under review

குண்டுபல்லி குரவய்யா

From Tamil Wiki

குண்டுபல்லி குரவய்யா (1897 - 1951) ஒரு தவில் கலைஞர்.

இளமை, கல்வி

இன்றைய ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் சிலகலூரிப்பேட்டை தாலுகாவில் புருஷோத்தமப் பட்டணம் என்னும் ஊரில் 1897-ம் ஆண்டு குண்டுபல்லி வீராஸ்வாமி - கோடம்மா தம்பதிக்கு குரவய்யா பிறந்தார். குரவய்யா தன் தந்தை குண்டுபல்லி வீராஸ்வாமியிடமே தவில் கற்கத் தொடங்கினார். பின்னர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை முனுஸ்வாமி என்பவரிடம் தவில் கலையில் மேற்பயிற்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

குண்டுபல்லி குரவய்யாவின் மனைவி பெயர் தெரியவில்லை. குரவய்யாவுக்கு ஐந்து மகன்கள் இருந்தனர்.

இசைப்பணி

குண்டுபல்லி குரவய்யா ஆந்திராவில் புகழ் பெற்ற கலைஞராக இருந்தவர். குரவய்யா பலருக்கு தவில் மற்றும் மிருதங்கம் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

மாணவர்கள்

குண்டுபல்லி குரவய்யாவிடம் தவில் கற்ற மாணவர்களில் முக்கியமானவர்கள்:

  • முட்லூரு திருப்பதி ஸ்வாமி
  • முட்லூரு கோடலிங்கம்
  • மார்ட்டூர் நாகபூஷணம்
  • கோடி ரெட்டிப்பாலெம் ஹனுமய்ய

மிருதங்கம் கற்ற மாணவர்களில் முக்கியமானவர்கள்:

  • திருப்பதி ராமானுஜஸூரி
  • ஜொன்னல கட்ட ஸிம்ஹாசல சாஸ்திரி
  • புச்சா ஸுப்பராவ்
உடன் வாசித்த கலைஞர்கள்

குண்டுபல்லி குரவய்யா கீழே தரப்பட்டுள்ள கலைஞர்களுக்குத் தவில் வாசித்திருக்கிறார்:

மறைவு

குண்டுபல்லி குரவய்யா 1951-ம் ஆண்டு தெனாலியில் காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Dec-2022, 22:52:01 IST