first review completed

வளமடல்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 6: Line 6:
அறம், பொருள், வீடு ஆகியவற்றை இகழ்ந்து, காம இன்பமே சிறப்பு என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு பாடப்படும் சிற்றிலக்கியம் வளமடல்.   
அறம், பொருள், வீடு ஆகியவற்றை இகழ்ந்து, காம இன்பமே சிறப்பு என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு பாடப்படும் சிற்றிலக்கியம் வளமடல்.   
== பேசுபொருள் ==
== பேசுபொருள் ==
தமிழில் ஆண்களே மடலேறுவதாக அச்சுறுத்துவதும் மடலேறுவதும் மரபு. பெண்களுக்கு அது மரபல்ல. ஆனாலும் தன்னைத் தலைவியாக பாவித்து பாடும் திருமங்கை ஆழ்வார் மடற்கூற்று பெண்களிடமும் அமையலாம் என இறைவன்மீது கொண்ட காதலைப் பாடுகிறார். வளமடல் தனிச்சொல் இன்றி [[இன்னிசைக் கலிவெண்பா]]வில் இயற்றப்படும். பாட்டுடைத் தலைவனின் பெயருக்கு ஏற்ற [[எதுகை]]யோடு, தலைவன் மடலேறுவதாகக் கூறி, ஈரடியில் எதுகை வரப் பாடுவது வளமடலுக்குரிய இலக்கணம்.
தமிழில் ஆண்களே மடலேறுவதாக அச்சுறுத்துவதும் மடலேறுவதும் மரபு. பெண்களுக்கு அது மரபல்ல. ஆனாலும் தன்னைத் தலைவியாக பாவித்து பாடும் [[திருமங்கையாழ்வார்|திருமங்கை ஆழ்வார்]] மடற்கூற்று பெண்களிடமும் அமையலாம் என இறைவன்மீது கொண்ட காதலைப் பாடுகிறார். வளமடல் தனிச்சொல் இன்றி [[இன்னிசைக் கலிவெண்பா]]வில் இயற்றப்படும். பாட்டுடைத் தலைவனின் பெயருக்கு ஏற்ற [[எதுகை]]யோடு, தலைவன் மடலேறுவதாகக் கூறி, ஈரடியில் எதுகை வரப் பாடுவது வளமடலுக்குரிய இலக்கணம்.
==மடல் நூல்கள்==
==மடல் நூல்கள்==
*[[சித்திர மடல்]]
*[[சித்திர மடல்]]

Revision as of 23:19, 5 July 2023

வளமடல் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்[1][2]. சில பாட்டியல் நூல்களில் மடல் என்று குறிப்பிடப்படுகிறது.[3] மடல் பழந்தமிழ் அகப்பொருள் இலக்கியங்களில் காணப்படும் மடலூர்தலைக் குறிக்கிறது. தான் விரும்பும் ஒருத்தியை அடைய முடியாத ஒருவன் அப்பெண்ணை அடைவதற்காக ஊராரின் ஆதரவை வேண்டிப் பனை மடலால் குதிரை வடிவம் செய்து அதன் மீது ஏறி ஊரில் உலா வருவது மடலூர்தல். அறம், பொருள், வீடு ஆகியவற்றை இகழ்ந்து, காம இன்பமே சிறப்பு என்பதைக் கருப்பொருளாகக் கொண்டு பாடப்படும் சிற்றிலக்கியம் வளமடல்.

பேசுபொருள்

தமிழில் ஆண்களே மடலேறுவதாக அச்சுறுத்துவதும் மடலேறுவதும் மரபு. பெண்களுக்கு அது மரபல்ல. ஆனாலும் தன்னைத் தலைவியாக பாவித்து பாடும் திருமங்கை ஆழ்வார் மடற்கூற்று பெண்களிடமும் அமையலாம் என இறைவன்மீது கொண்ட காதலைப் பாடுகிறார். வளமடல் தனிச்சொல் இன்றி இன்னிசைக் கலிவெண்பாவில் இயற்றப்படும். பாட்டுடைத் தலைவனின் பெயருக்கு ஏற்ற எதுகையோடு, தலைவன் மடலேறுவதாகக் கூறி, ஈரடியில் எதுகை வரப் பாடுவது வளமடலுக்குரிய இலக்கணம்.

மடல் நூல்கள்

அடிக்குறிப்புகள்

  1. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 856
  2. பொருளறம் வீடு பழித்தின்ப மேபொரு ளாக்கிநல்லார்
    அருள்பெறு வேட்கை மடன்மிக வூர்தலிற் பாட்டுடையோர்க்
    குரிதரு பேரிற் பெயருக் கிசைந்த எதுகையினால்
    வருகலி வெண்பாத் தனைமட லாக வகுத்தனேர.

    நவநீதப் பாட்டியல், பாடல் 47

  3. நவநீதப் பாட்டியல், பிரபந்தத் திரட்டு, வச்சணந்திமாலை ஆகிய நூல்கள் இதை மடல் என்றே குறிப்பிடுகின்றன

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.