under review

பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை

From Tamil Wiki

பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை (1884 - 1962) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

மரகதம் பிள்ளை தஞ்சாவூர் மாவட்டம் பந்தணைநல்லூர் என்ற ஊரில் 1884 -ம் ஆண்டில் கமலத்தம்மாள் என்பவருக்குப் பிறந்தார். பாபநாசம் பெரிய பாச்சாத் தவில்காரரிடம் தவில் கலையைக் கற்றார்.

தனிவாழ்க்கை

மரகதம் பிள்ளைக்கு சகோதர, சகோதரிகள் கிடையாது.

தன் குருவான பாச்சாத் தவில்காரரின் மகள் பங்கஜவல்லியம்மாளை மணந்தார். இவர்களுக்கு பந்தணைநல்லூர் ரத்தினம் பிள்ளை (தவில்), கோவிந்தராஜ பிள்ளை, செல்லம்மாள் (கணவர்: திருக்கடையூர் சின்னையாத் தவில்காரர்) ஆகியோர் பிறந்தனர்.

இசைப்பணி

மரகதம் பிள்ளை லயக்கணக்குகளுக்குப் புகழ் பெற்றவர்.

உடன் வாசித்த கலைஞர்கள்

பந்தணைநல்லூர் மரகதம் பின்வரும் கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மறைவு

பந்தணைநல்லூர் மரகதம் பிள்ளை 1962-ம் ஆண்டு காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page