நமச்சிவாய மாலை: Difference between revisions

From Tamil Wiki
Logamadevi (talk | contribs)
No edit summary
; Added info on Finalised date
Line 54: Line 54:
*[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88 நமச்சிவாய மாலை, நூலகம் தளம்]
*[https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88 நமச்சிவாய மாலை, நூலகம் தளம்]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|01-Jun-2025, 14:12:24 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 03:44, 2 June 2025

நமச்சிவாய மாலை

நமச்சிவாய மாலை (பதிப்பு: பொ.யு. 1838) சிவபெருமான் மீது பாடப்பட்ட மாலை இலக்கிய நூல். இதனை இயற்றியவர், குருநமசிவாய தேவர்.

’நமச்சிவாய மாலை' என்ற பெயரில் மற்றுமொரு நூலும் உள்ளது. இதனை இயற்றியவர் திருவாவடுதுறை ஆதீனம், அம்பலவாண தேசிகர்.

வெளியீடு

நமச்சிவாய மாலை நூல், சென்னை கல்வி விளக்க அச்சுக்கூடத்தாரால், பொ.யு. 1838-ல், மழவை மகாலிங்க ஐயரால் சரிபார்க்கப்பட்டு, சைதாபுரம் உமாபதி முதலியாரால் பதிப்பிக்கப்பட்டது. தொடர்ந்து இந்நூல் யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதராலும், சென்னை சுந்தரவிலாச அச்சுக்கூடத்தாராலும், தேவக்கோட்டை கோபாலகிருஷ்ணன் மற்றும் சென்னை ஆர். சோமசுந்தரம் உள்ளிட்ட பலராலும் பல்வேறு வருடங்களில் அச்சிடப்பட்டது. இதன் ஆசிரியர் 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிதம்பரம் குருநமசிவாய தேவர்.

நூல் அமைப்பு

நமசிவாய மாலையில் 100 கண்ணிகள் உள்ளன. ஒவ்வொரு கண்ணியும் வருக்கமாலை இலக்கணப்படி அ, ஆ, இ, ஈ..... என வருக்க அடிப்படையில் அமைந்துள்ளன. முதற்பாடல் அகரத்தில் தொடங்க இறுதிப்பாடல் 'மௌ'வில் தொடங்குகிறது. ஒவ்வொரு கண்ணியும் 'நமச்சிவாய' என்னும் மந்திரமொழியால் நிறைவு பெறுகிறது.

உள்ளடக்கம்

நமசிவாய மாலை, சிவபெருமான், தனது அடியவர்களைக் காக்க போர்க்களத்திற்குச் சென்று போரில் ஈடுபட்ட செய்திகளைக் கூறுகிறது. சிவபெருமான் நிகழ்த்திய போர்க்காட்சிகள் பல பாடல்களில் புகழ்ந்து கூறப்பட்டுள்ளன. மன்னரும், படைவீரர்களும் புறப்பொருள் சார்ந்து நிகழ்த்திய போர்களைப் போன்று இறைவன் நிகழ்த்திய போர்களின் காட்சியாக நமச்சிவாய மாலை விளக்கப்பட்டுள்ளது.

பாடல்

மந்திர நமச்சி வாய
மாலைநான் செப்பு தற்குக்
கந்தவே டனக்கு மூத்த
கணபதி காப்புத் தாளே

ஆதியாய் வேத நான்காய்
அடிமுடி தெரியா வண்ணம்
சோதியாய் நிறைவாய் நின்ற
துணைவனே நமச்சி வாய

இணையடி தேடிக் காணா
ஏழுல களந்த மாயன்
கணையதா வெயின்மூன் றெய்த
கடவுளே நமச்சி வாய

ஈட்டிய பொருள்போ லுன்றன்
இணையடி பணிவார் துன்பம்
வாட்டிய செம்பொன் மேனி
வள்ளலே நமச்சி வாய

அரகர சிவனே யென்றும்
அம்பலத் தாடி யென்றும்
பரவுவார் துயரந் தீர்க்கும்
பரமனே நமச்சி வாய

நொந்தவ ரிளை த்தோர் தம்மை
நொடியள வினில்வாழ் விக்கும்
கந்தரங் கறுத்த மூர்த்தி
கடவுளே நமச்சி வாய

மதிப்பீடு

இறைவன் தன் அடியார்களைக் காக்கும் பொருட்டு அவர்களுடைய எதிரிகளை அழித்த செயல்களைப் புகழ்ந்துரைக்கும் நூல்கள் பல உண்டு. அவற்றுள் மாலை இலக்கிய அமைப்பில் இயற்றப்பட்ட நூல் நமச்சிவாய மாலை. சைவ மாலை இலக்கிய நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக நமச்சிவாய மாலை நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2025, 14:12:24 IST