திருவாதவூரர் புராணம்: Difference between revisions
No edit summary |
(; Added info on Finalised date) |
||
| (3 intermediate revisions by 2 users not shown) | |||
| Line 4: | Line 4: | ||
திருவாதவூரர் புராணம் நூல் யாழ்ப்பாணம் சுன்னகம் குமாரசாமிப்புலவரால் திருத்தப்பட்ட உரையுடன் இ. சிவராமலிங்கையரால் இலங்கை கொக்குவிலில் உள்ள சோதிடப்பிரகாசயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. | திருவாதவூரர் புராணம் நூல் யாழ்ப்பாணம் சுன்னகம் குமாரசாமிப்புலவரால் திருத்தப்பட்ட உரையுடன் இ. சிவராமலிங்கையரால் இலங்கை கொக்குவிலில் உள்ள சோதிடப்பிரகாசயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. | ||
== ஆசிரியர் == | == ஆசிரியர் == | ||
திருவாதவூரர் புராணத்தை இயற்றியவர் [[கடவுள் | திருவாதவூரர் புராணத்தை இயற்றியவர் [[கடவுள் மாமுனிவர்|கடவுள் மாமுனிவர்]]. ஒருமுறை இவர் வயிற்று வலியினால் வருந்தியபோது கச்சியப்பர் இவரைப் பார்த்துத் திருவாதவூரடிகள் வரலாற்றினை ஒரு புராணமாகப் பாடினால் வயிற்றுவலி நீங்கும் என்று சொன்னார். இவரும் அவ்வாறே திருவாதவூரர் புராணத்தைப் பாடி முடிக்க இவருக்கு வயிற்றுவலி நீங்கிற்று என்று கூறப்படுகிறது. | ||
==தோற்றம், காலம்== | ==தோற்றம், காலம்== | ||
| Line 18: | Line 18: | ||
*திருப்பெருந்துறைச் சருக்கம்- திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் சிவனே குருவாகி உபதேசம் செய்ததும், அதைச் சுற்றி நிகழ்ந்தவையும் | *திருப்பெருந்துறைச் சருக்கம்- திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் சிவனே குருவாகி உபதேசம் செய்ததும், அதைச் சுற்றி நிகழ்ந்தவையும் | ||
*குதிரையிட்ட சருக்கம்-மன்னனுக்கு குதிரை வாங்கியதும், நரியைப் பரியாக்கியதும் | *குதிரையிட்ட சருக்கம்-மன்னனுக்கு குதிரை வாங்கியதும், நரியைப் பரியாக்கியதும் | ||
*மண்சுமந்த சருக்கம்- | *மண்சுமந்த சருக்கம்- சிவபெருமான் வந்திக்கிழவிக்காக மண்சுமந்தது | ||
*திருவம்பலச் சருக்கம்- தில்லையில் நிகழ்ந்தவை | *திருவம்பலச் சருக்கம்- தில்லையில் நிகழ்ந்தவை | ||
*புத்தரைவாதில் வென்ற சருக்கம் | *புத்தரைவாதில் வென்ற சருக்கம் | ||
| Line 40: | Line 40: | ||
=====மந்திரிச் சருக்கம்===== | =====மந்திரிச் சருக்கம்===== | ||
<poem> | <poem> | ||
குவலயமங் கையைநீடு கோலஞ்செய் தரும்பொன்னு | |||
நவமணியுங் குவைசெய்து ஈன்குடன்மங் கலகாளிற் | |||
றவமணமுச் திருநீற்றின் றன்மணமுர் தவறாத | |||
இவமணமும் பெறக்கல்விச் செல்விமணம் புணர்வித்தார் | |||
</poem> | </poem> | ||
=====திருப்பெருந்துறை சருக்கம்===== | =====திருப்பெருந்துறை சருக்கம்===== | ||
| Line 49: | Line 49: | ||
வாய்த்தவள மிவ்வகை வயங்குமத னாப்ப | வாய்த்தவள மிவ்வகை வயங்குமத னாப்ப | ||
ணேத்தரு தவச்சனைக ளெங்கணு கெருங்க | ணேத்தரு தவச்சனைக ளெங்கணு கெருங்க | ||
மீத்திக ழறக்குழை | மீத்திக ழறக்குழை தழைத்துமிளிர் மெய்ம்மை | ||
பூத்தறிஞர் போன்றெழில் பொருக்துமொர் குருந்த | |||
</poem> | </poem> | ||
| Line 56: | Line 56: | ||
[https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM8jZhy&tag=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D#book1/9 திருவாதவூரர் புராணம்-தமிழ் இணைய கல்விக் கழகம்] | [https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZM8jZhy&tag=%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D#book1/9 திருவாதவூரர் புராணம்-தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category: Tamil Content]] | {{Fndt|21-May-2025, 11:55:34 IST}} | ||
[[Category:Tamil Content]] | |||
Latest revision as of 03:44, 22 May 2025
திருவாதவூரர் புராணம்(பொ.யு. 15-ம் நூற்றாண்டு) மாணிக்கவாசகரைப் பற்றி கடவுள் மாமுனிவர் இயற்றிய புராண நூல்.
பதிப்பு, வெளியீடு
திருவாதவூரர் புராணம் நூல் யாழ்ப்பாணம் சுன்னகம் குமாரசாமிப்புலவரால் திருத்தப்பட்ட உரையுடன் இ. சிவராமலிங்கையரால் இலங்கை கொக்குவிலில் உள்ள சோதிடப்பிரகாசயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
ஆசிரியர்
திருவாதவூரர் புராணத்தை இயற்றியவர் கடவுள் மாமுனிவர். ஒருமுறை இவர் வயிற்று வலியினால் வருந்தியபோது கச்சியப்பர் இவரைப் பார்த்துத் திருவாதவூரடிகள் வரலாற்றினை ஒரு புராணமாகப் பாடினால் வயிற்றுவலி நீங்கும் என்று சொன்னார். இவரும் அவ்வாறே திருவாதவூரர் புராணத்தைப் பாடி முடிக்க இவருக்கு வயிற்றுவலி நீங்கிற்று என்று கூறப்படுகிறது.
தோற்றம், காலம்
திருவாதவூரார் புராணத்தில் மாணிக்கவாசகரின் வரலாறு பற்றிய செய்திகள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பி தொகுத்த 63 நாயன்மார்கள் பட்டியல், சேக்கிழாரின் பெரிய புராணம் இரண்டிலும் மாணிக்க வாசகரின் வரலாறு இடம்பெறாததால் மாணிக்கவாசகரின் வரலாறு எழுதப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் திருவாதவூரார் புராணம் இயற்றப்பட்டது.
பொ.யு. 11-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கல்லாடம் மதுரைச் சொக்கநாதரின் 30 திருவிளையாடல்களைக் கூறுகிறது. பொ.யு. 13-ம் நூற்றாண்டு நூல் பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய பழைய திருவிளையாடல் புராணம் நரி குதிரையானது, குதிரை நரியானது பற்றிய கதைகளைக் கூறுகிறது. எனவே நரி பரியான கதையைக் கூறும் ஆசிரியர் 13-ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர். உமாபதி சிவாசாரியார் 1300-1325 காலப்பகுதியில் வாழ்ந்தவர். இவரைக் குறிப்பிடும் பாடல் திருவாதவூர் புராணத்தில் உள்ளது. எனவே கடவுள் மாமுனிவர் காலம் 14-ம் நூற்றாண்டுக்குப் பிந்தியது. இன்னும் இவை போன்ற பல சான்றுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவர் காலம் 15-ம் நூற்றாண்டு என ஆகிறது." என மு. அருணாசலம் குறிப்பிடுகிறார்
நூல் அமைப்பு
திருவாதவூரர் புராணம் 544 பாடல்களைக் கொண்டது. விநாயகர் வணக்க்ம, கடவுள் வாழ்த்து, வரலாறு, அவையடக்கம் ஆகியவற்ரைத் தொடர்ந்து மாணிக்கவாசகரின் வரலாறு பின்வரும் 7 சருக்கங்களில் பாடப்பட்டுள்ளது.
- மந்திரிச் சருக்கம்-அரிமர்த்தன பாண்டியன் அவையில் அமைச்சராக இருந்த காலத்தைக் கூறும் சருக்கம்
- திருப்பெருந்துறைச் சருக்கம்- திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் சிவனே குருவாகி உபதேசம் செய்ததும், அதைச் சுற்றி நிகழ்ந்தவையும்
- குதிரையிட்ட சருக்கம்-மன்னனுக்கு குதிரை வாங்கியதும், நரியைப் பரியாக்கியதும்
- மண்சுமந்த சருக்கம்- சிவபெருமான் வந்திக்கிழவிக்காக மண்சுமந்தது
- திருவம்பலச் சருக்கம்- தில்லையில் நிகழ்ந்தவை
- புத்தரைவாதில் வென்ற சருக்கம்
- திருவடிபெற்ற சருக்கம்- மாணிக்கவாசகர் இறைவன் திருவடியை அடைந்தது
சைவசித்தாந்தக் கருத்துகள் இதில் அதிகமாகக் காணப்படுகின்றன.
இதன் ஆறாவது சருக்கத்தைச் சைமன் காசிச் செட்டி பொ.யு. 1861-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இப்புராணத்திற்குக் குமாரதேவர் என்பவர் உரை எழுதினார்.
பாடல் நடை
கடவுள் வணக்கம்
பவளமால் வரையி னிலவெறிப் பதுபோற்
பரந்தநீற் றழகுபச் சுடம்பிற்
துவளமா துடனின் றடிய பரமன்
சிற்வனைப் பாரதப் பெரும்போர்
தவளமா மருப்பொன் றொடித்தொரு கரத்திற்
றந்துயர் சிலைப்புறத் தெழுதும்
கவளமா களிற்றின் றிருமுகம் படைத்த
கடவுள் நினைந்துகை தொழுவோம்
மந்திரிச் சருக்கம்
குவலயமங் கையைநீடு கோலஞ்செய் தரும்பொன்னு
நவமணியுங் குவைசெய்து ஈன்குடன்மங் கலகாளிற்
றவமணமுச் திருநீற்றின் றன்மணமுர் தவறாத
இவமணமும் பெறக்கல்விச் செல்விமணம் புணர்வித்தார்
திருப்பெருந்துறை சருக்கம்
வாய்த்தவள மிவ்வகை வயங்குமத னாப்ப
ணேத்தரு தவச்சனைக ளெங்கணு கெருங்க
மீத்திக ழறக்குழை தழைத்துமிளிர் மெய்ம்மை
பூத்தறிஞர் போன்றெழில் பொருக்துமொர் குருந்த
உசாத்துணை
திருவாதவூரர் புராணம்-தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-May-2025, 11:55:34 IST