first review completed

முருகு சுந்தரம்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected error in line feed character)
No edit summary
Line 3: Line 3:
முருகு சுந்தரம் (முருகேசன் சுந்தரம்; சண்முக சுந்தரம்;  குழந்தையன்பன்; டிசம்பர் 26, 1929 - ஜனவரி 12, 2007) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்தவர்.  ‘மறுமலர்ச்சிக் கவிஞர்’ என்று போற்றப்பட்டார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றார். இவரது நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
முருகு சுந்தரம், திருச்செங்கோட்டில், டிசம்பர் 26, 1929 அன்று, முருகேசன் - பாவாய் இணையருக்குப் பிறந்தார். திருச்செங்கோட்டில், திண்ணைப் பள்ளியில், சுப்பராயப் பிள்ளை என்பவரிடம் தொடக்கக் கல்வி கற்றார். திருச்செங்கோடு, மல்ல சமுத்திரம், இடைப்பாடி ஊர்ப் பள்ளிகளில் உயர்நிலைக் கல்வி பயின்றார். திருச்செங்கோடு மகாதேவி வித்தியாலயாவில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகப் பயின்று வித்துவான் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை, சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து, கல்வியலில் இளவர் பட்டம் (பி.எட்.) பெற்றார்.
முருகு சுந்தரம், திருச்செங்கோட்டில், டிசம்பர் 26, 1929 அன்று, முருகேசன் - பாவாய் இணையருக்குப் பிறந்தார். திருச்செங்கோட்டில், திண்ணைப் பள்ளியில், சுப்பராயப் பிள்ளை என்பவரிடம் தொடக்கக் கல்வி கற்றார். திருச்செங்கோடு, மல்ல சமுத்திரம், இடைப்பாடி ஊர்ப் பள்ளிகளில் உயர்நிலைக் கல்வி பயின்றார். திருச்செங்கோடு மகாதேவி வித்தியாலயாவில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகப் பயின்று வித்துவான் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை, சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து, கல்வியலில் இளவர் பட்டம் (பி.எட்.) பெற்றார்.
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
முருகு சுந்தரம், சேலம் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஈரோடு காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மனைவி: சிவகாமி. மகள்: வனிதா. மகன்: பாவேந்தன்.
முருகு சுந்தரம், சேலம் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஈரோடு காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மனைவி: சிவகாமி. மகள்: வனிதா. மகன்: பாவேந்தன்.
[[File:Murugu Sundaram - Suratha Paraattu.jpg|thumb|முருகு சுந்தரம் கவிதைகள் பற்றி சுரதா]]
[[File:Murugu Sundaram - Suratha Paraattu.jpg|thumb|முருகு சுந்தரம் கவிதைகள் பற்றி சுரதா]]
== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
முருகு சுந்தரம், பாரதிதாசன் நடத்தி வந்த [[குயில்]] இதழில் கவிதைகளை எழுதிக் கவிஞராக அறிமுகமானார். பாரதிதாசனின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதனை குயில் இதழில் பாரதிதாசன் வெளியிட்டார். கவிஞர் [[சுரதா]]வின் ‘கவிதை’ இதழில் கவிதைகள் எழுதி அவரது பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து பல இதழ்களில் கவிதைகள் எழுதினார். பல்வேறு கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார். வானொலி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவிதைகள் படைத்தார். பல நூற்றுக் கணக்கான கவியரங்கங்களில் பங்கேற்றுக் கவி பாடினார்.
முருகு சுந்தரம், [[பாரதிதாசன்]] நடத்தி வந்த [[குயில்]] இதழில் கவிதைகளை எழுதிக் கவிஞராக அறிமுகமானார். பாரதிதாசனின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதனை குயில் இதழில் பாரதிதாசன் வெளியிட்டார். கவிஞர் [[சுரதா]]வின் ‘கவிதை’ இதழில் கவிதைகள் எழுதி அவரது பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து பல இதழ்களில் கவிதைகள் எழுதினார். பல்வேறு கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார். வானொலி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவிதைகள் படைத்தார். பல நூற்றுக் கணக்கான கவியரங்கங்களில் பங்கேற்றுக் கவி பாடினார்.

முருகு சுந்தரத்தின் முதல் கவிதைத் தொகுதி ‘கடைத்திறப்பு’ 1969-ல் வெளியானது. தொடர்ந்து பல கவிதை மற்றும் உரை நூல்களை எழுதினார். பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகிய தனது அனுபவத்தையும், மற்றும் பலரது அனுபவங்களையும் தொகுத்து ‘பாவேந்தர் ஒரு பல்கலைக் கழகம்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். தனது கவிதைகளுக்காக பாரதிதாசன், [[சுரதா]], [[மு. கருணாநிதி|கலைஞர் மு. கருணாநிதி]],  [[எழில்முதல்வன்]], கவிஞர் [[தமிழ்நாடன்]] உள்ளிட்ட பலரது பாராட்டைப் பெற்றார்.

== அரசியல் ==
== அரசியல் ==
முருகுசுந்தரத்தின் தந்தை திராவிட இயக்க ஆதரவாளர். முருகு சுந்தரம் இளம் வயதிலேயே குடியரசு, திராவிட நாடு போன்ற இதழ்களை வாசித்தார்.  அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றோருடைய மேடைப் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் தன்னை இணத்துக் கொண்டார். அக்கட்சி சார்பான கூட்டங்கள் பலவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மு.கருணாநிதியுடன் இணைந்து பல கவியரங்குகளில் கலந்துகொண்டார்.
முருகுசுந்தரத்தின் தந்தை திராவிட இயக்க ஆதரவாளர். முருகு சுந்தரம் இளம் வயதிலேயே குடியரசு, திராவிட நாடு போன்ற இதழ்களை வாசித்தார்.  அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றோருடைய மேடைப் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் தன்னை இணத்துக் கொண்டார். அக்கட்சி சார்பான கூட்டங்கள் பலவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். [[மு.கருணாநிதி]]யுடன் இணைந்து பல கவியரங்குகளில் கலந்துகொண்டார்.
== பொறுப்புகள் ==
== பொறுப்புகள் ==
முருகு சுந்தரம் சேலம் தமிழ்ச் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
முருகு சுந்தரம் சேலம் தமிழ்ச் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.
Line 25: Line 25:
* கோவை இலக்கியப் பாசறை வழங்கிய பரிசு - எரிநட்சத்திரம் கவிதை நாடகத்துக்கு.
* கோவை இலக்கியப் பாசறை வழங்கிய பரிசு - எரிநட்சத்திரம் கவிதை நாடகத்துக்கு.
* சென்னை பாவேந்தர் பாசறை அளித்த 'பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர்' பட்டம் மற்றும் பட்டயம்.
* சென்னை பாவேந்தர் பாசறை அளித்த 'பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர்' பட்டம் மற்றும் பட்டயம்.
== இலக்கிய இடம் ==
முருகு சுந்தரம், [[பாரதிதாசன் பரம்பரை]]யைச் சேர்ந்த கவிஞராக அறியப்பட்டார். மரபு, புதுக்கவிதைகள் என இரண்டு வகைமைகளிலும் கவிதைகள் எழுதினார். உலக இலக்கிய வாசிப்பின் விளைவால் தமிழ்க் கவிதைகளில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டார். புதிய பார்வையும் சொல்லாடலும் கொண்ட கவிதைகளை எழுதினார். புரட்சிக் கருத்துக்களோடு இலக்கியச் செறிவும் அழகும் நயமும் கொண்ட கவிதைகளைப் படைத்தார். முருகு சுந்தரம், புதுமைக் கவிஞராகவும், மறுமலர்ச்சிக் கவிஞராகவும் போற்றப்பட்டார்.
விமர்சகர் [[ஆர்வி]], முருகுசுந்தரத்தின் நூல்கள் பற்றி, “முருகுசுந்தரத்தின் இரு புத்தகங்களை படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஒன்று “பாவேந்தர்: ஒரு பல்கலைக்கழகம்“; இன்னொன்று இந்திய இலக்கிய சிற்பிகள்: பாரதிதாசன். இரண்டும் இணையத்தில் கிடைக்கின்றன.” என்று குறிப்பிடுகிறார்.
== மறைவு ==
== மறைவு ==
முருகு சுந்தரம், ஜனவரி 12, 2007 அன்று, தனது 78-ஆம் வயதில் காலமானார்.
முருகு சுந்தரம், ஜனவரி 12, 2007 அன்று, தனது 78-ஆம் வயதில் காலமானார்.
Line 38: Line 42:

சேலம் கு. கணேசன், ’கவிஞர் முருகு சுந்தரம் கவிதைகள்’ என்ற தலைப்பில் முருகு சுந்தரத்தின் கவிதைகளைத் தொகுத்துள்ளார்.

[[File:Murugu books.jpg|thumb|கவிஞர் முருகு சுந்தரம் நூல்கள்]]
[[File:Murugu books.jpg|thumb|கவிஞர் முருகு சுந்தரம் நூல்கள்]]
[[File:Murugusundaram Books.jpg|thumb|கவிஞர் முருகு சுந்தரம் புத்தகங்கள்]]
[[File:Murugusundaram Books.jpg|thumb|கவிஞர் முருகு சுந்தரம் புத்தகங்கள்]]

Revision as of 07:34, 17 August 2023

கவிஞர் முருகு சுந்தரம்
கவிஞர் முருகு சுந்தரம் (படம் நன்றி: https://koottanchoru.wordpress.com)

முருகு சுந்தரம் (முருகேசன் சுந்தரம்; சண்முக சுந்தரம்; குழந்தையன்பன்; டிசம்பர் 26, 1929 - ஜனவரி 12, 2007) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்தவர். ‘மறுமலர்ச்சிக் கவிஞர்’ என்று போற்றப்பட்டார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றார். இவரது நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.

பிறப்பு, கல்வி

முருகு சுந்தரம், திருச்செங்கோட்டில், டிசம்பர் 26, 1929 அன்று, முருகேசன் - பாவாய் இணையருக்குப் பிறந்தார். திருச்செங்கோட்டில், திண்ணைப் பள்ளியில், சுப்பராயப் பிள்ளை என்பவரிடம் தொடக்கக் கல்வி கற்றார். திருச்செங்கோடு, மல்ல சமுத்திரம், இடைப்பாடி ஊர்ப் பள்ளிகளில் உயர்நிலைக் கல்வி பயின்றார். திருச்செங்கோடு மகாதேவி வித்தியாலயாவில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனித் தேர்வராகப் பயின்று வித்துவான் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை, சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து, கல்வியலில் இளவர் பட்டம் (பி.எட்.) பெற்றார்.

தனி வாழ்க்கை

முருகு சுந்தரம், சேலம் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஈரோடு காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மனைவி: சிவகாமி. மகள்: வனிதா. மகன்: பாவேந்தன்.

முருகு சுந்தரம் கவிதைகள் பற்றி சுரதா

இலக்கிய வாழ்க்கை

முருகு சுந்தரம், பாரதிதாசன் நடத்தி வந்த குயில் இதழில் கவிதைகளை எழுதிக் கவிஞராக அறிமுகமானார். பாரதிதாசனின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதனை குயில் இதழில் பாரதிதாசன் வெளியிட்டார். கவிஞர் சுரதாவின் ‘கவிதை’ இதழில் கவிதைகள் எழுதி அவரது பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து பல இதழ்களில் கவிதைகள் எழுதினார். பல்வேறு கவியரங்குகளில் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார். வானொலி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கவிதைகள் படைத்தார். பல நூற்றுக் கணக்கான கவியரங்கங்களில் பங்கேற்றுக் கவி பாடினார்.

முருகு சுந்தரத்தின் முதல் கவிதைத் தொகுதி ‘கடைத்திறப்பு’ 1969-ல் வெளியானது. தொடர்ந்து பல கவிதை மற்றும் உரை நூல்களை எழுதினார். பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகிய தனது அனுபவத்தையும், மற்றும் பலரது அனுபவங்களையும் தொகுத்து ‘பாவேந்தர் ஒரு பல்கலைக் கழகம்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். தனது கவிதைகளுக்காக பாரதிதாசன், சுரதா, கலைஞர் மு. கருணாநிதி, எழில்முதல்வன், கவிஞர் தமிழ்நாடன் உள்ளிட்ட பலரது பாராட்டைப் பெற்றார்.

அரசியல்

முருகுசுந்தரத்தின் தந்தை திராவிட இயக்க ஆதரவாளர். முருகு சுந்தரம் இளம் வயதிலேயே குடியரசு, திராவிட நாடு போன்ற இதழ்களை வாசித்தார். அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றோருடைய மேடைப் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் தன்னை இணத்துக் கொண்டார். அக்கட்சி சார்பான கூட்டங்கள் பலவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மு.கருணாநிதியுடன் இணைந்து பல கவியரங்குகளில் கலந்துகொண்டார்.

பொறுப்புகள்

முருகு சுந்தரம் சேலம் தமிழ்ச் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

பாட்டுச் சிற்பி பட்டம் பெறுதல்

விருதுகள்

  • தமிழக அரசின் நல்லாசிரியர் விருது
  • தமிழக அரசின் 'பாரதிதாசன் விருது'
  • ஈரோடு ஜேசிஸ் மன்றம் வழங்கிய ‘சிறந்த குடிமகன்' விருது
  • 'பனித்துளிகள்' கவிதைத் தொகுப்புக்குத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதற்பரிசு
  • ஈரோடு திருக்குறள் பேரவை மாநாட்டில் திருக்குறள்முனுசாமி அவர்கள் வழங்கிய 'பாட்டுச்சிற்பி’ பட்டம்.
  • கோவை இலக்கியப் பாசறை வழங்கிய பாவேந்தர் விருது
  • கோவை இலக்கியப் பாசறை வழங்கிய பரிசு - எரிநட்சத்திரம் கவிதை நாடகத்துக்கு.
  • சென்னை பாவேந்தர் பாசறை அளித்த 'பாவேந்தர் பைந்தமிழ்ச் செல்வர்' பட்டம் மற்றும் பட்டயம்.

இலக்கிய இடம்

முருகு சுந்தரம், பாரதிதாசன் பரம்பரையைச் சேர்ந்த கவிஞராக அறியப்பட்டார். மரபு, புதுக்கவிதைகள் என இரண்டு வகைமைகளிலும் கவிதைகள் எழுதினார். உலக இலக்கிய வாசிப்பின் விளைவால் தமிழ்க் கவிதைகளில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டார். புதிய பார்வையும் சொல்லாடலும் கொண்ட கவிதைகளை எழுதினார். புரட்சிக் கருத்துக்களோடு இலக்கியச் செறிவும் அழகும் நயமும் கொண்ட கவிதைகளைப் படைத்தார். முருகு சுந்தரம், புதுமைக் கவிஞராகவும், மறுமலர்ச்சிக் கவிஞராகவும் போற்றப்பட்டார்.

விமர்சகர் ஆர்வி, முருகுசுந்தரத்தின் நூல்கள் பற்றி, “முருகுசுந்தரத்தின் இரு புத்தகங்களை படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஒன்று “பாவேந்தர்: ஒரு பல்கலைக்கழகம்“; இன்னொன்று இந்திய இலக்கிய சிற்பிகள்: பாரதிதாசன். இரண்டும் இணையத்தில் கிடைக்கின்றன.” என்று குறிப்பிடுகிறார்.

மறைவு

முருகு சுந்தரம், ஜனவரி 12, 2007 அன்று, தனது 78-ஆம் வயதில் காலமானார்.

நாட்டுடைமை

முருகு சுந்தரத்தின் நூல்கள், அவரது மறைவுக்குப் பின் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

பாவலர் முருகும், முருகியலும் - நற்றமிழருவி நாமக்கல் நாதன்
முருகு சுந்தரம் - சேலம் கு. கணேசன்
கவிஞர் முருகு சுந்தரம் கவிதைகள்-சேலம் கு. கணேசன்

ஆவணம்

முருகு சுந்தரத்தின் நூல்கள் சில, தமிழ் இணையக் கல்விக் கழக மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன. ‘நற்றமிழருவி நாமக்கல் நாதன்’ என்பவர், ‘பாவலர் முருகும் முருகியலும்’ என்ற தலைப்பில் முருகுசுந்தரத்தின் கவிதைகளை ஆய்வு செய்து நூல் எழுதியுள்ளார்.

சேலம் கு. கணேசன், முருகு சுந்தரத்தின் வாழ்க்கையை, சாகித்ய அகாதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் நூல் வரிசையில் ஆவணப்படுத்தியுள்ளார்.

சேலம் கு. கணேசன், ’கவிஞர் முருகு சுந்தரம் கவிதைகள்’ என்ற தலைப்பில் முருகு சுந்தரத்தின் கவிதைகளைத் தொகுத்துள்ளார்.

கவிஞர் முருகு சுந்தரம் நூல்கள்
கவிஞர் முருகு சுந்தரம் புத்தகங்கள்

நூல்கள்

கவிதை நூல்கள்
  • கடைத்திறப்பு
  • பனித்துளிகள்
  • சந்தனப்பேழை
  • தீர்த்தக்கரையினிலே
  • எரிநட்சத்திரம்
  • வெள்ளை யானை
இலக்கிய நூல்கள்
  • பாட்டும் பகையும்
  • அண்ணல் இயேசு
  • பாரதி பிறந்தார்
உரை நூல்கள்
  • பாவேந்தர்
  • பாவேந்தர் நினைவுகள்
  • அரும்புகள் மொட்டுகள் மலர்கள்
  • குயில் கூவிக் கொண்டிருக்கும்
  • புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்
  • மலரும் மஞ்சமும்
  • குயில்களும் இளவேனில் காலமும்
  • பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்
  • புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்
  • சுரதா ஓர் ஒப்பாய்வு
  • கென்னடி வீர வரலாறு
  • தமிழகத்தில் குறிஞ்சிவளம்
  • நாட்டுக்கொரு நல்லவர்
  • பாவேந்தர் படைப்பில் அங்கதம்
  • பாரும் போரும்
  • வள்ளுவர் வழியில் காந்தியம்
  • காந்தியின் வாழ்க்கையிலே
  • மானமாட்சி
  • முருகுசுந்தரம் கவிதைகள்
நாடகம்
  • நக்கண்ணை

உசாத்துணை

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.