under review

ஜி.குப்புசாமி

From Tamil Wiki
ஜி.குப்புசாமி

ஜி.குப்புசாமி (ஆகஸ்ட் 4, 1962) இலக்கிய மொழிபெயர்ப்பாளர்.ஆங்கிலம் வழியாகத் தமிழில் ஐரோப்பிய இலக்கியங்களையும் இந்திய-ஆங்கில எழுத்துக்களையும் மொழியாக்கம் செய்பவர். ஓரான் பாமுக், அருந்ததி ராய் படைப்புகளின் மொழியாக்கங்கள் புகழ்பெற்றவை

பிறப்பு, கல்வி

ஜி.குப்புசாமி ஆரணியில், ஆகஸ்ட் 4, 1962 அன்று எம்.கணேசன் - விஜயலட்சுமி இணையருக்கு பிறந்தார். பள்ளிப்படிப்பு ஆரணியில் நிறைவுற்றபின் கல்லூரி படிப்பை வேலூரிலும் சென்னையிலும் முடித்தார்

தனிவாழ்க்கை

ஜி.குப்புசாமி 2005-ம் ஆண்டு நர்மதாவை மணந்தார். நர்மதா குப்புசாமி இலக்கிய விமர்சனங்கள் எழுதுபவர். பிரசன்ன வெங்கடேஷ் என ஒரு மகன். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

இலக்கியவாழ்க்கை

ஜி.குப்புசாமி மொழியாக்கம் செய்த முதல் படைப்பு குஜராத் மதக் கலவரம் பற்றிய அருந்ததி ராயின் கட்டுரை, மே 2002-ல் பிரசுரமாகியது. தன் மொழியில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள்: ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் என ஜி.குப்புசாமி குறிப்பிடுகிறார்

விருதுகள்

  • 2009 - Literature Ireland Bursary.
  • 2012 - SRM பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் விருது
  • 2012 - கனடா நாட்டின் டொராண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் விருது
  • 2018 - தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது

நூல்கள்

மொழியாக்க நாவல்கள்
  • சின்ன விஷயங்களின் கடவுள்- அருந்ததி ராய்
  • பெருமகிழ்வின் பேரவை- அருந்ததி ராய்
  • ஆஸாதி- அருந்ததி ராய்
  • என் பெயர் சிவப்பு-ஓரான் பாமுக்
  • பனி-ஓரான் பாமுக்
  • இஸ்தான்புல்-ஓரான் பாமுக்
  • வெண்ணிறக் கோட்டை-ஓரான் பாமுக்
  • கடல்- ஜான் பான்வில்
  • உடைந்த குடை -தாக் ஸூல்ஸ்தாத்
மொழியாக்கச் சிறுகதைத் தொகுப்புகள்
  • அயல் மகரந்தச் சேர்க்கை
  • பூனைகள் நகரம்
  • அந்திராகம்
  • கனவுகளுடன் பகடையாடுபவர்
  • நாளை வெகுதூரம்
  • அயல்

உசாத்துணை


✅Finalised Page