Disambiguation

கலிப்பா (பெயர் பட்டியல்)

From Tamil Wiki

கலிப்பா என்ற பெயருக்கு தொடர்புள்ள கட்டுரைகள்:-


  • கலிப்பா: தமிழ் யாப்பிலக்கணம் கூறும் நால்வகைப் பாக்களுள் ஒன்று கலிப்பா. அளவடி எனப்படும் நான்கு சீர்களைக் கொண்டது
  • கலிப்பா உறுப்புகள்: கலிப்பா ஆறு உறுப்புகளை உடையது. தரவு, தாழிசை என்பன முதல் உறுப்புகள். அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் ஆகியன துணை உறுப்புகள்
  • ஒத்தாழிசைக் கலிப்பா: கலிப்பாவின் பொது இலக்கணம் பெற்று தாழிசைகள் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று முறை அடுக்கி வருவது ‘ஒத்தாழிசை’ எனப்படும்
  • அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா: அம்போதரங்க உறுப்பு அமைந்த ஒத்தாழிசைக் கலிப்பா அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும். அம்போதரங்கம் என்பதற்கு நீரின் அலை என்று பொருள்
  • கொச்சகக் கலிப்பா: கலிப்பாவின் உறுப்புக்களில் சில அமைந்தும், சில முறை மாறியும், மிகுந்தும், குறைந்தும் வரும் கலிச் செய்யுள்கள், கொச்சகக் கலிப்பா எனப்படும்
  • சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா: சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா (சில் + தாழிசை = சிஃறாழிசை) தரவு, தாழிசை, தனிச்சொல், கரிதகம் என்னும் உறுப்புகளைப் பெற்று வரும், தரவை அடுத்தும் தாழிசைகளுக்கு இடையிலும் தனிச்சொல் பெற்றுவரும், மூன்று தாழிசைகள் வரும் போது, ஒவ்வொன்றுக்கும் இடையே ஒரு தனிச்சொல் பெற்று வரும் கலிப்பாக்கள், சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்
  • தரவிணைக் கொச்சகக் கலிப்பா: தரவிணை என்றால் இரண்டு தரவுகள் என்று பொருள். இரண்டு தரவுகள் பெற்று இடையே தனிச்சொல் பெற்றும், பெறாமலும், சுரிதகம் பெற்றும் பெறாமலும் வருவதும் தரவிணைக் கொச்சகக் கலிப்பா
  • தரவுக் கொச்சகக் கலிப்பா: ஒரு தரவு மட்டும் வந்தும் அல்லது தரவோடு தனிச் சொல்லும், சுரிதகமும் பெற்று முடிவது தரவு கொச்சகக் கலிப்பா
  • நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா: கலிப்பாவின் அடிப்படையான உறுப்புகளாகிய தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் ஆகிய நான்கு உறுப்புகளை மட்டும் கொண்டு அமையும் கலிப்பா, நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும்
  • மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா: கலிப்பாவின் உறுப்புகள் நிற்கும் முறையிலிருந்து மாறியும் மயங்கியும் மிகுந்தும் குறைந்தும் வருவது மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனப்படும்
  • வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா: அம்போதரங்க உறுப்புடன் அராகம் என்னும் உறுப்பும் சேர்ந்து வரும் கலிப்பா, வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா எனப்படும்
  • வெண் கலிப்பா: கலிப்பாவின் உறுப்புக்களாகிய தரவு ஒன்றை மட்டுமே பெற்று, வெண்பா போல் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டால் முடிவது வெண்கலிப்பா


இப்பக்கம் ஒரே போன்ற பெயரில் வழங்கக்கூடிய கட்டுரைத் தலைப்புகளை பட்டியலிடுகிறது. This disambiguation page lists multiple articles associated with the title.