second review completed

சினிமா சினிமா-தமிழ் சினிமா சுருக்க வரலாறு (2017 நூல்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Corrected errors in article)
Line 77: Line 77:
* சந்திரபாபு  
* சந்திரபாபு  
* எஸ்.எஸ். ராஜேந்திரன்
* எஸ்.எஸ். ராஜேந்திரன்
* எஸ்.ஏ.  அசோகன்
* எஸ்.ஏ. அசோகன்
* ஆர்.எஸ். மனோகர்
* ஆர்.எஸ். மனோகர்
* நாகேஷ்  
* நாகேஷ்  
* முத்துராமன்  
* முத்துராமன்  
* ஜெய்சங்கர்  
* ஜெய்சங்கர்  
* சிவகுமார்  
* சிவகுமார்  
* [[கமல்ஹாசன்]]
* [[கமல்ஹாசன்]]
* ரஜினிகாந்த்  
* ரஜினிகாந்த்  
* விஜயகாந்த்  
* விஜயகாந்த்  
* கவுண்டமணி  
* கவுண்டமணி  
* ராமராஜன்  
* ராமராஜன்  
* விவேக்
* விவேக்
* பிரபு  
* பிரபு  
Line 98: Line 98:
* [[கே.பி. சுந்தராம்பாள்|கே. பி. சுந்தராம்பாள்]]
* [[கே.பி. சுந்தராம்பாள்|கே. பி. சுந்தராம்பாள்]]
* டி. ஆர். ராஜகுமாரி  
* டி. ஆர். ராஜகுமாரி  
* பி. பானுமதி  
* பி. பானுமதி  
* பத்மினி
* பத்மினி
* சாவித்திரி  
* சாவித்திரி  
Line 122: Line 122:
* தஞ்சை ராமையாதாஸ்  
* தஞ்சை ராமையாதாஸ்  
* [[கம்பதாசன்]]  
* [[கம்பதாசன்]]  
* [[கொத்தமங்கலம் சுப்பு]]  
* [[கொத்தமங்கலம் சுப்பு]]  
* [[பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்]]
* [[பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்]]
* [[உடுமலை நாராயண கவி|உடுமலை நாராயணகவி]]
* [[உடுமலை நாராயண கவி|உடுமலை நாராயணகவி]]
Line 133: Line 133:
* ஆலங்குடி சோமு  
* ஆலங்குடி சோமு  
* பஞ்சு அருணாசலம்
* பஞ்சு அருணாசலம்
* [[புலமைப்பித்தன்]]  
* [[புலமைப்பித்தன்]]  
* [[முத்துலிங்கம் (கவிஞர்)|முத்துலிங்கம்]]
* [[முத்துலிங்கம் (கவிஞர்)|முத்துலிங்கம்]]
* [[வைரமுத்து]]  
* [[வைரமுத்து]]  

Revision as of 13:59, 16 June 2024

சினிமா சினிமா - தமிழ் சினிமா சுருக்க வரலாறு நூல், ஸ்ரீ செண்பகா பதிப்பக வெளியீடு

சினிமா சினிமா - தமிழ் சினிமா சுருக்க வரலாறு (2017) தமிழ்த் திரைப்படங்கள், அவற்றின் தொடக்க கால வரலாறு, திரையரங்குகள், நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் பற்றி சுருக்கமாகக் கூறும் நூல். எம்.ஆர். ரகுனாதன் இந்நூலின் ஆசிரியர்.

வெளியீடு

சினிமா சினிமா - தமிழ் சினிமா சுருக்க வரலாறு, தமிழ்த் திரைப்பட உலகின் சுருக்கமான வரலாற்றைக் கூறும் நூல். இந்நூலை ஸ்ரீ செண்பகா பதிப்பகம் 2017-ல் வெளியிட்டது. இதன் ஆசிரியர்: எம்.ஆர். ரகுனாதன்.

நூல் அமைப்பு

சினிமா சினிமா - தமிழ் சினிமா சுருக்க வரலாறு நூல், கீழ்க்காணும் பிரிவுகளில், தலைப்புகளில் கட்டுரைகளை வெளியிட்டது.

  • தமிழ்த் திரைப்பட வரலாறு
  • தமிழ் மொழியில் பேசும் படம்
  • சினிமா முன்னோடிகள்
  • கதை - வசனம் - இயக்கம்
  • நடிகர்கள்
  • நடிகைகள்
  • இசையமைப்பாளர்கள் - பாடகர்கள்
  • திரைப்படப் பாடலாசிரியர்கள்
  • சினிமா செய்திகள்
தமிழ்த் திரைப்பட வரலாறு
தமிழ் மொழியில் பேசும் படம்
சினிமா முன்னோடிகள்
  • நடராஜ முதலியார்
  • சிவகெங்கை நாராயணன்
  • எல்லீஸ் ஆர். டங்கன்
  • கே.சுப்பிரமணியம்
  • மெய்யப்பச் செட்டியார்
  • எஸ்.எஸ்.வாசன்
  • டி.ஆர்.சுந்தரம்
கதை-வசனம்-இயக்கம்
  • கலைஞர்
  • காசிலிங்கம்
  • புட்டண்ணா
  • டி.யோகானந்த்
  • ஏ.பீம்சிங்
  • ஏ.பி.நாகராஜன்.
  • கிருஷ்ணன் பஞ்சு
  • ஸ்ரீதர்
  • கே.எஸ். கோபாலகிருஷ்ணன்
  • கே. சங்கர்
  • ஏ. ஜெகந்நாதன்
  • கே. பாலசந்தர்
  • எஸ்.பி. முத்துராமன்
  • பாரதிராஜா
  • பாக்யராஜ்
  • ராம. நாராயணன்
  • டி. ராஜேந்தர்
  • பாலா
  • ஷங்கர்
  • மணிரத்னம்
  • ஆர். கே. செல்வமணி
  • கலைப்புலி தாணு
நடிகர்கள்
  • எம். கே. தியாகராஜ பாகவதர்
  • பி. யு. சின்னப்பா
  • எம். கே. ராதா
  • டி. ஆர். மகாலிங்கம்
  • டி. ஆர். ராமச்சந்திரன்
  • டி. கே. சண்முகம்
  • எஸ். வி. சகஸ்ரநாமம்
  • டி. எஸ். பாலையா
  • எம்.ஜி.ஆர்.
  • சிவாஜிகணேசன்
  • எம். என். நம்பியார்
  • வி. கே. ராமசாமி
  • என். எஸ். கிருஷ்ணன்
  • எம்.ஆர். ராதா
  • ஜெமினி கணேசன்
  • கே. ஏ. தங்கவேலு
  • சந்திரபாபு
  • எஸ்.எஸ். ராஜேந்திரன்
  • எஸ்.ஏ. அசோகன்
  • ஆர்.எஸ். மனோகர்
  • நாகேஷ்
  • முத்துராமன்
  • ஜெய்சங்கர்
  • சிவகுமார்
  • கமல்ஹாசன்
  • ரஜினிகாந்த்
  • விஜயகாந்த்
  • கவுண்டமணி
  • ராமராஜன்
  • விவேக்
  • பிரபு
  • விஜய்
  • வடிவேலு
நடிகைகள்
இசையமைப்பாளர்கள் - பாடகர்கள்
திரைப்படப் பாடலாசிரியர்கள்
சினிமா செய்திகள்

திரைத்துறை பற்றிய பலவகையான செய்திகளும், நிகழ்வுகளும் கூறப்பட்டுள்ளன.

நூலின் மூலம் அறியவரும் சில செய்திகள்

  • ”பத்தொன்பதாம் நூற்றாண்டில் விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக மக்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் தான் சினிமா. சினிமா படிப்படியாக வளர்ந்து இன்றைய தினம் விஞ்ஞான வளர்ச்சியின் சாதனையை எடுத்துச் செல்லும் கருவியாக விளங்குகின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 1897-ம் ஆண்டு எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் நகரும் படக்காட்சியை திரையிட்டுக் காட்டினார். ‘விக்டோரியா பப்ளிக் ஹால்’ என்ற அரங்கில் 'சினிமாஸ்கோப்' என்று விளம்பரப்படுத்தப்பட்டுத் திரையிடப்பட்ட அக்காட்சி, தமிழ்த்திரையில் பல மாறுதல்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பல நகரும் படக்காட்சிகள் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன. 1900-ம் ஆண்டில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு மவுண்ட் தெருவில் ‘வார்விக் மேஜர்’ என்னும் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. இதன் பெயர் 'எலக்ட்ரிக்' திரையரங்கு. மின்விளக்கு மூலம் ஒளிவீசும் வசதியுடன் இருந்தால் இந்த அரங்கிற்கு அப்பெயர் வழங்கப்பட்டது.
  • சென்னையில் உள்ள கெயிட்டி திரையரங்கம் 1914-ம் ஆண்டு வெங்கையா என்பவரால் கட்டப்பட்டது. இந்தியர் ஒருவரால் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் திரையரங்கம்
  • இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பல நிரந்தரத் திரையரங்குகள் கட்டப்பட்டன. மும்பையில் தயாரிக்கப்பட்ட 'ஹரிச்சந்திரா' போன்ற புராணப்படங்களும் சென்னையில் திரையிடப்பட்டன. இத்திரைப்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்த ஆர்.நடராஜ முதலியார் என்பவர் ‘இந்தியா பிலிம் கம்பெனி’ என்ற நிறுவனத்தை நிறுவித் திரைப்படங்களைச் சென்னையி லேயே தயாரித்து வெளியிட்டார். இவரைத் தொடர்ந்து மேலும் பல தயாரிப்பாளர்கள் சென்னையில் படங்கள் எடுக்க ஆரம்பித்தனர். இதில் முக்கியமானவர் ஏ.நாராயணன். இவர் 'ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்தை ஆரம்பித்துப் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துத் தென்னிந்தியாவின் திரைப்படத் துறையில் முக்கியப் பங்கு வகித்தார். 1939-ம் ஆண்டு தென்னிந்தியத் திரைப்பட வர்த்தகசபை சென்னையில் நிறுவப்பட்டது. இச்சங்கத்தின் முதல் தலைவராக எஸ்.சத்தியமூர்த்தி கடமையாற்றினார்.
  • 1931-ம் ஆண்டில் தமிழில் பேசும் படம் தயாரிக்கும் முதல் முயற்சி மும்பையிலுள்ள ‘சாகர் மூவிடோன்’ என்ற நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ‘குறத்திப்பாட்டும் டான்சும்’ என்ற நான்கு ரீல்கள் கொண்ட குறும்படமே தமிழில் முதன்முதலில் வெளிவந்த பேசும் படம். அதே ஆண்டு எச்.எம்.ரெட்டி இயக்கத்தில் முழுநீளத் தமிழ்ப்படமான 'காளிதாஸ்' வெளிவந்தது.
  • 1934-ம் ஆண்டில் தென்னிந்தியாவில் முதல் பேசும்படத் தயாரிப்பு நிறுவனம் நிறுவப்பட்டது. ஒரே காட்சியில் ஒருவரே இரட்டை வேடங்களில் தோன்றும் நவீனத் தொழில்நுட்பம் முதல் முதலாகக் கையாளப்பட்டது. 'துருவன்'(1935) திரைப்படத்தில் நடிகை சிவபாக்கியம் ராணியாகவும், கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் தோன்றியது குறிப்பிடத்தக்கது.
  • பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கித் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் தமிழ்ப்படங்கள் புராணக்கதைகளை மையமாக வைத்தே வெளிவந்தன. அதிலும் நிறுவன நாடகங்கள் மூலம் பிரபலமாகி இருந்த இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட கதைகளே வெளிவந்தன. 1935-ம் ஆண்டில் மூன்று சமூகக்கதைகள் வெளிவந்தன. ‘கௌசல்யா’ என்ற திகில் படமும், வடுவூர் துரைசாமி அய்யங்காரின் நாவலான ‘மேனகா’, ’டம்பாச்சாரி’ போன்றவற்றின் திரை வடிவங்களும் தயாரிக்கப்பட்டன.
  • 1937-ம் ஆண்டில் வெளிவந்த ‘சிந்தாமணி’ ஒரே திரையரங்கில் ஓர் ஆண்டுக்கு மேல் ஓடிய முதல் தமிழ்ப்படம் என்ற புதிய சாதனை படைத்தது.

மதிப்பீடு

சினிமா சினிமா - தமிழ் சினிமா சுருக்க வரலாறு நூல், தமிழ்த் திரையுலகிற்குப் பங்களித்த நடிக, நடிகையர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள் போன்றோரின் சுருக்கமான வரலாறைக் கூறுகிறது. தமிழ்த் திரையுலகம் பற்றிய குறிப்பிடத்தகுந்த ஓர் அறிமுக நூலாக, சினிமா சினிமா - தமிழ் சினிமா சுருக்க வரலாறு நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • சினிமா சினிமா - தமிழ் சினிமா சுருக்க வரலாறு, எம்.ஆர். ரகுனாதன், ஸ்ரீ செண்பகா பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு: 2017


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.