under review

தரவிணைக் கொச்சகக் கலிப்பா

From Tamil Wiki

தரவிணை என்றால் இரண்டு தரவுகள் என்று பொருள். இரண்டு தரவுகள் பெற்று இடையே தனிச்சொல் பெற்றும், பெறாமலும், சுரிதகம் பெற்றும் பெறாமலும் வருவதும் தரவிணைக் கொச்சகக் கலிப்பா.

தரவிணைக் கொச்சகக் கலிப்பாவின் இலக்கணம்

  • கலிப்பாவின் பொது இலக்கணம் பெற்று வரும்.
  • இரண்டு தரவுகள் பெற்று இடையே தனிச்சொல் பெற்று வரும்.
  • இரண்டு தரவுகள் பெற்று இடையே தனிச்சொல் பெறாமலும் வரும்.
  • சுரிதகம் பெற்றும் பெறாமலும் வரும்.
  • தரவிணைக் கொச்சகக் கலிப்பாவின் அடிச் சிற்றெல்லை மூன்று.

உதாரணப் பாடல்

(தரவு-1)

வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய
கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்கும் காவலனாம்
கொடிபடு மணிமாடக் கூடலார் கோமானே


(தனிச்சொல்-1)

எனவாங்கு


(தரவு-2)

துணைவளைத்தோள் இவள்மெலியத் தொன்னலம் துறப்புண்டாங்
கிணைமலர்த்தார் அருளுமேல் இதுவிதற்கோர் மாறென்று
துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ


(தனிச்சொல்-2)

அதனால்


(சுரிதகம்)

செவ்வாய்ப் பேதை இவள்திறத்து
தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே

- மேற்கண்ட பாடலில் இரண்டு தரவுகளுடன் இரண்டு தனிச்சொல்லும், சுரிதகமும் இடம்பெற்றுள்ளதால் இது தரவிணைக் கொச்சகக் கலிப்பா.

உசாத்துணை


✅Finalised Page