under review

ஷேக் பெத்த மௌலா ஸாஹிப்

From Tamil Wiki
மௌலா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: மௌலா (பெயர் பட்டியல்)
சாகிபு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சாகிபு (பெயர் பட்டியல்)
ஷேக் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஷேக் (பெயர் பட்டியல்)

ஷேக் பெத்த மௌலா ஸாஹிப் (1890 - 1948) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

இன்றைய ஆந்திர மாநிலத்தில் சிலகலூரிப்பேட்டை என்னும் ஊரில் 1890-ம் ஆண்டு ஷேக் காலிப்ஸாஹிப் என்ற நாதஸ்வரக் கலைஞருக்கு பெத்த மௌலா ஸாஹிப் பிறந்தார்.

ஷேக் பெத்த மௌலா ஸாஹிப் முதலில் தன் தந்தையிடமே நாதஸ்வரம் கற்கத் தொடங்கினார். ராஜநால வெங்கடப்பைய சாஸ்திரி என்பவரிடம் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார். சில காலம் கழித்து மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளையிடம் நாதஸ்வரம் கற்றார். ஆறாண்டுகள் பயிற்சிக்குப் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பினார்.

தனிவாழ்க்கை

ஷேக் பெத்த மௌலா ஸாஹிப் ஷேக் குதாபீ என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஷேக் நஸர்தீஸாஹிப், ஆதம் ஸாஹிப் என இரு மகன்கள் பிறந்தனர்.

இசைப்பணி

ஷேக் பெத்த மௌலா ஸாஹிப் ஆந்திரத்தின் பல ஊர்களிலும் கச்சேரி நிகழ்த்தி புகழ்பெற்றவர். இவருக்கு சிலகலூரிப்பேட்டை மக்கள் தங்க நாதஸ்வரம் பரிசளித்தனர். பெத்த மௌலா ஸாஹிப் இஸ்லாமியராக இருந்தாலும் வேற்றுமை உணர்வு இன்றி இசையில் ஈடுபட்ட பல கலைஞர்களில் ஒருவர்.

பெத்த மௌலா ஸாஹிப் கல்லிடைக்குறிச்சி ஸ்ரீ பாலசரஸ்வதி ஸ்வாமிகளின் பக்தராக இருந்தவர்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

ஷேக் பெத்த மௌலா ஸாஹிப்புடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

ஷேக் பெத்த மௌலா ஸாஹிப் 1948-ம் ஆண்டு மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Aug-2023, 11:02:30 IST