[ஆறாம் திருமுறை]], [[கைவல்ய நவநீதம்]], சைவ சித்தாந்த நிறுவனத்தின் வழி 'பதி பசு பாசம்' ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் இவரது [[பெரிய புராணம்|பெரியபுராணம்]] மொழிபெயர்ப்பை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டது. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் [[திருவாசகம்]] மொழிபெயர்ப்பை வெளியிட்டது.  

தி.ந. ராமச்சந்திரன் பாரதியின் [[பாஞ்சாலி சபதம்]], கண்ணன் பாட்டு,  தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் உட்பட பல பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவற்றில் பல பாடல்கள் சிவாஜி இதழ்களில் வந்தவை.
தி.ந. ராமச்சந்திரன் பாரதியின் [[பாஞ்சாலி சபதம்]], கண்ணன் பாட்டு,  தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் உட்பட பல பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவற்றில் பல பாடல்கள் சிவாஜி இதழ்களில் வந்தவை.
===== உரை =====
===== உரை =====
தி.ந. ராமச்சந்திரன் பல பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் உரையாற்றினார். லண்டன் பி.பி.சியிலும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும், பாரிஸ் தமிழ்ச் சங்கத்திலும் பேசச் சென்றார். இவர் வெளிநாடுகளில் கவிதையைப் பற்றி பேசிய உரை ”Tales and poems of South india” என்னும் தலைப்பில் குறுந்தகடாக வெளிவந்திருக்கிறது. 2001-ல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியபோது அவ்விழாவில் நீண்ட நேரம் உரையாற்றினார்.
தி.ந. ராமச்சந்திரன் பல பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் உரையாற்றினார். லண்டன் பி.பி.சியிலும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும், பாரிஸ் தமிழ்ச் சங்கத்திலும் பேசச் சென்றார். இவர் வெளிநாடுகளில் கவிதையைப் பற்றி பேசிய உரை 'Tales and poems of South india' என்னும் தலைப்பில் குறுந்தகடாக வெளிவந்திருக்கிறது. 2001-ல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியபோது அவ்விழாவில் நீண்ட நேரம் உரையாற்றினார்.
===== நூலகம் =====
===== நூலகம் =====
டி.என்.ஆரின் தந்தையின் பெயரால் அமைந்த சொந்த நூலகத்தில் நாற்பதாயிரம் நூல்கள் உள்ளன. தமிழின் தொன்மையான நூல்கள், அரியநூல்களின் பெரும் சேகரம் இதில் இருந்தன. இந்த நூல்நிலையம் வழியே சில புத்தகங்களும் வெளியிட்டுள்ளார்.  
டி.என்.ஆரின் தந்தையின் பெயரால் அமைந்த சொந்த நூலகத்தில் நாற்பதாயிரம் நூல்கள் உள்ளன. தமிழின் தொன்மையான நூல்கள், அரியநூல்களின் பெரும் சேகரம் இதில் இருந்தது. இந்த நூல்நிலையம் வழியே சில புத்தகங்களும் வெளியிட்டுள்ளார்.  
== விருதுகள் ==
== விருதுகள் ==
* மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவின் போது தி.ந. இராமச்சந்திரன் சித்தாந்த செம்மல் விருது பெற்றார்.
* மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவின் போது தி.ந. இராமச்சந்திரன் சித்தாந்த செம்மல் விருது பெற்றார்.
* 1984-ல் இராமச்சந்திரனின் சைவப் பணியைப் பாராட்டி தருமபுர ஆதீனம் 'சைவ சித்தாந்த கலாநிதி' பட்டத்தை வழங்கியது.  
* 1984-ல் இராமச்சந்திரனின் சைவப் பணியைப் பாராட்டி தருமபுர ஆதீனம் 'சைவ சித்தாந்த கலாநிதி' பட்டத்தை வழங்கியது.  
* இராமச்சந்திரனின் தமிழ் இலக்கியத்திற்கான பணியைப் பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2011-ல் தமிழ் இலக்கியத்திற்கான முனைவர் பட்டம் வழங்கியது.
* இராமச்சந்திரனின் தமிழ் இலக்கியத்திற்கான பணியைப் பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2011-ல் தமிழ் இலக்கியத்திற்கான முனைவர் பட்டம் வழங்கியது.
* தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணம் குறித்து தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியதால், சேக்கிழார் அடிப்பொடி எனும் பட்டம் பெற்றார்.
* தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணம் குறித்து தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியதால், 'சேக்கிழார் அடிப்பொடி' எனும் பட்டம் பெற்றார்.
== மறைவு ==
== மறைவு ==
தி.ந. ராமச்சந்திரன் ஏப்ரல் 6, 2021-ல் காலமானார்.
தி.ந. ராமச்சந்திரன் ஏப்ரல் 6, 2021-ல் காலமானார்.

Revision as of 03:23, 3 February 2024

தி.ந. ராமச்சந்திரன்

தி.ந. ராமச்சந்திரன் (தில்லை நடராஜன் இராமச்சந்திரன், தில்லைத்தான ராமச்சந்திரன்,சத்திய மூர்த்தி, டி.என்.ஆர், தி.ந. ரா, சேக்கிழார் அடிப்பொடி) (ஆகஸ்ட் 18, 1934 - ஏப்ரல் 6, 2021) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். சைவத்தமிழ், சைவ சித்தாந்தம் குறித்த நூல்களை எழுதினார்.

பிறப்பு, கல்வி

தி.ந. ராமச்சந்திரன் தில்லை நடராஜன், காமாட்சியம்மாள் இணையருக்கு ஆகஸ்ட் 18, 1934-ல் பிறந்தார். சத்தியமூர்த்தி என்று வீட்டில் அழைத்தனர். தந்தை செல்வந்தர். எஸ்.எம்.டி என்னும் பெயரில் பேருந்துக் கழகம் நடத்தினார். சொந்தமாய் நிறைய நிலங்களும் அரிசியாலையும் இருந்தன.

ராமச்சந்திரன் பள்ளிப்படிப்பு தில்லைஸ்தானத்தில் முடித்தார். இளமையில் ஆங்கிலத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் பட்டம் (B Com) பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வி பயின்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்து கொண்டார்.

தனிவாழ்க்கை

தி.ந. ராமச்சந்திரன் செப்டம்பர் 13, 1956-ல் புகழ்பெற்ற வழக்கறிஞரின் மகள் கல்யாணியைத் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தின் போது ஒன்பது நாட்கள் கம்பராமாயணம் உபண்யாசம் நடந்தது. மகன்கள் சுரேஷ், கணேஷ், ரமேஷ், மகேஷ்.

ராமச்சந்திரன் தந்தையின் கட்டாயத்திற்காக தஞ்சை நீதிமன்றத்தில் பதிவு செய்து கொண்டார். தந்தை இறந்தபின் (1967) பேருந்துக் கழகத்தை நிர்வகித்தார். லாப்ம் இல்லாமல் போகவே, வழக்கறிஞர் தொழிலில் கவனம் செலுத்தினார். 1994-க்குப் பின்னர் நீதிமன்றத்திற்குச் செல்வதைக் குறைத்துக் கொண்டார்.

வழக்கறிஞராக

தி.ந. ராமச்சந்திரன் 1956 முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். தஞ்சைப் பகுதியில் ஒருவர் எழுதிய கதையை ஆனந்த விகடன் வார இதழ் வேறு ஒருவர் பெயரில் வெளியிட்டிருந்தது. அது குறித்து அதன் ஆசிரியர் மீது வழக்கு தொடர்ந்தார். ஆனந்தவிகடனை எதிர்த்து வழக்கு போட முடியுமா என்று சில சிற்றிதழ்கள் துணுக்குகள் எழுதிக் கொண்டிருந்த எண்பதுகளில் தி.ந. ராமச்சந்திரன் ஆனந்த விகடனுக்கு எதிராக வாதாடி வெற்றி பெற்றார். தஞ்சை வேதாந்த மடத்திற்குத் தானே தலைவராக வர வேண்டும் என்று ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சித்தாந்தம், வேதாந்தம் அறிந்த தி.ந. ராமச்சந்திரன் வாதாடி வெற்றி பெற்றார்.

சைவப்பணி

தி.ந. ராமச்சந்திரன் சைவமும் வைணவமும் ஒரே மரத்தின் இரு கிளைகள் எனக் கருதினார். அவருக்கு சைவம் குறித்து எடுத்துரைத்த பல அறிஞர்கள் வைணவர்கள் என்பதை அவரே தெரிவித்திருக்கிறார். திருமுறை வகுப்புகளைத் தன் கடமையாக எடுத்து வந்தவர். தஞ்சாவூர் திருவையாறு ஆகிய இடங்களில் தேவார திருவாசக வகுப்புகள் எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

டி.என்.ஆர். 1966 முதல் 2004 வரை ஆங்கிலத்திலும் தமிழிலும் 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் 34-க்கு மேற்பட்ட புத்தகங்களையும் எழுதினார். சிவாஜி, ‘கணையாழி' போன்ற இதழ்களிலும் சைவ மாநாட்டு மலர்களிலும் எழுதிய கட்டுரைகள் முழுதும் தொகுக்கப்படவில்லை. இவரது 'பெரியபுராணம் திருமுறைகளின் கவசம்', 'பாரதி பாடல்கள் சிந்தனை விளக்கம்' ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவரைப் பற்றி அப்துல்காதர் என்பவர் சித்திரக்கவிகள் பாடினார்.

சைவம்

தி.ந. இராமச்சந்திரன் தமிழிலும், ஆங்கிலத்திலும் பல சைவத் தமிழ் நூல்களை இயற்றினார். சைவத் சேக்கிழாரின் பெரியபுராணம், சைவ சித்தாந்தம் ஆகியவை குறித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் பல நூல்களை எழுதினார். டி.என்.ஆர் தமிழில் எழுதிய நூல்களில் 'சேக்கிழார்' (சாகித்திய அகாதெமி 1995) 'சிவஞான முனிவர்' (சாகித்திய அகாதெமி 1999) ;வழி வழி பாரதி' (2000) ,'சைவசித்தாந்த கையேடு' போன்ற நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை.

மொழிபெயர்ப்பு

டி.என்.ஆர் மொழி பெயர்ப்பாளராக உருவாவதற்கு திரிலோக சீதாராமன் முக்கியக் காரணமாக இருந்தார். சீதாராம் நடத்திய 'சிவாஜி' இதழில் டி.என்.ஆர் எழுதினார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் வந்த இந்த இதழில்தான் பாரதி மற்றும் சேக்கிழார் பாடல்களை ஆங்கிலத்தில் தி.ந. ராமச்சந்திரனின் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். மெய்கண்ட சாத்திரங்களான நெஞ்சுவிடு தூது, சிவப்பிரகாசம், திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார், கொடிக்கவி முதலாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

தருமபுர ஆதீனம் வழி ஆறாம் திருமுறை, கைவல்ய நவநீதம், சைவ சித்தாந்த நிறுவனத்தின் வழி 'பதி பசு பாசம்' ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் இவரது பெரியபுராணம் மொழிபெயர்ப்பை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டது. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் திருவாசகம் மொழிபெயர்ப்பை வெளியிட்டது.

தி.ந. ராமச்சந்திரன் பாரதியின் பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் உட்பட பல பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவற்றில் பல பாடல்கள் சிவாஜி இதழ்களில் வந்தவை.

உரை

தி.ந. ராமச்சந்திரன் பல பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் உரையாற்றினார். லண்டன் பி.பி.சியிலும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலும், பாரிஸ் தமிழ்ச் சங்கத்திலும் பேசச் சென்றார். இவர் வெளிநாடுகளில் கவிதையைப் பற்றி பேசிய உரை 'Tales and poems of South india' என்னும் தலைப்பில் குறுந்தகடாக வெளிவந்திருக்கிறது. 2001-ல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியபோது அவ்விழாவில் நீண்ட நேரம் உரையாற்றினார்.

நூலகம்

டி.என்.ஆரின் தந்தையின் பெயரால் அமைந்த சொந்த நூலகத்தில் நாற்பதாயிரம் நூல்கள் உள்ளன. தமிழின் தொன்மையான நூல்கள், அரியநூல்களின் பெரும் சேகரம் இதில் இருந்தது. இந்த நூல்நிலையம் வழியே சில புத்தகங்களும் வெளியிட்டுள்ளார்.

விருதுகள்

  • மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு விழாவின் போது தி.ந. இராமச்சந்திரன் சித்தாந்த செம்மல் விருது பெற்றார்.
  • 1984-ல் இராமச்சந்திரனின் சைவப் பணியைப் பாராட்டி தருமபுர ஆதீனம் 'சைவ சித்தாந்த கலாநிதி' பட்டத்தை வழங்கியது.
  • இராமச்சந்திரனின் தமிழ் இலக்கியத்திற்கான பணியைப் பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2011-ல் தமிழ் இலக்கியத்திற்கான முனைவர் பட்டம் வழங்கியது.
  • தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணம் குறித்து தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியதால், 'சேக்கிழார் அடிப்பொடி' எனும் பட்டம் பெற்றார்.

மறைவு

தி.ந. ராமச்சந்திரன் ஏப்ரல் 6, 2021-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • பெரியபுராணம் திருமுறைகளின் கவசம்
  • பாரதி பாடல்கள் சிந்தனை விளக்கம்
  • சேக்கிழார் (சாகித்திய அகாடமி 1995)
  • சிவஞான முனிவர் (சாகித்திய அகடமி 1999)
  • வழி வழி பாரதி (2000)
  • சைவசித்தாந்த கையேடு
ஆங்கிலம்
  • Tirumurai the Second
  • Tirumurai The Seventh
  • SAYINGS
  • UTTERANCES
  • Kaivalya Navaneetham
  • Brahmmasuthra Siva Advaitha
  • Chitrakavi Maalai
  • Max Mullar

இணைப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.